Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Showing posts with label BREAKING BAD. Show all posts
Showing posts with label BREAKING BAD. Show all posts

Tuesday, April 28, 2020


WEB SERIES – 005 - II

ஒரு chemistry professor ஒரு உதவாக்கரை டிரக் சப்ளையரை வெச்சி, இவரே டிரக் தயாரிச்சி பணத்தாசைல அவர் பாட்னர் அந்த சப்ளையர் மூலமா பணம் பண்ண ஆரமிக்கறாரு. மார்கெட்ல இதோட குவாலிட்டிக்கு செம்ம டிமாண்ட். சரி அப்ப நல்ல பார்டிக்கு மொத்தமா கைமாத்தி விட்டா, இன்னும் நல்ல லாபம் பாக்க பாக்கலாம். இந்த நினைப்பில் அவங்க எடுத்து வைக்கும் முதல் அடியே அவங்களுக்கு பெரிய வினையாக மாறி இரண்டு கொலைகளில் முடியுது. அதையும் தன்னோட கெமிக்கல் மூளையை பயன்படுத்தி சரிபன்றார்.


இப்ப கையில் காசு பாத்துட்டு சும்மா இருக்க முடியாம. வேறொரு பெரிய ட்ரக் சப்ளையரை அவர் பாட்னர் சந்திக்க. திரும்ப அவன் மூலமே வேறொரு பிரச்சனை முளைக்குது. அதையும் இவரே சமாளிச்சி, அவன் மூலமா நல்ல லாபம் பாக்கறாங்க. அங்கயும் ஒரு பெரிய பிரச்சனை இவரோட அந்த பாட்னர் மூலமே. வியாபாரம் கொஞ்சம் பெரிய நபரிடம் பண்றதால, பிரச்சனையும் இந்த முறை பெருசு. கண்டிப்பா உயிர்போகும் நிலை. ரொம்ப சரியா அந்த இடத்தோட முதல் சீசன் முடியுது.


முதல் சீசனிலே இவங்க ரெண்டு முக்கிய பாத்திரம் இல்லாம, இவர் மனைவியுடைய சகோதரி கணவர் இருப்பார். அவர் ஆன்டி ட்ரக் டிபார்ட்மென்ட்ல முக்கிய அதிகாரியாக இருப்பார். இவர் professor அதுக்கேத்த upper middle class life.  அவர் மனைவி உட்பட யாருக்குமே தெரியாது. அதிலும் அந்த அதிகாரி இவங்க குடும்பத்துல ஒருவர் போல ரொம்ப நெருக்கம். முன்பே குறிப்பிட்ட அந்த பெரிய ட்ரக் டீலருடைய பிரச்சனை அங்கே வருவோம்.
அந்த ட்ரக் முக்கிய புள்ளியை இவங்க டிபார்ட்மென்ட்ல கண்காணிச்சிட்டே இருப்பாங்க. 
ரொம்ப சரியான நேரத்துல அவன் நாயகனையும் அவரோட பாட்னரையும் ஒரு சந்தேகத்துல கடத்திடுவான். கண்டிப்பா உயிர் போகக்கூடிய சூழல். ஒருபக்கம் அவர் சகலை வில்லனை தேடி வர. மாட்டினால் கர்ப்பிணி மனைவி, மகன், பணிபுரியும் பள்ளி தனது மொத்த கௌரவமும் சிதையும் சூழல். பெரிய பரபர ஆக்க்ஷன்கதை போலவே தோன்றும். ஆனால் கதை முதல் சீசன் முதலே ஒரு நிதானத்துடனே பயணிக்கும். இத்தனை பரபரப்பிலும் இவரின் குடும்ப பின்னணியே பிரதானம் வகிக்கும். துவக்கம் முதல் இந்த நிதானமே நம்மை கட்டிபோடும். தள்ளிபோட்டு பின் பார்த்துக்கொள்ள கூடிய சந்தர்பங்களை அவை நமக்கு வழங்காது.



அந்த கடத்தல் எனும் பரபரப்பு சூழலில் முடிவுற்ற முதல் சீசனின் இந்த பாகமும் மிகபெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுடன். அடுத்த எபிசோடின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தே உள்ளது. இந்த சீசன் முழுக்க கதை நாம் எதிர்பாராத பல திருப்பங்களுடன் நம்மை பெரிதும் திருப்திபடுத்தியே உள்ளது. சொற்ப பாத்திரங்களை கொண்டே  இத்தனை சீசன் சலிப்பில்லாமல் நகர்த்தும் சரியான திரைக்கதை.

Monday, April 13, 2020




Chemistry கணிதத்தை காட்டிலும் மிகஅதிக குழப்பமும், தலைசுற்றலும் விளைவிக்க கூடியது. அதன் சூத்திரங்கள் அதாவது (formulas) கணிதத்தை விட பெரும் சிக்கல் வாய்ந்தது. இந்த formulas இல்லாமலும் கணிதபாடங்களில் ஓரளவு நடந்து செல்லவியலும். ஆனால் வேதியலில்  அதற்கு ஒரு அடி கூட வாய்ப்பில்லை. இங்கு இவைகுறித்து பேச காரணம். இந்த சீரீஸின் நாயகன் ஒரு chemistry professor.   அதாவது இந்தந்த மூலக்கூறுகளை இந்த அளவில், இந்த வெப்பநிலையில் இதனோடு சேர்த்தால் கோகெயின் முதல் ஒரு கட்டிடத்தை தகர்க்கும் வெடிவரை எளிதாக தயார்செய்யுமளவு வேதியலில் Phd., முடித்த தில்லாலங்கடி.


ஆனால் கதையில் இந்த வேதியியல் பெரும் பங்குவகித்து நம்மை சோதனைக்கு உள்ளாக்கிடுமோ என்ற பயத்திலே இரண்டு வருடங்களாக தவிர்த்தே வந்த சூழலில். துணிந்து காண இந்த  lockdown மட்டுமே காரணம். கதை முழுக்கவே இந்த வேதியலை அடிப்படையாக கொண்டதே. ஆனாலும் அவை என்னை போன்ற சாதாரண பார்வையாளனை எந்த வகையிலும் சலிப்படைய செய்யாததே இந்த முதல் சீசனை ஆர்வமாக முடித்து அடுத்த சீசனும் உடனே துவங்க முழுகாரணம்.  

   
முன்பே குறிப்பிட்டதை போல நாயகன் chemistry professor. பகுதி நேரத்தில் ஒரு கார்வாஷிங் நிறுவனத்திலும் பணிபுரிகிறார். அங்கு சூழலை பொறுத்து கார் கழுவும் நிலை வந்தாலும் தயங்காமல் பணிபுரிந்து வருகிறார். upper middle class வாழ்க்கை. ஒரு ஊனமுற்ற மகன். வாழ்க்கை இவ்வாறு சுமூகமாகவே சென்றுகொண்டிருக்க. எதற்காக நல்ல பணியில் உள்ளவர் கார்வாஷ் செய்யும் பணியை செய்யவேண்டும். அவ்வாறே தேவையென்றாலும் இவர் வேறேதும் பணிசெய்யலாமே என்ற கேள்வியும் வருகிறதல்லவா. 


அவருக்கு நுரையீரல் புற்று இருப்பதால் இருக்கும் குறுகிய காலத்திற்குள் தன் குடும்பத்திற்கு ஓரளவேனும் பணம் சேர்த்திட முயல்கிறார். ஒரு எதிர்பாரா சூழலில் drugs சப்ளையர். அதாவது wholesaler, distributor இப்படியான பெரும்தலைகள் இல்லாமல் அதை பொதுமக்களிடம் சில்லறையில் விற்பனை செய்யும் ஒருவனை சந்திக்கிறார். அதுவரை ஒரு melodrama போலவே நகரும் கதை. அதற்க்கு பின் நல்ல வேகத்தில் நகரும் என யூகித்தால் அப்பொழுதும் இந்த கதை துவங்கிய அதே நிதானத்திலே பயணிக்கிறது.


இக்கதை ஒரு நல்ல thirller க்கு உண்டான அனைத்து அம்சங்களும் கூடுதலாகவே இருந்தாலும் நிதானமாக பயணிக்க மிக முக்கிய காரணம் இக்கதையின் நாயகனே. ஆம் அவரின் குணாதிசயம் எந்த சூழலிலும் அவர் கடைபிடிக்கும் நிதானம். சில இடங்களில் அவர் உணர்ச்சி வசப்பட்டாலும் சட்டென தன் அசாத்திய மூளையின் கட்டளைக்கு கீழ் சென்று விடுகிறார்.  அதனாலே கிட்டத்தட்ட கதையின் துவக்கத்திலே, அதாவது அவர் முதல்முறை தவறு செய்யும் போதே அதில் கூடுதலாக வேறொரு புதிய சிக்கலும் முளைக்கிறது. ஒரு சிறிய தவறு இரண்டு கொலைகளுக்கும் காரணமாகிறது. இந்த` seat edge thirllerக்கு  உண்டான பத்து பொருத்தங்களும் அமைந்த எபிசொட் அது. ஆனால் அங்கும் திரைக்கதை நாயகனை போலவே நிதானமாக வடிவமைக்க பட்டதே இக்கதையின் மிகபெரும் பலம்.
அவரின் நிதானம், எப்பொழுதும் அவரின் தளர்ந்த நடை. 50 வயதுக்கு உண்டான வயோதிக தோற்றம். என முதல் எபிசோடில் துவங்கும் ஒவ்வொரு சிறு தடங்களையும் நிதானமாகவே கையாண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் ஆர்வமாக பார்க்கும்படியே கதையை நகர்த்தி செல்கிறார். அதிலும் அவருக்கு பார்ட்னராக அவர் தேர்ந்தெடுக்கும் அந்த உதவாக்கரை drug சப்ளையர் கதையின் நிறைய குழப்பங்களுக்கு காரணமாகிறார்.  ஆனால் அவரின் குடும்பபின்னணி மற்றும் நாயகனின் கேன்சர் பற்றி அவரின் குடும்பம் தெரிந்துகொள்ளும் நான்காவது எபிசோட். கதையை ஒரு துளியும் நகர்த்தி செல்லாத பாகம் அது. ஆனால் இந்த சீசனில் பெரும்பான்மையோரது விருப்ப எபிசோட் அதுவாகவே இருக்கும். அந்த எபிசோட் முழுக்கவே குடும்ப உறவுகளின் மீதான பிணைப்பை ரொம்ப அழகா காட்சிபடுத்தி இருப்பாங்க.


5 சீசன்வரை உள்ள தொடர். இந்த நிதான திரைக்கதையிலும் அடுத்த சீசனை உடனே பார்க்கதூண்டும் ஆவலுடனே  முடிக்கபட்டுள்ளது.  இந்த தொடர் அடுத்தடுத்த சீசனில் இன்னும் விறுவிறுப்பாக்க இன்னும் கூடுதல் கிளைகதைகளுக்கு வேண்டிய நிறைய க்ளு இந்த சீசனில் ஆங்காங்கே தென்படுவதால் அடுத்த சீசன் நிச்சயம் விறுவிறுப்பாகவே செல்லும் என நம்புவோமாக.               

Search This Blog