Pixar, Walt Disney, Dream Works போன்ற பிரபல நிறுவனங்களின் பரவலாக அனைவராலும் அறியப்பட்ட அனிமேஷன்
படங்களாக இல்லாமல். அதேபோல் தொழில்நுட்பத்தில் சிறந்த அனிமேஷன் படங்களை தேடியதில்
சட்டென வசீகரித்த அட்டகாச ப்ரெஞ்ச் திரைப்படம் இது.
முதல் ஷாட் ஒரு மலைவாசதலத்தில்
கதிரவனின் வெப்பம் முழுதும் ஆட்கொள்ளாத ரம்மியமான சூழலில் ஒரு தம்பதியர்
ஓய்வெடுத்து கொண்டிருக்கும் காட்சி. அப்பெண்ணிற்கு சட்டென பிரசவவலி ஏற்பட.
அவர்களின் உணவு பொருட்கள், பழங்கள், தின்பண்டங்கள் வரை அனைத்தையும் அங்கேயே விட்டு
அவர்கள் வாகனம் கிளம்புகிறது.
ஒன்றரை மணிநேர திரைப்படத்தில் இந்த
காட்சியானது ஒரு மூன்று நிமிடங்கள் (டைட்டில் கார்டும் சேர்த்து) இருக்கும். அந்த
நிமிடம் வரை எந்தவித சிறு ஒலியும், அதாவது பறவைகளின் கிரீச்சிடல் கூட இல்லாமல்
இருந்த பேரமைதி சூழலை கிழித்துகொண்டு நிறைய வாகனங்கள் செல்வதை போன்ற பெரும்சப்தம்.
ஆனால் நிமிடங்களில் நாம் உணரமுடியும் அவை அங்கிருக்கும் சிறுபூச்சி, வண்டுகள்
மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற சிறு பறவை இனங்களின் ஒலியென. கதை இங்கிருந்து நம்மை அவர்களின்
உலகிற்குள் கூட்டிசென்றிடும். அவ்வழியே உணவு சேகரிக்க வரும் எறும்புகுழு, புதிதாக
ஏதோ நறுமணம் கவர. அந்த தம்பதியர் விட்டுசென்ற தின்பண்டங்கள் இருக்கும் இடம்தேடி
வருகிறது. ஜாக்பாட் அடித்ததை போல அவர்களுக்கு கிடைப்பது ஒரு டின் நிறைய சக்கரை
கட்டிகள். அதுவரை அப்படியான ஒரு சுவையை உணர்ந்தே இல்லாத அந்த எறும்புகள். அதுவரை
சேகரித்த பொருட்களை அங்கேயே விட்டு, சக்கரை கட்டிகளை அந்த பாக்ஸ்ஸுடனே (டின்) எடுத்து
செல்ல துவங்குகிறது அந்த அப்பாவி கருப்பு எறும்புகள்.
வழியில் அவை சந்திக்கும் தடங்கல்களை
கடந்து அவை எவ்வாறு தனது இருப்பிடம் சென்று சேர்கிறது என்பது மட்டுமல்ல இந்த கதை.
அவை கொண்டு சேர்த்த அந்த அந்த கட்டிகளால் அந்த முழுஎறும்பு கூட்டமும் சந்திக்கபோகும்
பெரும் ஆபத்துகளை கடந்து எவ்வாறு மீண்டன என்பதே.
இதில் அந்த கட்டிகளை தன்
இருப்பிடத்திற்கு அவை கொண்டும் செல்லும் காட்சிகளை APOCALYPTO வில் நாயகன் நரபலியில்
மீண்டு, அந்த குழுவின் துரத்தல்களுக்கு இடையே தன் இருப்பிடம் நோக்கி விரையும்
காட்சியுடன் ஒப்பிடலாம். இது உங்களை நகைப்பிற்கு உள்ளாக்கலாம். அப்படியான ஒரு
காட்சியை அனிமேஷன் கதையில் அதும் வெறும் எறும்புகளுக்கு இணையாக ஒப்பிடுவதால். காட்சியாக
பார்க்கையில் அதன் பிரமாண்டத்தை நம்மால் உணரமுடியும்.
ஒரு குட்டி பொன்வண்டு ஒன்று
முக்கிய பாத்திரத்தில் வரும். அதன் குட்டி கதை அத்தனை உயிர்ப்புடன் இருக்கும்.
மேலும் அதன் சாகசங்கள் படம் முழுதும் பரபரப்புடன் இருக்க மிகமுக்கிய காரணம்.
எறும்புகளின் வசிப்பிடம் அந்த புற்றும் அதனுள் பணிபுரியும் எறும்புகளும். நமக்கு
பெரிய அரண்மனையில் போருக்கு தயாராகும் வீரர்களை நினைவூட்டும். இதன் எதிரிகள் யார்?
இந்த எறும்புகளுக்கும் அந்த பொன்வண்டுக்குமான சம்பந்தம் என படம் முழுக்க நிறைய
பரபர & நெகிழ்ச்சியான நிகழ்வுகள்.
ரொம்ப முக்கியமான விஷயம் பிரெஞ்ச்
படத்திற்கு சப்டைட்டில் தேடி அலைய வேண்டியது இருக்காது. இது சைலென்ட் மூவி. ஆனா
பெரிய சினிமா ஞானம் இல்லாத சராசரி ரசிகனும். இந்த படத்தோட பேக் கிரௌண்ட் ஸ்கோர்
புகழ்ந்து சொல்லாம இருக்கவே முடியாது. இந்த நேரத்தில் குட்டீஸ்ங்களோட பாக்க ரொம்ப
சரியான படம்.
ஆஹா... குழந்தைகளுடன் காணும் படம் போலயே... Let us watch...
ReplyDeleteஉங்களை போன்ற குடும்பஸ்தர்களுக்கான படம்.
Delete