நம்ம இதயம் முரளி முதல்முறை ஹீராவ
பாக்கும்போதே காதலை சொல்லி அவங்களும் அதை
ஏற்று இருந்தா என்ன நடந்திருக்கும். அடுத்த 5 வருசத்துல அவங்க மெடிக்கல் முடிச்சி இருப்பாங்க. இல்ல
அவங்க அக்காவை போலவே இவங்களும் தற்கொலை பண்ணிருப்பாங்காளா? அதேபோல இந்த படத்தின் முக்கிய
பாத்திரமான நாயகிக்கும் ஒரு காதலன் இருக்கான். தான் இப்படி ஆகணும்ங்கற ஆசையோட
வளரும் ஒரு சராசரி பெண். தன் காதலால, இல்லல்ல.. காதலனால, அதுமில்ல.. என்றோ தன்னை
காதலித்தவனால். தன்னின் அனைத்தும் இழந்து நிற்கும் கதை.
இவங்களை புரியாத புதிர் ரகுவரன்,
கல்கி பிரகாஷ்ராஜ் கூடலாம் ஒப்பிடவே முடியாது. ஒருமாறி தாழ்வு மனப்பான்மைல ரொம்ப
உயர்வுல இருக்கறவங்க. அவங்களால தனக்கு சொந்தம்னு நினைக்கும் காதலன்/ காதலி
அவங்களுக்கு கீழ இருக்கும் வரைக்கும்தான் இந்த ரகுவரன், பிரகாஷ்ராஜ்ங்கிற அளவிலே இருப்பாங்க.
அவர்களை தாண்டி, அவர்களின் துணையின்றி அடுத்த நிலைக்கோ போககூட வேணாம். அதுக்கான
ஒரு முயற்சியில் இருந்தாலே அந்த வில்லன்களின் நிலையை சாதாரணமாக கடந்து அடுத்த
கட்டத்திற்கு செல்லும் சராசரியில் பெரும்பான்மை ஆண்மகன்கள்.
தன்னுடைய 14 வயதில் மொத்த பள்ளியும் இவளை ஏளனமாக பார்க்ககூடிய
சூழல். அந்த சந்தர்பத்தில் அவன் ஒருவன்தான் தனக்கு ஆறுதலாக இருந்ததாக, அவனை பற்றிய
பேச்சு வருகையில் தன்தந்தையிடம் சொல்கிறாள். அதாவது அவன் எப்பொழுதும் இவனின்
ஆறுதலில் மட்டுமே அவள் நிம்மதிகொள்பவளாகவே இருக்கவேண்டும்.
அதாலே இவள் கல்லூரி ஆண்டுவிழாவில்
நடனம் ஆடும்போதோ, அவளின் லட்சியமான PILOT TRAINING க்காக டெல்லி செல்லும் போதோ. அதை
அவனால் இந்த வகையிலும் ஏற்றுகொள்ளவோ, ஏதேனும் சால்ஜாப்பு காரணங்களை சொல்லி தன்மனதை
சாந்தபடுத்தி கொள்ளவோ முடிவதில்லை. அதாலே அவளை ஆசிட் வீசி உருகுலைத்த பின்னும்.
அதிலிருந்து அவள் மீண்டு தன்னை அடுத்த கட்டத்தில் நிலைநிறுத்தி கொண்ட சூழலில்.
மீண்டும் அதை கெடுத்து குட்டிசுவராக்குவான். தொடக்கம் முதல் சாதாரணமாக இந்த படத்தை
பார்த்துவந்தாலே, இவனின் ஒவ்வொரு செய்கையும் துவக்கம் முதல் நாம் சராசியாக கடந்து
செல்லும் நிலையிலே இருக்கும்.
காரணம் இன்றும் நம்மிடையே
இப்படியான நபர்கள் சகஜமாகவே இருந்துகொண்டே இருப்பதுதான். இவன் கொஞ்சம் கட்டுப்பாடு
இழந்து ஆசிட் வீச்சுவரை சென்றதால் குற்றவாளி என எளிதாக அடையாளபடுத்திட்டோம். அந்த
சூழ்நிலையில் கொஞ்சம் கட்டுபாட்டோட இருந்ததால நம்மில் யாரும் எளிதாக அடையாளபடுத்தபடாம
பொதுஜனங்களோட இருந்து அவனை குற்றம் சொல்லிட்டு இருக்கோம் அவ்வளவே. இந்த கதையோட
போக்கை ஒவ்வொரு முறை மாற்றி செல்வது இவனோட பாத்திரம் மட்டுமே. அதாலே அந்த ஒரு பாத்திரதன்மை
குறித்தே சொல்ல வேண்டியதாயிற்று.
இந்த கதை வலுவா துவக்கம்முதல்
சொல்லவந்த இரண்டு விஷயங்கள். அந்த பொண்ணு pilot ஆக ஆசைபட்றதும். அது அவளோட காதலனால
எப்படி சீரழிஞ்சி போகுது அப்படிங்கறது மட்டும்தான். இந்த ரெண்டு விசயத்தையும் அதுக்கான
காரணங்களோட ரொம்ப தெளிவா கதையோட போக்குலயே சொன்னதுதான். இந்தபடம் முழுசா மொத்த
பேருக்கும் பிடிச்சிபோக ரொம்ப பெரிய காரணம். அடுத்து இந்த கதைக்கு இவங்க தேர்ந்தெடுத்த
பாத்திரங்கள். அவங்க ஒரே காட்சில வரவங்ககூட கதையை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறத
மட்டும்தான் பண்ணிருக்காங்க.
குறிப்பா மொத்த கதைக்கும் அச்சாணி
நாயகி பாத்திரமேற்ற பார்வதி. குட்டி குட்டி சீன்ல வசனமே இல்லாம அவங்க மனநிலையை வெறும்
கண்ணசைவில், முகபாவத்தில், உடல்மொழியில் போற போக்குல சொல்லிட்டே போறது. அடுத்து
அந்தமேக்கப் அது அவங்களுக்கு பொருத்தமா இருக்குனு சொல்றதுக்கு கல்யாணம், நிச்சயதார்த்தம்
இல்லை. அது கொஞ்சம் அவங்க முகத்துக்கு துருத்திகிட்டு இருக்கணும். பார்க்கும்
அனைவரும் கொஞ்சமா முகம்சுழிக்கதான் செய்யணும். ஆனா அகோரமா இங்கயும் தெரிஞ்சிடவே
கூடாது. அதை படத்தோட கடைசி ஷாட்வரை ரொம்ப கவனமா பாத்து பாத்து பண்ணிருக்காங்க. பார்வதிக்கு இது இன்னுமொரு படம்னு சொன்னா
மட்டுமே போதும். புதுசா அவங்களை பாராட்ட என்ன இருக்கு.
Good review. Will watch soon 👍
ReplyDeleteThanks 😍😍 dnt miss
DeleteGood review but Tovino Thomas pathi sollalaye
ReplyDeleteஎங்கத்த சொல்றது. நம்ம கூடுமானவரை எதுமே சொல்லகூடாது. அதான் என் பாணி. நம்ம பதிவு படிக்கறவங்க அந்த படத்தை பாக்க வைக்கனும்.
DeleteGood review Brother. En friends silar suggest pannanga indha padatha but enaku interest illa.
ReplyDeleteUnga review padichadhuku apram download potan👍🤘
மிஸ் பண்ணாம பத்துடுங்க ரஞ்சித் 😍😍
Deleteநல்ல விமர்சனம்...
ReplyDeleteKarthik thanks 😍😍
Delete