WEB SERIES – 12.
பெரிய ஆச்சர்யம் SCAM 1992னு இவங்க ஹர்ஷத் மேத்தா பத்தி பண்ண நெடுந்தொடர் இந்திய அளவில் பெரிய ஹிட். இவர்களால் மிக எளிதாக பிரபலமான ஒரு ஹீரோவை இந்த கதைக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனா எங்கோ சிறு பாத்திரங்களில் வந்த இவருக்கு ஏன் லீட் ரோல்ல கொடுக்கப்பட்டது. இந்த ஊழலோட உண்மை காரணகர்த்தாவின் புகைப்படத்தை பாத்தால் புரியவரும். பெரிய சீன் கம்போசிங் இந்த கதைக்கு தேவையே இருக்காது. ஏனெனில் அவ்ளோ பரபர சம்பவங்கள் நிறைஞ்சி இருக்கும் கதை இது. இதை எந்த சராசரி இயக்குனர் எடுத்தாலும் சுமாராக போககூட வாய்பில்லாத உண்மை கதை.
அரசாங்கத்துக்கு இந்த
ஸ்டாம்ப் பேப்பர் மூலம் வரும் வருவாய். அவை எங்கெல்லாம் அச்சிடபடுகிறது. அங்கு பணியாற்றும்
தலைமை அதிகாரி. அவரின் அதிகார வரம்பு. இந்தியா முழுக்க எவ்வாறு விநியோகம் செய்யபடுகிறது.
இதன் விற்பனையாளர் ஆக என்ன தகுதி. இந்த பேப்பரை அதிகம் பயன்படுத்தும் நிறுவனங்கள்.
அவர்களின் கொள்முதல் மதிப்பு என பெரிய டேட்டா பேஸ் தயாரிச்சி, இதில் எங்கிருந்து
இந்த தாளை கையகபடுத்த முடியும். ஏனெனில் போலியாக எத்தனை முயற்சித்தும் இந்த
தரத்தில் ஸ்டாம்ப் பேப்பர் அச்சடிக்க முடியாத சூழல்.
இவை தயாரிக்கும் தலைமை
அதிகாரியையும் இணக்கமாக்க இயலா. முதலில் இந்த தாள் பயணபடும் வழிகளை எல்லாம்
கண்டறிந்து சிறிய அளவில் தொழிலை துவங்கி. இதன் அங்கிகரிக்கப்பட்ட விற்பனையாளர் ஆகி.
தனது தொழில் மெல்ல விரிவடைய, அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் அறிமுகம் ஆக ஆக. தனக்கான
டிமாண்ட் அதிகரிக்க இந்த தாளை சொந்தமாக அச்சடிக்க இவர் கையாண்ட வழிமுறைகள். தனது
விற்பனையால் வந்து குவியும் ரூபாய் நோட்டுக்களை வைக்க நாடு முழுக்க குடோன்களை வாடகைக்கு
எவ்வாறு தேர்ந்தெடுத்தார்.
கிட்டத்தட்ட ஒரு
அரசாங்கத்தை நிர்வகிக்க கூடிய அளவிலான பண இருப்பும். உயர்மட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளின்
தொடர்பும் கிடைத்ததும் அடுத்த கட்டமாக இவரின் நகர்வு எவ்வாறு இருந்தது. அதனினும்
கூடுதல் சுவாரசியம் எவ்வாறு இவரின் கவனம் ஸ்டாம்ப் பேப்பர் மீது விழுந்தது. அதன்
முக்கிய காரணி. இவருடன் இணைந்து பணியாற்றிய நபர்கள். இவரின் குடும்பம் என இவரது
வாழ்வின் மொத்த நாட்களையும் காமேராவில் அச்செடுத்து கொடுத்திருக்கும் தொடர் இது. சோனி
லைவ்ல இருக்கு.
No comments:
Post a Comment