சின்னகவுண்டர் படத்தில் சுகன்யாவை முதல் பாதி முழுக்க விளையாட்டு தனமான பாத்திரமா காட்டிருப்பார் உதயகுமார். ஒரு காட்சியில் விஜயகாந்த் தோட்டத்தில் யாருக்கும் தெரியாமல் மோட்டார் போட்டு குளித்துகொண்டிருப்பார். அப்போது விஜயகாந்தை பார்த்து தப்பிஓட, அவர் எட்டி பிடிக்கும்போது சுகன்யா கழுத்தில் இருந்த முத்துமாலை அறுந்து வாய்காலில் விழுந்து தண்ணீரில் அடித்து போகும். என் அம்மா ஞாபகமா என்கிட்டே இருந்தது இது ஒண்ணுதான். இப்படி பண்ணிடிங்களேனு வருத்தமா போய்டுவாங்க.
அதோட நமக்கும் அந்த காட்சி பெருசா ஞாபகம் இருக்காது. அடுத்த 30-40 நிமிஷத்துல அவங்க விஜய்காந்த்துக்கே மனைவி ஆகிடுவாங்க. அதுவரை அவரோடு கிண்டலான காட்சிகள் மட்டுமே இருக்கும். திருமணத்துக்கு பின்னே அவரோடான முதல் வசனமே ‘நான் கட்டிருக்கும் புடவை, நகை எல்லாமே உங்க ஆத்தா கொடுத்ததுதான். என் தாய் வீட்டு சீதனம்னு எதும் என்கிட்டே இல்லனு’ அவங்க சொல்லவரதுக்கு முன்னமே விஜயகாந்த் உன் தாய்வீட்டு சீதனம் ஏற்கனவே என்கிட்ட இருக்குனு சொல்லி கைல பொத்தி எடுத்து வந்து சுகன்யா முகத்துக்கு நேரா ஒரு முனையை பிடிச்சிகிட்டே தொங்க விடுவாரு. அவர் விட்ட வேகத்துக்கு அந்த மாலை ஆடுவதும், சுகன்யாவோட பூரிச்சிபோன முகதோட ஆரமிக்கும் அந்த ஷாட்டோட இரண்டாவது மைக்ரோ நொடியில அந்த பாடலோட இசை ஆரம்பமாகும். அவ்ளோ சிலிர்ப்பான காட்சி அது.
நல்லா பாத்திங்கனா அதுவரை
பஞ்சாயத்து, சண்டை, ஊர் பெரியவர்னு அவர்
கைல இருந்த படம் சுகன்யா கைக்கு போய்டும். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் வரைக்கும் இவங்க
& மனோரமா பாத்திரங்கள் மூலமாதான் அந்த கதை நகரும். இந்த படத்தோட பெரும்
வெற்றிக்கு இந்த இரு பாத்திரங்களும் ரொம்ப பெரிய காரணம்.
இப்படி ரசிச்சி சொல்லவும், சிலாகிச்சி பேசவும், பெருமையா சொல்லிக்கவும் நிறைய நிறைய காட்சிகளும், சம்பவங்களும், பாத்திரங்களும் இந்த சீரீஸ்ல இருக்கு.எப்பவும் சொல்றதுதான் 2.30 மணிக்குள்ளான கதைகளிலே நிறைய விஷயங்கள் சொல்ல இருக்குனா. 4-8 மணிநேரங்கள் போகும் சீரீஸ்ஸில் எவ்ளோ பாத்திரங்கள், காட்சிகள், கதைக்கான களங்கள்னு நமக்கு காட்ட முடியும். இது எல்லாமே இந்த கதையில் முழுமை பண்ணிருக்காங்க.
இந்த கதையில் 1-2 பிரதான பாத்திரங்கள் மட்டுமில்லாம எல்லோருக்கும் ஸ்கோப் இருக்கும்படியான கதை. குறிப்பா கதை நடக்கும் களம். அடுத்த சீசன் இப்பவே பார்க்க நினைக்கும் படியான முதல் சீசனின் முடிவுனு ஆச்சர்யமா பேசவும், நினைச்சிக்கவும், குறிப்பா குடும்பமா அத்தனை பெரும் ஒண்ணா பாக்கும்படியா, ரொம்ப காலத்துக்கு பின்ன அமைஞ்சி வந்திருக்கும் சீரிஸ். கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க. தைரியமா யாருக்கு வேண்டுமானாலும் சஜ்ஜஸ் பண்ணுங்க.
அருமை...
ReplyDeleteநன்றிங்க.
Delete