கடலில் கரையைதாண்டி இடுப்பு, மார்பு, கழுத்தளவு நீருக்குள்
சென்று அலைகளை ரசிப்பதும், அதில் அமிழ்வதும் எப்படியான ஒரு த்ரில்லிங் அனுபவமோ.
அப்படியான ஒரு அனுபவம் நாம் பார்க்கும் க்ரைம், ஆக்ஷன் படங்கள் மற்றும் தொடர்கள்.
இப்படியான எதற்குள்ளும் நுழையாமல், கரையில் அலை தொடும் எல்லையில் அமர்ந்து,
எப்போதேனும் நம் பாதம் மட்டும் நனைத்து செல்லும் அலையையும், எட்டும் தூரத்தில் பரந்துவிரிந்த
கடலையும் ரசிப்பது எப்படியான ஒரு ஏகாந்த நிறைவை
தருமோ அப்படியான ஒரு அனுபவம் இந்த தொடர். காதலும் கடந்து போகும், சார்லி போன்று
எப்பொழுதேனும் நடக்கும் மேஜிக்.
குறிப்பு : இது காதோல் கதையல்ல.
தன்னுடன் இஞ்சினியரிங் பயின்ற ஒரே நண்பனும் லட்சங்களில் சம்பாதிக்க.
இந்திய வரைபடத்தில் எங்கோ ஒரு புள்ளியாக கூட இல்லாத ஒரு கீழ்மட்ட கிராமத்தில் கிடைத்த
பஞ்சாயத்து செக்ரேட்ரரி பணிக்கு செல்வதில் இருந்து கதை துவங்குகிறது. சட்டென நம்மால் யூகித்திட முடியும் அவர் அங்கே
பல இன்னல்களுக்கு ஆளாகி, இறுதியாக அந்த குக்கிராமத்தை இந்தியாவின் சிறந்த மாதிரி
கிராமமாக உருவாக்குகிறார். இதற்கான விருதையும் முதலமைச்சர் அல்லது பிரதமரிடம் ஒரு
விழாவில் பெறுகிறார். கூடுதலாக அந்த கிராமத்தில் ஒரு காதலையும்.
இப்படியான எந்த வழக்கமான சங்கதிகளும் மருந்துக்கும் கூட
இந்த கதையில் இல்லாமல் பார்த்து செய்ததே இதன் சிறப்பு. இந்த கதைக்கு இவர்கள் தேர்ந்தெடுத்த
களம். அதை இந்த கதையின் மொத்த காட்சிகளிலும் எத்தனை தூரம் ஒன்றி பிணைத்து
உள்ளார்கள் என்பதே இதன் வெற்றி. அடுத்து இதில் பங்குபெற்ற பாத்திரங்கள். பிரசிடன்ட்,
அவரின் கணவர், மற்றும் நாயகனின் உதவியாளர் என இந்த பிரதான பாத்திரங்கள்
மட்டுமின்றி. இந்த மொத்த தொடரில் ஓரிரு காட்சிகள் மட்டுமே வரும் அத்துணை துணை
பாத்திரங்களும் (பெரும்பாலும் புதுமுகங்கள் என்றே யூகம்) தனக்கான பணியை மட்டுமே
செய்தது.
நாயகன் தான் பெரிய எந்த விருப்பமும் இல்லாமலே இந்த பணிக்கு
வருகிறார். மேலும் தனது மேற்படிப்பிற்கு உண்டான ஆயத்தங்களில் மட்டுமே அதிக நேராம்
செலவிடுகிறார். தொடரின் எந்த இடத்திலும் ஒரு அரசு அதிகாரி தான் உண்டு தனது வேலை உண்டு
என்ற நிலையிலேயே இருக்கிறார். ஒரு காட்சியில் தனது ஏழ்மை நிலையை எடுத்து கூறி,
தனது குழந்தைகளின் பசிக்கு ஆவணசெய்யும்படி அந்த பெரியவர் இறைஞ்சும் காட்சியில்கூட.
கையில் அவரது மணிபர்ஸ் இருக்கும். சட்டென அந்த இடத்தைவிட்டு விலகிவிடுவார்.
பின் தனது பணியில் ஏதேனும் ஊழல் தவறை கண்டுபிடித்து
எதிர்த்து அந்த கிராமத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும். இல்லையேல், தானே
ஏதேனும் தவறிழைத்து அதிலிருந்து மீண்டுவரவேண்டும். இது ஏதுமில்லையெனில் அந்த ஊரின்
பெரிய மனிதர் பெண்ணையாவது காதலிக்க வேண்டும். ஆனால் இவை ஏதுமில்லாமல் கதையில் என்ன
சுவாரசியம் என்கிறீர்களா? இந்த கதை காலத்துக்கும் ஒரே வேகத்தில் சுழலும் ஒரு
மின்விசிறியை போல, ஒரே அளவில் அதே பணியை
செய்யும் நொடி முள்ளை போல முழுக்கவும் ஒரே சமஅளவில் எந்த பரபரப்பும் இல்லாமல் நகரும்
கதை.
ஆனால்ச ட்டென நம்மை உள்ளிழுத்து கொள்ளும் கதை. இறுதிவரை எங்குமே அது நம்மை சலிப்படையவோ அடுத்த
எபிசோடை தாமதமாக பின்னொரு நேரம் பார்த்து கொள்ள சம்மதிக்காது. இதுவரை நாம் பார்த்த
அனைத்து இந்திய சீரீஸ்களில் இதுவே சிறந்தது என உறுதியாக கூறிடயியலாது. அது அவரவர்
ரசனை சார்ந்தது. ஆனால் இது தரும் அனுபவம், இதுவரை நீங்கள் பார்த்த எந்த இந்திய தொடர்களிலும்
உணர்ந்திடாதது. AMAZON PRIME ல் கிடைக்கிறது.
சூப்பர்...
ReplyDeleteநன்றிகள்🌷
Delete