Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, April 6, 2020

HIT (THE FIRST CASE) 2020 – TELUGU – GOOD




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 155.

இந்த 10 வருடங்களில் ஹிட் அடித்த கிரைம், திர்ல்லர், இன்வெஸ்டிகேஷன் சப்ஜெக்ட்கள் பெரும்பாலுமே பெண்களை சுற்றியே நகர்கிறதே. பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவது, பெண்களை துன்புறுத்தி கொலை செய்வது, பெண்களை பலவகைகளில் சீரழித்து கொலை செய்வது. இப்படியான வகையறா கதைகளே அனைத்து மொழிகளிலும் ஹிட்டடித்து வருகிறது. முன்பெல்லாம் சின்ன பட்ஜெட் கதை என்றாலே சில்லு கருப்பட்டி போன்ற பீல் குட் கதைகளைதான் தேர்ந்தெடுத்து கொண்டிருந்தனர். இப்பொழுது புதிய நடிகர்களை கொண்டு பண்ணும் சின்ன படங்களும் கூட இந்த வகைகளிலே வருகிறது. போன தலைமுறையில் பலரும் முகம்சுளித்து வந்த இந்த கதைகள். இந்த தலைமுறையில் அனைவராலும் பெரும் வரவேற்ப்பை பெற என்ன காரணம்?


நல்ல குட் லுக்கிங் க்ரைம் இன்ஸ்பெக்டர். அதாலயே சீருடை, ஹேர்கட்டிங் ஏதுமில்லாமல் நல்ல தாடியுடன் வளம் வருகிறார். தினம் கொடூர மரணங்கள். ரத்தம், கொலையாளிகளிடம் விசாரணை என பெரும் மனஅழுத்தத்திற்க்கு ஆளாகி, கவுன்சிலிங் மூலம் ஆறுமாத விடுப்பில் சொந்த ஊருக்கு ஓய்வுக்கு செல்கிறார். இதற்கிடையில் அவரது காதலி கடத்தபடுகிறார். அதலால் மீண்டும் பணிக்கு திரும்புகிறார். அப்படி அவர் மீண்டும் பணிக்கு திரும்புவதுதான் இந்த படத்தின் திருப்புமுனை காட்சியே.


அப்படியெனில் அவர் விடுப்பில் செல்வதற்கு முன் இவரின் திறனை வெளிபடுத்தும்படியான ஒன்றிரண்டு காட்சிகள் வேண்டுமல்லவா? அல்லது இவருக்கும் காதலிக்கும் இடையேயான காதலை முன்னிலைபடுத்தும் காட்சிகள் வேண்டும் அல்லவா? அப்படி இருவேறு கொலைகளை பற்றிய விசராணை காட்சிகள் கதையில் உள்ளது. அவை மிக சாதாரணமாக தோன்றினாலும் நம்ம இந்த சின்ன விஷியத்தை யோசிக்காமல் விட்டு விட்டோமென்று நினைக்கும்படி ஒரு காட்சியும். இதெல்லாம் ரொம்ப பெரிய ஜீனியஸ்களுக்கு மட்டுமே தோன்றும்னு சொல்லும் படியா ஒரு காட்சி. அந்த ரெண்டு காட்சிகளுமே அட்டகாசம்.
இப்படியான காட்சிகள் முன்பே இருந்தால்தான் அவர் மீண்டும் பணிக்கு திரும்பும் அந்த காட்சியில் நாம் நிமிர்ந்து அமர முடியும். இரண்டு மணிநேர படத்தில் சரியாக முப்பது நிமிடத்தில் இந்த காட்சி வரும். அதாவது அடுத்த ஒன்றரை மணிநேர படம் பெரும் பரபரப்பில் இருக்க போகிறது என நம்மை உணரசெய்யும் படி. முதல் அரைமணிநேரத்தில் எந்த பிசிறும் இல்லாமல் அத்தனை விஷயங்களும் இந்த கதையில் இருந்ததோ.. அதே அளவான விறுவிறுப்பை கிட்டத்தட்ட கடைசிவரை இந்த கதையில் கொண்டு சென்று முடிந்தது. இப்படத்திற்கான மிகபெரும் பிளஸ். இதுபோன்ற கதைகளில் சின்ன சின்ன பாத்திரங்கள் அவர்களின் பங்களிப்பு.. அந்தந்த காட்சிகளில் அவர்களுக்கான முக்கியதுவம். அவையும் இந்த கதையை மேலும் விறுவிறுப்பாக்க ஒத்துழைத்து உள்ளது.


இந்த வகையறா கதைகளில் அப்படி ஒரே கடத்தலில் யாரென்று தெரியாத அந்த மர்ம ஆசாமியின் மேல் நமக்கு பெரிய ஈடுபாடு வராதல்லவா. அதற்காக ஒரு கிளைகதையாக மற்றொரு பெண் கடத்தப்படும் காட்சி வரும். அதன் மூலமே ஹீரோவின் காதலியும் கடத்தடுவதாக. திரைகதையில் இந்தளவு அனைத்தும் யோசித்து செய்தவர்கள். கிளைமாக்ஸ் இறுதி நிமிடத்திற்கு முன்புவரை அனைத்து சமாச்சாரங்களுமே திருப்திபடுத்தும் வகையறாவே. தலைப்பில் THE FIRST CASE என வரும் போதே நம்மால் யூகிக்க முடியும். இதன் தொடர்ச்சி அடுத்தடுத்த பாகங்கள் வரும் என்பதை. அடுத்த பாகத்தையும் நிச்சயம் பார்க்கலாம் என்ற வகையிலே இந்த படமும் உள்ளது. 

3 comments:

  1. நல்ல விறு விறுப்பான படமா இருக்கும் போலாம்.. இன்று பாக்க போகிறேன் அண்ணா 🙏

    ReplyDelete

Search This Blog