Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Showing posts with label Kannada. Show all posts
Showing posts with label Kannada. Show all posts

Friday, April 3, 2020




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 154.

MAYA BAZAAR 2016 (2020) – KANNADA – சூழ்நிலை

சினிமாவில் தயாரிப்பாளர் தவிர்த்து குறிப்பாக நடிகர்கள் தயாரிக்கும் படங்களின் மேல் ஈர்ப்பு ஏற்பட மிக முக்கிய காரணம் அந்த ஸ்க்ரிப்ட்டின் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை மட்டுமே. அவ்வாறு கன்னடத்தில் முன்னணி நாயகர்களில் ஒருவரான புனித்ராஜ்குமார் இப்படத்தின் தயாரிப்பாளர். மிக எளிமையான சின்ன பட்ஜெட் கதை. அதில் உள்ள சூவாரசியத்தின் அளவே பார்வையாளனுக்கு தேவையானது.


ஒரு மகன் தனது தந்தையை பெருமிதத்துடன் உணரவேண்டும் இதுதான் சூழல். இதை, இந்த சூழலை பல படங்களில் பார்த்திருப்போம். இந்த படத்திலும் அப்படியான ஒரு காட்சி. அதும் படத்தின் ஆரம்ப காட்சியே. கணவன், மனைவி அவர்களின் மகன் மூவரும் ஆட்டோவில் பள்ளிக்கு செல்கிறார்கள். இவர்களின் சம்பாஷனைகளின் வழியே இவர் காவல் துறையில் பணியில் இருப்பதும். தனது சொந்த வேலைக்கு செல்வதால் அரசு வாகனத்தை தவிர்த்து வந்ததும் நமக்கு புரியவருகிறது. ஒருவாறு மனைவி மற்றும் மகன் சமாதானம் ஆகும் வேலையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் தனது கைபேசி ஒலிக்க அவர் தன் மனைவியிடம், தான் வெளியில் வந்துவிட்டதால் CAB புக் செய்து எங்கு வேண்டுமோ போகசொல்கிறார்.


ஒருவாறு சமாதானமான மனைவி மற்றும் மகன் மீண்டும் தங்களது பழைய நிலைக்கே செல்ல மகனது பள்ளியும் வந்து விடுகிறது. வெறும் ஆட்டோவில் வந்த கோபத்தில் மகன் முதலில் இறங்கி உள்ளே செல்ல. வழியில் காரில் வந்திறங்கும் தனது தோழனிடம் பேச்சு கொடுக்கிறான். அவனது தந்தையின் பெருமைகளை பேசிக்கொண்டே அந்த சிறுவன் வருகையில். இருவரது தந்தைகளும் வந்துசெர்கின்றனர். அந்த காரில் வந்தவர் சட்டென காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கும் அந்த சல்யூட்டை கொடுத்து. நெளிய ஆரமிக்க. அதுவரை தன் தந்தை மீதிருந்த கோவம் சட்டென விலகி. தனது தாயின் கையை விடுத்து தன் இரு கைகளாளும் தந்தையின் கையை பற்றிகொல்கிறான்.


பெரிய காரண காரணமின்றி அந்த சிறுவன் எப்படி நொடியில் தன் தந்தையின் பக்கம் சாய்ந்தானோ. அப்படி ஒரு சினிமா பார்வையாளனை ஒரு படம் தன்பக்கம் ஈர்த்து கொள்ள வேண்டும். அந்த சிறுவனை போலவே ரசிகனுக்கும் குறைந்த பட்ச நியாய தர்மத்துடன் காட்சிகள் இருந்தாலே போதுமானது. ஒரு நிமிடம் மட்டுமே வரும் இந்த காட்சி இல்லாமல் போனால் கூட அந்த படத்திற்கு பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் இந்த கதையின் நாயகனை பற்றி நாம் புரிந்துகொள்ளவேண்டியது. அவசியம். இவரின் இந்த குணநலனை கொண்டே இக்கதையின் அனைத்து திருப்பங்களும் நிகழும்.
அவர் அச்யுத்குமார். ரஜினிமுருகனில் கீர்த்திசுரேசின் தந்தையாக வருவாரே அவர். முழு படத்திலும் அவர் இல்லாத காட்சிகள் அதிகபட்சம் 20-30 நிமிடங்கள் இருக்கலாம். அந்தளவு இவரை சுற்றியே பின்னப்பட்ட கதை. சின்ன சின்ன குட்டி பாத்திரங்கள் மூலமாக அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருக்க. இரண்டாம் பாதியில் பிரகாஷ்ராஜ் பாத்திரம் கதைக்குள் வருகிறது. அதுவரை நாம் பார்த்த அனைத்து பாத்திரங்களும் பெரிதும் பரிச்சயம் இல்லாதவர்கள். அதுவரை ஒரு கலரில் சென்றுகொண்டிருந்த கதையை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்வார்.


அதென்ன மாயா பஜார் 2016? அதான் கதையில் ஏற்படும் முதல் திருப்பமே. காதல் ஜோடி. ஒரு அரைகுறை திருடன். நேர்மையான இந்த அதிகாரி. ACP பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ். இந்த சில முக்கிய பாத்திரங்களை மட்டுமே கொண்டு இரண்டு மணிநேரம் ஒரு விறுவிறுப்பான படம். கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.

Friday, July 5, 2019




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 146.


த்ரில்லர் கதைகளின் சுவாரசியமே நடந்த சம்பவத்தின் மூலம் கிடைக்கும் துப்புகளை கொண்டு குற்றவாளியை எவ்வாறு நெருங்குகிறார்கள் என்பதில் ஒளிந்துள்ளது. மற்றொரு வகை குற்றவாளி தான் செய்த குற்றங்களில் இருந்து எந்தவகையில் சாமர்த்தியமாக தப்பிக்கிறான் என்பதில். பெரும்பாலான கதைகள் இந்த இருவகைகளுக்குள்ளே அடங்கும். சமீபமாக  இவ்வாறான படங்களில் வேறொரு கூடுதல் சுவாரசியத்தை கதைநெடுக பயணிக்க வைத்து. அதை முக்கிய இடங்களில் ஓப்பன் செய்து பார்வையாளரை மேலும் இந்த கதையுடனே ஒன்ற வைக்கும் யுக்தியை இத்தலைமுறை இயக்குனர்கள் கையாள்கின்றனர். இவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அதிலும் பெரும் மகிழ்ச்சி இவர் கன்னட இயக்குனர் என்பது.

நாற்பது வருடங்களுக்கு முன்பு இறந்த சடலங்களின் எலும்புகள் தற்போது கண்டெடுக்கபடுகிறது. இறந்தவர்களின் வயது, பாலினம், எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். இதை மட்டுமே கொண்டு ரொம்ப விறுவிறுப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கார். ரொம்ப பயங்கர சத்தமான பின்னணி இசை, இருட்டு வீட்டுக்குள்ள டார்ச் அடிச்சிட்டு போய் க்ளு ஏதாவது கிடைக்குமான்னு தேடும் காட்சிகள். இருட்டு உருவம் பின்தொடரும் காட்சிகள்னு. அதிகமா பார்வையாளன் பாத்து பாத்து புளித்துபோன எந்த காட்சியும் இதுல பயன்படுத்தாம ரொம்ப கவனமா தவிர்த்ததுக்கே ரொம்ப பாராட்டனும்.

பவன்குமார் (LUCIA, UTURN படங்களின் இயக்குனர்) புண்ணியத்துல கன்னடபடம் பாக்க ஆரமிச்சதுல பெரிய புண்ணியமே ஆனந் நாக் மாறி ஒரு அசாதாரண நடிகனோட சில படங்கள பாக்க முடிஞ்சதுதான். GODHI BANNA SADHARANA MYKATTU படத்துலகூட இதே சிலநாள் வெள்ளை தாடியும் வாராத தலைமுடியோட கண்ணுக்கு கீழ சுருக்கம்னு பாத்த உடனே பாவம் வயசானவர்னு சொல்ற தோற்றத்துல அவ்ளோ ஆச்சர்யபடுத்தினார். ஆனா இந்த படத்தோட களம், இவருக்கான பாத்திரம்னு எல்லாம் அப்படியே நேர்ரெதிர் இதுல. ஆனா கிட்டத்தட்ட அதே தோற்றத்துல அவ்ளோ ஈர்க்க வெச்சிடறார்.
அப்பறம் க்ரைம் போலீசா ஆகற கனவுல இருக்கும் டிராபிக் போலீஸ் வேடத்துல வரவர். இவர்தான் பெருசா யாருமே கண்டுக்காத இந்த அட்ரஸ் இல்லாத நாப்பது வருஷங்களுக்கு முந்தின எலும்பு கூடுகளுக்கு பின்னால இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கறார். நீங்க நெனச்சமாறியே UNOFFICIAL யாதான். அதும் எந்த க்ளுவும் இல்லாத வெறும் எலும்புகூடகளை வெச்சி கதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு ரொம்ப சூவாரசியமா கொண்டு போறாரு இயக்குனர்.

அதிலும் இவர்  டிராபிக் போலீஸ் வேலைமேல சுத்தமா விருப்பமே இல்லாம இருக்கறவறா வருவார். ஒரு காட்சில சேர்ல உக்காந்து சாக்ஸ் & சூ போட்ற மாறி ஷாட். சும்மா ஒரு பத்து வினாடி வரும். அதுல குதிங்காலுக்கு மேல அளவு கம்மியான சூ போட்டா கடிக்குமே சரியா அந்த இடத்துல பிளாஸ்டர் ஒட்டிட்டு சாக்ஸ் போடுவாரு. அந்த வேலை அவருக்கு பொருந்தாம அந்த சூ மாறி கடிக்குதுன்னு சொல்றமாரி அந்த ஷாட் ரொம்ப ரசிச்சு பாத்தது. படம் முழுக்க இப்படியான ஷாட்ஸ் நெறைய நம்மள ஆச்சர்யபடுத்துது.


TECHNICAL பக்கம் ரொம்ப ரசிக்க வெச்சது முன்னமே சொன்ன மாறி வழக்கமா THRILLER கதைகள்ல பயன்படுத்துன எந்த காட்சிகளையும் ரொம்ப கவனமா தவிர்த்தது. நாப்பது வருஷங்களுக்கு முந்தின காட்சிகளுக்கு பழைய பிலிம் ரோல் டைப் கலர் லைட்டிங் பயன்படுத்தினது. இந்த நிகழ்கால காட்சிகளுக்கும் ரொம்ப அதிக வெளிச்சத்தை பயன்படுத்தினா எடிட்டிங்ல காட்சிகள் முன்ன பின்னமாறி வரும் போது ஆடியன்ஷுக்கு லைட்டிங் அதிகமா கதையோட ஒன்ற சிரமமா இருக்கும்னு தவிர்த்தது. இதெல்லாம் பயன்படுத்தணும்னு நெனக்கறதுக்கு முன்னமே எதெல்லாம் பயன்படுத்த கூடாதுன்னு யோசிச்சி இருப்பாங்கனு நினைக்கறேன். யாருக்கும் தவறவிட வேண்டிய படைப்பா நிச்சயம் இது இருக்காது. 

Trailer Link: 

https://www.youtube.com/watch?v=5w1vgMoPMRA

Monday, May 29, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 112.

அரிதாகி வரும் உயிரினங்களை போன்று நம்மால் பெரிதாக சிந்திக்க நேரம் இல்லாத அல்லது சிந்திக்க விரும்பாத வயதானவர்களின் உலதத்தை அவர்களின் வாழ்க்கை சூழலை எந்தவித வண்ண சாயங்களும் கொண்டு நிரப்பாமல் ஒரே பாத்திரத்தின் மூலம் அச்சு அசல் காட்டிய வகையில் பெரிதும் கவனம் ஈர்க்க செய்யும் அற்புத காவியம்.


இப்படம் மற்ற மொழிகளை காட்டிலும் (தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு) நாம் பெரிதும் கவனம் செலுத்தாத கன்னட சினிமாவிலிருந்து வந்தது (எனக்கு) மிகப்பெரும் ஆச்சர்யம்.
அவசர உலகத்தில் தனது யூஎஸ் கனவை எட்டிபிடிக்க பயணிக்கும் தாயை இழந்த நாயகன். தனது வயதான ஞாபகமறதி குறைபாடுடைய தந்தையை மருத்துவமனையில் சேர்த்து பராமரிக்கிறார். அவரது யூஎஸ் கனவு நனவாகவும் மிகமுக்கிய ப்ராஜெக்ட் சமயத்தில் வெளியே அழைத்து சென்று திரும்பும் வழியில் தனது தந்தையை தொலைக்கிறார்.  

  

  
இதுவரை மனதில் தான் உருவகப்படுத்தி வைத்திருந்த தந்தைக்கும், தற்பொழுது அவரின் நண்பர்கள், உறவினர்கள் என தொலைந்தவரை தேடி அலையும் சமயங்களில் அவர்கள் தரும் தகவல்கள் மூலம் தான் அறியும் அவரின் பண்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, அவரை மீட்டு தன்னுடனே வைத்துகொள்ளும் வழக்கமான கதைதான். அனால் அதில் அவரின் கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாட்டை பார்வையாளர்களுக்கும் அச்சு அசல் உணர்த்திய வகையில் இப்படம் கவனிக்க படவேண்டிய பட வரிசையில் சேர்கிறது.


இக்கதைக்கான அச்சாணியாக திகழ்பவர் தந்தை பாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய ANANT RAG ஆவார். உலகின் எந்த சிறிய துறையிலும் மிகப்பெரும் வல்லுனர்கள் (கலைஞர்கள்) நிச்சயம் இருப்பர் என்பதை உணர்த்தியவர். கேன்சர் மூலம் தனது மனைவியை இழந்து ஞாபகம் தப்பி ஒரு வார தாடி, சரியாக வாரப்படாத தலை, கொஞ்சம் தொல தொல முழுக்கை சட்டையில் ஒரு சராசரி குடும்ப தலைவனுக்கான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளார்.


தனது ப்ராஜெக்டுக்காக மும்பை செல்லும் அவசரத்தில், வழியில் தனது தந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தர அழைத்துசெல்லும் மகன் சிலபல அபீசியல் தொலைபேசி அழைப்புகளுக்கு பின் தந்தையின் பக்கம் கூட திரும்பாமல், 

“நம்ம இப்ப உங்களுக்கு கொஞ்சம் துணி வாங்க போயிட்டு இருக்கோம்.” 

“எனக்கு எதுக்கு?… “அம்மாக்கு தான் கொஞ்சம் புடவைங்க வாங்கனும்னு (சில வருடங்களுக்கு முன் தனது மனைவி இறந்தது நினைவில்லாமல்) சொல்றது. குறிப்பா இதன் பின் வரும் வசனங்களில் தன் மனைவியின் நிலையை தனது மகன் மூலமாகவே அறிந்து கொள்ளும் காட்சிகளில் அசரடித்து விடுவார்.


பின் மருத்துவமனையில் தனக்கும் தனது மனைவிக்குமான கல்லூரி காதல் கதையை மிக இயல்பாக ஒரே ஷாட்டில் விவரிக்கும் இடம் ஒன்று போதும். இந்திய அளவில் இந்த காட்சியை இதே தரத்தில் செய்ய தற்பொழுது ஒரு பத்து நடிகர்கள் மிஞ்சினால் அதிகம்.


அடுத்து நாயகன் மற்றும் நாயகி பாத்திரங்கள் பெரும்பான்மையான காட்சிகளில் படம் முழுக்க வரும் பாத்திரங்கள் இவர்களே. முழு கதையும் அப்பா பாத்திரத்தை சுற்றியே சுழலும் வகையில் அமைய பெற்றிருப்பதால் இவர்களுக்கு தனிப்பட்ட எந்த பெரிய ஷாட்ஸ் இல்லாத போதும் அனைத்து குட்டி குட்டி காட்சிகளிலும் அழகாக ஈர்க்கும் நாயகி. மிகசொர்ப்பமாக கல்லூரி காலம் முதல் தான் “தம்” அடிக்கும் கடைகாரர் மூலம் தனது தந்தையும் “தம்” அடிப்பதை அறிந்து ஆச்சர்யப்படுமிடம், தனக்காக தனது தந்தை கிட்னி தானம் அளித்துள்ளதை அறிந்து கொள்ளுமிடம் என சில இடங்களில் மிளிர்கிறார்.


இது போக ஆச்சர்யபடுத்தும் வில்லன் பாத்திரம். தமிழில் பெரிய நாயகர்களுக்கே எதிரான கனமான பாத்திரங்கள் கூட செய்ய தகுதியான உடல்மொழி அமையப்பெற்றிருப்பவர். பின்னணி இசையும் பாடல்களும் நிச்சயம் அனைத்து பார்வையாளர்களையும் ஆச்சர்யப்படுத்தும்.


பெரிய குறையாக இல்லாவிடினும் லேசா இது மாற்றிருக்கலாம் என தோன்றும் சமாச்சாரங்கள் மிகசில இடங்களில் நாயகனும், இளம் தென்றலை போன்ற கதையில் புகுத்தப்பட்ட க்ரைம் சமாச்சாரங்கள் மட்டுமே. ஆனால் வழிய புகுத்தியது போன்றில்லாமல் க்ரைம், கதையுடன் பயணிக்கும் படி அமைக்கபெற்ற உருவாக்கல் நன்று. இந்த இயக்குனரின் படங்களை தேடிபிடித்து பார்க்கும் ஆவல் நமக்கு தோன்ற வைத்ததே அவருக்கான மிகப்பெரும் வெற்றி.

Search This Blog