WEB SERIES – 005 - II
ஒரு chemistry professor ஒரு உதவாக்கரை டிரக் சப்ளையரை
வெச்சி, இவரே டிரக் தயாரிச்சி பணத்தாசைல அவர் பாட்னர் அந்த சப்ளையர் மூலமா பணம் பண்ண
ஆரமிக்கறாரு. மார்கெட்ல இதோட குவாலிட்டிக்கு செம்ம டிமாண்ட். சரி அப்ப நல்ல பார்டிக்கு
மொத்தமா கைமாத்தி விட்டா, இன்னும் நல்ல லாபம் பாக்க பாக்கலாம். இந்த நினைப்பில்
அவங்க எடுத்து வைக்கும் முதல் அடியே அவங்களுக்கு பெரிய வினையாக மாறி இரண்டு
கொலைகளில் முடியுது. அதையும் தன்னோட கெமிக்கல் மூளையை பயன்படுத்தி சரிபன்றார்.
இப்ப கையில் காசு பாத்துட்டு சும்மா இருக்க முடியாம. வேறொரு
பெரிய ட்ரக் சப்ளையரை அவர் பாட்னர் சந்திக்க. திரும்ப அவன் மூலமே வேறொரு பிரச்சனை
முளைக்குது. அதையும் இவரே சமாளிச்சி, அவன் மூலமா நல்ல லாபம் பாக்கறாங்க. அங்கயும்
ஒரு பெரிய பிரச்சனை இவரோட அந்த பாட்னர் மூலமே. வியாபாரம் கொஞ்சம் பெரிய நபரிடம்
பண்றதால, பிரச்சனையும் இந்த முறை பெருசு. கண்டிப்பா உயிர்போகும் நிலை. ரொம்ப சரியா
அந்த இடத்தோட முதல் சீசன் முடியுது.
முதல் சீசனிலே இவங்க ரெண்டு முக்கிய பாத்திரம் இல்லாம, இவர்
மனைவியுடைய சகோதரி கணவர் இருப்பார். அவர் ஆன்டி ட்ரக் டிபார்ட்மென்ட்ல முக்கிய
அதிகாரியாக இருப்பார். இவர் professor அதுக்கேத்த upper middle class life. அவர் மனைவி உட்பட யாருக்குமே தெரியாது. அதிலும்
அந்த அதிகாரி இவங்க குடும்பத்துல ஒருவர் போல ரொம்ப நெருக்கம். முன்பே குறிப்பிட்ட
அந்த பெரிய ட்ரக் டீலருடைய பிரச்சனை அங்கே வருவோம்.
அந்த ட்ரக் முக்கிய புள்ளியை இவங்க டிபார்ட்மென்ட்ல கண்காணிச்சிட்டே
இருப்பாங்க.
ரொம்ப சரியான நேரத்துல அவன் நாயகனையும் அவரோட பாட்னரையும் ஒரு
சந்தேகத்துல கடத்திடுவான். கண்டிப்பா உயிர் போகக்கூடிய சூழல். ஒருபக்கம் அவர் சகலை
வில்லனை தேடி வர. மாட்டினால் கர்ப்பிணி மனைவி, மகன், பணிபுரியும் பள்ளி தனது மொத்த
கௌரவமும் சிதையும் சூழல். பெரிய பரபர ஆக்க்ஷன்கதை போலவே தோன்றும். ஆனால் கதை முதல்
சீசன் முதலே ஒரு நிதானத்துடனே பயணிக்கும். இத்தனை பரபரப்பிலும் இவரின் குடும்ப
பின்னணியே பிரதானம் வகிக்கும். துவக்கம் முதல் இந்த நிதானமே நம்மை கட்டிபோடும்.
தள்ளிபோட்டு பின் பார்த்துக்கொள்ள கூடிய சந்தர்பங்களை அவை நமக்கு வழங்காது.
அந்த கடத்தல் எனும் பரபரப்பு சூழலில் முடிவுற்ற முதல்
சீசனின் இந்த பாகமும் மிகபெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுடன். அடுத்த
எபிசோடின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தே உள்ளது. இந்த சீசன் முழுக்க கதை நாம்
எதிர்பாராத பல திருப்பங்களுடன் நம்மை பெரிதும் திருப்திபடுத்தியே உள்ளது. சொற்ப
பாத்திரங்களை கொண்டே இத்தனை சீசன் சலிப்பில்லாமல்
நகர்த்தும் சரியான திரைக்கதை.
இன்னும் series பாக்க ஆரம்பிக்கலை...
ReplyDeleteசீக்கிரம் முடிவெத்துட்டு சொல்லுங்க.
Delete