கேரளாவில் இருந்து 100+ காவலர்கள்
சத்தீஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள சில வடமாநிலங்களின் தேர்தல் பணிக்காக
அனுப்பபடுகின்றனர். அதற்கான ஆணை பிறபிக்கபட்டு காவலர்கள் தயாராகும் நிமிடங்களில்
இருந்து கதை துவங்குகிறது. ஒருபுறம் காவலர்கள் கிட்டத்தட்ட ஒருவார பிரயாணத்திற்கான
ஏற்பாடுகளில் இருக்க. மறுபுறம் அவர்கள் எடுத்து செல்ல வேண்டிய உபகரணங்கள் தயார்
செய்யும்பணி முழு வீச்சில் நடந்துவருகிறது. உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் பெற்று
கிளம்பும்நாள்.
காவலர் வாகனத்தில் ரயில்நிலையம்
அனுப்பபட்டு அங்கிருந்து ரயில் மூலம் நான்கு நாள் பிரயாணத்தில் சட்டீஸ்கர்
வந்தடைகின்றனர். மேலும் அடுத்தடுத்த மாநில பணிக்கு செல்வோருக்கு விடை கொடுத்து மகிழ்ச்சியுடன்
அனுப்புகிறனர். தங்களுக்கு நேரபோகும் ஆபத்தை அறியாமல். இங்கு வந்த அனைவரும் நான்கு
மணிநேர காத்திருப்புக்கு பின். அவரவர் தேர்தல்பணி நடக்கும் இடங்களுக்கு அனுப்பபடுகின்றனர். அந்த நான்கு மணிநேரம் தாங்கள் எங்கு பணிக்கு செல்ல போகிறோம்
என காத்திருக்கையில் நாயகன் வருகிறார். அதும் எந்தவித ஆரவாரமும் இல்லாமல். அங்கு தேர்தல்
நெருங்குவதால் எங்கும் உச்சகட்ட பிரச்சார பரபரப்பில் இருக்க. அந்த கூட்டத்தில்
ஒருவனது பணத்தை பிக்பாக்கெட் அடித்தவன் யதார்த்தமாக தொலைவில் ஒரு சின்ன மரபெஞ்சில்
அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருக்கும் நாயகனை காண்கிறான்.
மம்மூட்டி மற்றும் மோகன்லால்
படங்களில் அவர்களின் அறிமுக காட்சிகளை கொண்டே கூறிவிடலாம் அந்த படங்களின் தரத்தை.
எந்த ஆர்பாட்டங்களும் இன்றி இவர்கள் அறிமுகமாகும் இப்படியான படங்கள் நம்மை
நிச்சயம் பெரிதும் ஏமாற்றமடைய செய்யாது. இவ்வாறு இவர் மற்றும் இவரின் சீனியர்
காவலர் இவர்களின் தலைமையிலின் கீழ் எட்டு நபர்கள் இருவேறு இடங்களுக்கு
அனுப்படுகின்றனர். அடுத்து நாம் பார்க்கவிருப்பது நாயகனும் அவர்களின் கீழ் உள்ள
காவலர்களும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகம் நடைபெறும் இந்த மலை கிராமங்களில்
எவ்வாறு இவர்கள் .தேர்தல்பணியை முடித்து திரும்புகின்றனர் என்பதையே.
அந்த மலைகிராமங்களுக்கு செல்லும் வழியில் வாகனத்தை முன்னால் மெதுவாக செல்லுமாறு அனுப்பிவிட்டு காவலர்களுடன் மம்மூட்டி பின்னால் நடந்துவரும் போது. ஒரு காவலர் இளைஞர் தயங்கியபடி காரணம் கேட்பார். அதற்க்கு நாயகன் இங்கு எங்கே வேண்டுமானாலும் கன்னிவெடி இருக்க வாய்ப்பு உள்ளது என. எந்தவித பெரிய முன்னனுபவங்களும் இல்லாத இந்த காவலர்கள் நமக்கு இவர் பொறுப்பாளராக வாய்த்ததை பெருமையாக நினைத்து கொள்வர். அடுத்துவரும் ஒரு அசாதாரண சூழலில் என்ன செய்வதென இவர்கள் தடுமாறும் சூழலில் இவர் மெளனமாகவே இருக்க.
அந்த மலைகிராமங்களுக்கு செல்லும் வழியில் வாகனத்தை முன்னால் மெதுவாக செல்லுமாறு அனுப்பிவிட்டு காவலர்களுடன் மம்மூட்டி பின்னால் நடந்துவரும் போது. ஒரு காவலர் இளைஞர் தயங்கியபடி காரணம் கேட்பார். அதற்க்கு நாயகன் இங்கு எங்கே வேண்டுமானாலும் கன்னிவெடி இருக்க வாய்ப்பு உள்ளது என. எந்தவித பெரிய முன்னனுபவங்களும் இல்லாத இந்த காவலர்கள் நமக்கு இவர் பொறுப்பாளராக வாய்த்ததை பெருமையாக நினைத்து கொள்வர். அடுத்துவரும் ஒரு அசாதாரண சூழலில் என்ன செய்வதென இவர்கள் தடுமாறும் சூழலில் இவர் மெளனமாகவே இருக்க.
இதை பொறுத்துகொள்ள இயலாமல் அனைத்து
காவலரும் ஒன்று சேர்ந்து இவரை கேள்விகேட்கும் சூழல். இவரின் பதில் இதுவரை எந்த
நாயகரும் இந்திய சினிமாவில் குறிப்பாக போலீஸ் பாத்திரமேற்ற எந்த நாயகனும் கண்டிப்பாக
சொல்லியிருக்க வாய்ப்பே இல்லாதவை.. என் இத்தனை வருட அனுபவத்தில் ஒரு கொலைகாரனையோ?
ஏன்.. ஒரு திருடனை கூட பிடித்தது கிடையாது. எனக்கும் உங்களை போலவே இந்த சூழல்
புதிதுதான் என கூறுவார். அதுவரை இவரை நம்பிக்கையாக நினைத்தவர்கள் அதிர்ச்சிக்கு
உள்ளாவர்கள். ஏற்கனவே தங்களுக்கான தோட்டாக்கள், BULLET PROOF JACKETS எதும் இல்லாத
சூழலில். வரும் தேர்தல் நாளின் பயங்கரத்தை எதிர்பார்க்க துவங்குவர்.
நல்ல எதிர்பார்ப்பை கொடுக்ககூடிய
கதைகளம். படம் துவங்கிய சில நிமிடங்களிலே உண்டான எதிர்பார்ப்பையும் நம்மை பெரிதாக
எங்கும் அதிருப்தி அடையசெய்யாமல் பூர்த்தி செய்துள்ளனர்.
Nice...
ReplyDelete😍😍சூப்பர்..
ReplyDelete