பார்த்ததில் மிகவும் ரசித்தது: 146.
த்ரில்லர் கதைகளின் சுவாரசியமே நடந்த சம்பவத்தின்
மூலம் கிடைக்கும் துப்புகளை கொண்டு குற்றவாளியை எவ்வாறு நெருங்குகிறார்கள்
என்பதில் ஒளிந்துள்ளது. மற்றொரு வகை குற்றவாளி தான் செய்த குற்றங்களில் இருந்து
எந்தவகையில் சாமர்த்தியமாக தப்பிக்கிறான் என்பதில். பெரும்பாலான கதைகள் இந்த
இருவகைகளுக்குள்ளே அடங்கும். சமீபமாக இவ்வாறான படங்களில் வேறொரு கூடுதல் சுவாரசியத்தை
கதைநெடுக பயணிக்க வைத்து. அதை முக்கிய இடங்களில் ஓப்பன் செய்து பார்வையாளரை மேலும்
இந்த கதையுடனே ஒன்ற வைக்கும் யுக்தியை இத்தலைமுறை இயக்குனர்கள் கையாள்கின்றனர்.
இவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிலும் பெரும் மகிழ்ச்சி இவர் கன்னட
இயக்குனர் என்பது.
நாற்பது வருடங்களுக்கு முன்பு இறந்த சடலங்களின்
எலும்புகள் தற்போது கண்டெடுக்கபடுகிறது. இறந்தவர்களின் வயது, பாலினம், எத்தனை வருடங்களுக்கு
முன்பு நடந்த சம்பவம். இதை மட்டுமே கொண்டு ரொம்ப விறுவிறுப்பான ஒரு படத்தை
கொடுத்திருக்கார். ரொம்ப பயங்கர சத்தமான பின்னணி இசை, இருட்டு வீட்டுக்குள்ள டார்ச்
அடிச்சிட்டு போய் க்ளு ஏதாவது கிடைக்குமான்னு தேடும் காட்சிகள். இருட்டு உருவம்
பின்தொடரும் காட்சிகள்னு. அதிகமா பார்வையாளன் பாத்து பாத்து புளித்துபோன எந்த
காட்சியும் இதுல பயன்படுத்தாம ரொம்ப கவனமா தவிர்த்ததுக்கே ரொம்ப பாராட்டனும்.
பவன்குமார் (LUCIA, UTURN படங்களின் இயக்குனர்)
புண்ணியத்துல கன்னடபடம் பாக்க ஆரமிச்சதுல பெரிய புண்ணியமே ஆனந் நாக் மாறி ஒரு
அசாதாரண நடிகனோட சில படங்கள பாக்க முடிஞ்சதுதான். GODHI BANNA SADHARANA MYKATTU
படத்துலகூட இதே சிலநாள் வெள்ளை தாடியும் வாராத தலைமுடியோட கண்ணுக்கு கீழ சுருக்கம்னு
பாத்த உடனே பாவம் வயசானவர்னு சொல்ற தோற்றத்துல அவ்ளோ ஆச்சர்யபடுத்தினார். ஆனா இந்த
படத்தோட களம், இவருக்கான பாத்திரம்னு எல்லாம் அப்படியே நேர்ரெதிர் இதுல. ஆனா கிட்டத்தட்ட
அதே தோற்றத்துல அவ்ளோ ஈர்க்க வெச்சிடறார்.
அப்பறம் க்ரைம் போலீசா ஆகற கனவுல இருக்கும் டிராபிக்
போலீஸ் வேடத்துல வரவர். இவர்தான் பெருசா யாருமே கண்டுக்காத இந்த அட்ரஸ் இல்லாத
நாப்பது வருஷங்களுக்கு முந்தின எலும்பு கூடுகளுக்கு பின்னால இருக்கும் மர்மத்தை
கண்டுபிடிக்கறார். நீங்க நெனச்சமாறியே UNOFFICIAL யாதான். அதும் எந்த க்ளுவும் இல்லாத
வெறும் எலும்புகூடகளை வெச்சி கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு ரொம்ப சூவாரசியமா
கொண்டு போறாரு இயக்குனர்.
அதிலும் இவர் டிராபிக் போலீஸ் வேலைமேல சுத்தமா விருப்பமே
இல்லாம இருக்கறவறா வருவார். ஒரு காட்சில சேர்ல உக்காந்து சாக்ஸ் & சூ போட்ற
மாறி ஷாட். சும்மா ஒரு பத்து வினாடி வரும். அதுல குதிங்காலுக்கு மேல அளவு கம்மியான
சூ போட்டா கடிக்குமே சரியா அந்த இடத்துல பிளாஸ்டர் ஒட்டிட்டு சாக்ஸ் போடுவாரு.
அந்த வேலை அவருக்கு பொருந்தாம அந்த சூ மாறி கடிக்குதுன்னு சொல்றமாரி அந்த ஷாட்
ரொம்ப ரசிச்சு பாத்தது. படம் முழுக்க இப்படியான ஷாட்ஸ் நெறைய நம்மள
ஆச்சர்யபடுத்துது.
TECHNICAL பக்கம் ரொம்ப ரசிக்க வெச்சது முன்னமே சொன்ன
மாறி வழக்கமா THRILLER கதைகள்ல பயன்படுத்துன எந்த காட்சிகளையும் ரொம்ப கவனமா
தவிர்த்தது. நாப்பது வருஷங்களுக்கு முந்தின காட்சிகளுக்கு பழைய பிலிம் ரோல் டைப்
கலர் லைட்டிங் பயன்படுத்தினது. இந்த நிகழ்கால காட்சிகளுக்கும் ரொம்ப அதிக வெளிச்சத்தை
பயன்படுத்தினா எடிட்டிங்ல காட்சிகள் முன்ன பின்னமாறி வரும் போது ஆடியன்ஷுக்கு
லைட்டிங் அதிகமா கதையோட ஒன்ற சிரமமா இருக்கும்னு தவிர்த்தது. இதெல்லாம்
பயன்படுத்தணும்னு நெனக்கறதுக்கு முன்னமே எதெல்லாம் பயன்படுத்த கூடாதுன்னு யோசிச்சி
இருப்பாங்கனு நினைக்கறேன். யாருக்கும் தவறவிட வேண்டிய படைப்பா நிச்சயம் இது இருக்காது.
Trailer Link:
https://www.youtube.com/watch?v=5w1vgMoPMRA
Super...
ReplyDeleteThanks 😍😍
DeleteThe way of sharing ur experience was very nice...
ReplyDeleteI didn't see this movie bt i could imagine the scenes through ur words...
Oooooo... thanks ya.
Delete