பார்த்ததில் மிகவும் ரசித்தது: 162.
நமது பெரும்பான்மையான கதை தேர்வுகள் க்ரைம், ஆக்க்ஷன்
சுற்றியே இருப்பதால், இந்த படம் எளிதில் நம்மை இலகுவாக்கும். HOTSTARல் கிடைக்கிறது.
தவறாமல் பார்க்க முயற்சிக்கவும்.
சொல்லவரும் கதைக்குள் துவக்கத்திலே
நுழைந்து அங்கிருந்து அந்த கதையை பரபரபாக்குவது ஒருவகை. தான் சொல்லவரும் கதைக்கான
காராணத்தை முதலில் அழுத்தமாக பதித்து, அதன்பின் நிகழும் சம்பவங்களை நெகிழ்ச்சியாக
சொல்வதும் ஒருவகை. முதல்வகையில் நிச்சயம் பரபரப்பு இருந்தாலும் அந்த அழுத்தமோ
அல்லது நெகிழ்ச்சியோ ஏதோ ஒன்றில் முழுமை இருக்காது. ஆனால் அந்த பரபர திரைக்கதையால்,
இந்த கதைக்கு இவை தேவையில்லை என நமக்கும் தோன்ற செய்யும்.
ஆனால் இந்த இரண்டாம் வகை கதையில்
அந்த முழுமையை நாம் முழுக்க உணரசெய்வதும். குறிப்பிட்ட அந்த பாத்திரங்களுடன் நம்மை
ஒன்றசெய்து, அவர்களின் நெகிழ்ச்சியான தருணங்களில் நமக்கு முழுமையை உணரசெய்வதும்.
இந்தபடம் இரண்டாம் வகையை சார்ந்தது.
நாயகனின் சிறு வயதிலிருந்தே கதை
துவங்குகிறது. அவன் துவக்கம் முதலே எந்த முடிவையும் தானே எடுப்பதில்லை. அதில்
அவனுக்கு அன்றில் இருந்தே பெரும் குழப்பங்கள் உண்டு. திருமணமும் முடிந்து ஒரு
மகளுக்கு பின் மனைவியும் தவறிட்றாங்க. இந்த நிலையில் மகள், தந்தையிடம் தன்
பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு லண்டன் பிரபல
பல்கலைகழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தான் நிச்சயம் நல்ல
மதிப்பெண்களுடன் லண்டன் செல்லபோவதாக கூறுகிறாள்.
சராசரி மாணவியான அவள். அதற்காக
கடினமாக படிக்க துவங்கி அதற்கான தகுதியும் பெறுகிறாள். அதில் நாயகன் செய்யும்
சிறுகுழப்பத்தில் அந்த வாய்ப்பு அவர் மகளுக்கு கிடைக்காமல் போகிறது. 2.30 மணிநேர கதையில் இந்த காட்சிகள் 40-50 நிமிடங்கள் வரும். இதற்கு பின்னே கதையின் மிகமுக்கிய தருணங்கள். அதாவது
துவக்கத்தில் கூறியது போல், கதைக்கான கருவை அழுத்தமான காட்சிகளின் மூலம் பதித்து
அங்கிருந்து பின் நிகழும் சம்பவங்கள் என செல்லும் முறை.
ஆனால் இந்த கதையில் ஆரம்ப 40-50 நிமிடங்கள் எந்த அழுத்தமான
நிகழ்வுகளும் இல்லாமல் கலகலப்பாக மட்டுமே நகரும். ஆனால் அதன்பின் கதையில் நிகழும்
பெரும்பாலான அழுத்தமான காட்சிகளுக்கும் முன்னுரை இந்த ஆரம்ப கலகல பகுதியில்
இருந்தே எடுக்கபட்டிருக்கும். குறிப்பாக தனது தவறால் மகளின் கனவான லண்டன் சென்று படிப்பது
இயலாததாகிறது. தனது முழுசெலவில் படிக்கவைப்பதாக மகளிடம் சொல்லவேண்டும் இது சுட்ச்வேஷன்.
கதையின் துவக்கத்தில் ஒரே ஷாட் மட்டுமே அவரின் மனைவி வருவார்.
அதில் ஒருசில வரி வசனங்கள் மட்டுமே
இருவருக்கும் இருக்கும். அதை இந்த இடத்தில் சொல்லி தன்மகளை தேற்றும்போதுதான்
துவக்கத்தில் அந்த ஷாட் அவசியம் நமக்கு புரியவரும். ரொம்பவே எமோஷனலான சீன் அது.
படம் முழுக்க இப்படியான நிறைய அழுத்தமான காட்சிகள். ரசிக்கவைக்கும்படியான
நகைச்சுவை கதை முழுக்கவே. அதிலும் லண்டன் இமிக்ரேஷன் பகுதியும், அதை தொடர்ந்த
இடைவேளை காட்சியும். அதிலும் அங்குபோய் மகள் வெற்றியுடன் திரும்புவதாக வழக்கமாக படத்தை
முடிக்காமல். இரண்டாம் பாதி முழுக்க அங்கு (LONDON) உள்ள சிரமங்களையும் கலகலப்பாக
அங்கிருந்தே சொன்னது நச்.
Nice...
ReplyDelete😍😍😍😍
Delete