Chemistry கணிதத்தை காட்டிலும் மிகஅதிக குழப்பமும், தலைசுற்றலும் விளைவிக்க கூடியது. அதன் சூத்திரங்கள் அதாவது (formulas) கணிதத்தை விட பெரும் சிக்கல் வாய்ந்தது. இந்த formulas இல்லாமலும் கணிதபாடங்களில் ஓரளவு நடந்து செல்லவியலும். ஆனால் வேதியலில் அதற்கு ஒரு அடி கூட வாய்ப்பில்லை. இங்கு இவைகுறித்து பேச காரணம். இந்த சீரீஸின் நாயகன் ஒரு chemistry professor. அதாவது இந்தந்த மூலக்கூறுகளை இந்த அளவில், இந்த வெப்பநிலையில் இதனோடு சேர்த்தால் கோகெயின் முதல் ஒரு கட்டிடத்தை தகர்க்கும் வெடிவரை எளிதாக தயார்செய்யுமளவு வேதியலில் Phd., முடித்த தில்லாலங்கடி.
ஆனால் கதையில் இந்த வேதியியல் பெரும் பங்குவகித்து நம்மை
சோதனைக்கு உள்ளாக்கிடுமோ என்ற பயத்திலே இரண்டு வருடங்களாக தவிர்த்தே வந்த சூழலில்.
துணிந்து காண இந்த lockdown மட்டுமே
காரணம். கதை முழுக்கவே இந்த வேதியலை அடிப்படையாக கொண்டதே. ஆனாலும் அவை என்னை போன்ற
சாதாரண பார்வையாளனை எந்த வகையிலும் சலிப்படைய செய்யாததே இந்த முதல் சீசனை ஆர்வமாக முடித்து
அடுத்த சீசனும் உடனே துவங்க முழுகாரணம்.
முன்பே குறிப்பிட்டதை போல நாயகன் chemistry professor.
பகுதி நேரத்தில் ஒரு கார்வாஷிங் நிறுவனத்திலும் பணிபுரிகிறார். அங்கு சூழலை
பொறுத்து கார் கழுவும் நிலை வந்தாலும் தயங்காமல் பணிபுரிந்து வருகிறார். upper
middle class வாழ்க்கை. ஒரு ஊனமுற்ற மகன். வாழ்க்கை இவ்வாறு சுமூகமாகவே
சென்றுகொண்டிருக்க. எதற்காக நல்ல பணியில் உள்ளவர் கார்வாஷ் செய்யும் பணியை
செய்யவேண்டும். அவ்வாறே தேவையென்றாலும் இவர் வேறேதும் பணிசெய்யலாமே என்ற கேள்வியும்
வருகிறதல்லவா.
அவருக்கு நுரையீரல் புற்று இருப்பதால் இருக்கும் குறுகிய காலத்திற்குள்
தன் குடும்பத்திற்கு ஓரளவேனும் பணம் சேர்த்திட முயல்கிறார். ஒரு எதிர்பாரா சூழலில்
drugs சப்ளையர். அதாவது wholesaler, distributor இப்படியான பெரும்தலைகள் இல்லாமல்
அதை பொதுமக்களிடம் சில்லறையில் விற்பனை செய்யும் ஒருவனை சந்திக்கிறார். அதுவரை ஒரு
melodrama போலவே நகரும் கதை. அதற்க்கு பின் நல்ல வேகத்தில் நகரும் என யூகித்தால்
அப்பொழுதும் இந்த கதை துவங்கிய அதே நிதானத்திலே பயணிக்கிறது.
இக்கதை ஒரு நல்ல thirller க்கு உண்டான அனைத்து அம்சங்களும்
கூடுதலாகவே இருந்தாலும் நிதானமாக பயணிக்க மிக முக்கிய காரணம் இக்கதையின் நாயகனே.
ஆம் அவரின் குணாதிசயம் எந்த சூழலிலும் அவர் கடைபிடிக்கும் நிதானம். சில இடங்களில்
அவர் உணர்ச்சி வசப்பட்டாலும் சட்டென தன் அசாத்திய மூளையின் கட்டளைக்கு கீழ் சென்று
விடுகிறார். அதனாலே கிட்டத்தட்ட கதையின்
துவக்கத்திலே, அதாவது அவர் முதல்முறை தவறு செய்யும் போதே அதில் கூடுதலாக வேறொரு
புதிய சிக்கலும் முளைக்கிறது. ஒரு சிறிய தவறு இரண்டு கொலைகளுக்கும் காரணமாகிறது. இந்த`
seat edge thirllerக்கு உண்டான பத்து பொருத்தங்களும்
அமைந்த எபிசொட் அது. ஆனால் அங்கும் திரைக்கதை நாயகனை போலவே நிதானமாக வடிவமைக்க பட்டதே
இக்கதையின் மிகபெரும் பலம்.
அவரின் நிதானம், எப்பொழுதும் அவரின் தளர்ந்த நடை. 50 வயதுக்கு உண்டான வயோதிக தோற்றம். என முதல் எபிசோடில் துவங்கும் ஒவ்வொரு சிறு தடங்களையும் நிதானமாகவே கையாண்டு அடுத்தடுத்த கட்டத்திற்கு நாம் ஆர்வமாக பார்க்கும்படியே கதையை நகர்த்தி செல்கிறார். அதிலும் அவருக்கு பார்ட்னராக அவர் தேர்ந்தெடுக்கும் அந்த உதவாக்கரை drug சப்ளையர் கதையின் நிறைய குழப்பங்களுக்கு காரணமாகிறார். ஆனால் அவரின் குடும்பபின்னணி மற்றும் நாயகனின் கேன்சர் பற்றி அவரின் குடும்பம் தெரிந்துகொள்ளும் நான்காவது எபிசோட். கதையை ஒரு துளியும் நகர்த்தி செல்லாத பாகம் அது. ஆனால் இந்த சீசனில் பெரும்பான்மையோரது விருப்ப எபிசோட் அதுவாகவே இருக்கும். அந்த எபிசோட் முழுக்கவே குடும்ப உறவுகளின் மீதான பிணைப்பை ரொம்ப அழகா காட்சிபடுத்தி இருப்பாங்க.

Series இதுவரை எதுவுமே பார்த்தது இல்லை (Stranger Things தவிர)... திரைப்படங்கள் தாண்டி நீளமாக இருக்கும் இவைகளை தொடர்ச்சியாக அமர்ந்து பார்ப்பது கடினமாக உள்ளது...
ReplyDeleteஎனக்கும் அப்படியான நிலைதான் துவக்கத்துல் இருந்தது. முதல்ல சுவாரசியமான தமிழ் சீரிஸ் எதாவது பாருங்க. அப்படியே பழகீடும்.
Delete