பார்த்ததில் மிகவும் ரசித்தது: 159.
இறுதிவரைக்கும் நன்றாகவே கொண்டுசென்று கடைசிகட்டத்தில் நெறைய சொதப்பிய படங்கள் உண்டு. அனால் இறுதியில் கொலைக்கான காரணகர்த்தாவும் அதற்கான காரணங்கள்வரை விரியும் இறுதிபகுதி வரை சரியான நேர்த்தி. நடந்த சம்பவங்களும் ஏற்றுகொள்ள கூடிய திரைக்கதை. இந்த கதையை துவக்கி வைக்கும் பாத்திரம். அவரின் யூகத்தை கொண்டே விசாரணை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும். அந்த character இந்த கதைக்குள்ள கொண்டுவந்தது செம்ம ஐடியா. கூடுமானவரை இரவில் பார்க்கவும். SUN NXT ல் உள்ளது.
Crime Thriller கதைகளில் என்ன இருக்கவேண்டும்?.. தொடர் கொலைகள் நடக்க
வேண்டும். பொதுவாக அவை ஏதேனும் ஒரு தொடர்போடு இருக்கவேண்டும். கூடுமானவரை கொலைகள்
அல்லது அது சம்பந்தமான கடத்தல் இரவில்மட்டுமே நடக்கவேண்டும். இறப்பவர் கொடூரமான
சித்ரவதைக்கு ஆளானதாக உடற்கூறு ஆய்வு நடத்தும் மருத்துவர். அந்த கொலைவழக்கை
விசாரிக்கும் அதிகாரிகளிடம் குறைந்தது ஒரு நிமிடமேனும் விவரிக்க வேண்டும்.
அந்த அதிகாரிக்கு நெருக்கமான
நபர்கள் மீது கொலைமுயற்சி நிகழ்த்தபட வேண்டும். இந்த டெம்ப்ளட்க்கு உள்ள வராத
சமீபத்திய நல்ல கிரைம் படங்கள் ஏதும் இருக்க வாய்பிருக்காது. இந்த படமும்கூட இந்த
Formulaக்கு உள்ளவே வந்திருக்கு. ஆனா இந்த வருசத்தோட தி பெஸ்ட் படங்கள்ல முதல்
ஐந்து இடங்களுக்குள் நிச்சயம் இது இருக்கும்.
புதுவகையான ஒரு முயற்சி எந்தளவு
ஒரு கடினமோ. அதை காட்டிலும் பெரும் தலைவலி இப்படியான வழக்கமான Formula உள்ளவே கதை,
அதையும் நாம் ரசிக்கும்படியாகவே அமைப்பது. அதே தொடர்கொலைகள். இறந்தவர்களுக்குள்
உள்ள ஒற்றுமை. இரவு நேரத்தில் மட்டுமே நடப்பது. கொடூரமான முறையில் கொல்லபடுவது.
இப்படி எல்லாமும் அதே வழக்கமான விதிகளுக்குள்ளவே பயணபட்டாலும். தனித்து தெரிவது
அதன் உருவாக்கத்தில்.
முதல்ல ஒரு போலீஸ் அதிகாரி கடத்தி
கொல்லப்படும்வரை இந்த கதையும் ரொம்ப இயல்பாகவே போகும். அந்த கொலைக்கு பின்
முடுக்கிவிடப்படும் அத்துறையின் அதிகாரிகளில் இருந்தே அடுத்தடுத்த அதிகாரிகளை கடத்தி,
அதேமுறையில் கொல்லபடுவதில் நமக்கு தொடங்கும் பதட்டம், படத்தோட கடைசி ஷாட்வரை
கொண்டுபோன மிரட்டல் உருவாக்கல். அதிலும் சின்ன சின்ன யூகங்களை வைத்து ஒருகட்டத்தில்
இன்னும் ஒரு அதிகாரி கடத்த கண்டிப்பாக வாய்ப்பு இருப்பதாக ஒரு காட்சி. நம்ம
எல்லோரும் மிரண்டு போறமாறியான ஒரு இடம்.
ஏன்னா அதுவரை விசாரணை ஒரு யூகமாதான்
போகும். குறிப்பிட்டு எந்த பயனுள்ள சின்ன க்ளுகூட அவங்களுக்கு இருக்காது. என்ன
பண்றதுன்னு அங்க மொத்த அதிகாரிங்களும் நிற்கும் அதே சூழ்நிலைதான் பார்வையாளர்கள் நமக்கும்
இருக்கும். காட்சியோடு ஒன்றி இதுபோல படபடப்பை உணர்ந்தது சமீபமாக இல்லை. ஒவ்வொரு
அதிகாரியும் கடத்தப்படும் முன் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கபடும்.
இரண்டாவது அதிகாரி கடத்தல் முதல் இந்த இடங்கள் அனைத்தும் நமக்கு பெரும் கிலியை ஏற்படுத்தும்.
இதேவகையில் கிட்டத்தட்ட முழுகதையிலும் நம்மை பதட்டபடவைக்க நெறைய விஷயங்கள் பாத்து
பாத்து பண்ணிருக்காங்க.
இறுதிவரைக்கும் நன்றாகவே கொண்டுசென்று கடைசிகட்டத்தில் நெறைய சொதப்பிய படங்கள் உண்டு. அனால் இறுதியில் கொலைக்கான காரணகர்த்தாவும் அதற்கான காரணங்கள்வரை விரியும் இறுதிபகுதி வரை சரியான நேர்த்தி. நடந்த சம்பவங்களும் ஏற்றுகொள்ள கூடிய திரைக்கதை. இந்த கதையை துவக்கி வைக்கும் பாத்திரம். அவரின் யூகத்தை கொண்டே விசாரணை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும். அந்த character இந்த கதைக்குள்ள கொண்டுவந்தது செம்ம ஐடியா. கூடுமானவரை இரவில் பார்க்கவும். SUN NXT ல் உள்ளது.
Nice presentation. Will watch soon.👍
ReplyDeleteSure kalai😍
Deleteஏற்றுக்கொள்ள கூடிய திரைக்கதை அண்ணா.
ReplyDeleteHit The First Case Flashback விட சிறப்பா இருக்கும் இந்த படத்துல. நீங்க சொன்னது போல் டாப் 5ல் இருக்கும்.
ஆமா கண்டிப்பா.. 😍
DeleteNice...
ReplyDeleteThanks karthick 😍😍😍
Delete