பார்த்ததில் மிகவும் ரசித்தது: 154.
MAYA BAZAAR 2016 (2020) – KANNADA
– சூழ்நிலை
சினிமாவில் தயாரிப்பாளர் தவிர்த்து குறிப்பாக
நடிகர்கள் தயாரிக்கும் படங்களின் மேல் ஈர்ப்பு ஏற்பட மிக முக்கிய காரணம் அந்த
ஸ்க்ரிப்ட்டின் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை மட்டுமே. அவ்வாறு கன்னடத்தில்
முன்னணி நாயகர்களில் ஒருவரான புனித்ராஜ்குமார் இப்படத்தின் தயாரிப்பாளர். மிக
எளிமையான சின்ன பட்ஜெட் கதை. அதில் உள்ள சூவாரசியத்தின் அளவே பார்வையாளனுக்கு
தேவையானது.
ஒரு மகன் தனது தந்தையை பெருமிதத்துடன் உணரவேண்டும் இதுதான்
சூழல். இதை, இந்த சூழலை பல படங்களில் பார்த்திருப்போம். இந்த படத்திலும் அப்படியான
ஒரு காட்சி. அதும் படத்தின் ஆரம்ப காட்சியே. கணவன், மனைவி அவர்களின் மகன் மூவரும்
ஆட்டோவில் பள்ளிக்கு செல்கிறார்கள். இவர்களின் சம்பாஷனைகளின் வழியே இவர் காவல்
துறையில் பணியில் இருப்பதும். தனது சொந்த வேலைக்கு செல்வதால் அரசு வாகனத்தை தவிர்த்து
வந்ததும் நமக்கு புரியவருகிறது. ஒருவாறு மனைவி மற்றும் மகன் சமாதானம் ஆகும்
வேலையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் தனது கைபேசி ஒலிக்க அவர் தன் மனைவியிடம், தான் வெளியில்
வந்துவிட்டதால் CAB புக் செய்து எங்கு வேண்டுமோ போகசொல்கிறார்.
ஒருவாறு சமாதானமான மனைவி மற்றும் மகன் மீண்டும் தங்களது
பழைய நிலைக்கே செல்ல மகனது பள்ளியும் வந்து விடுகிறது. வெறும் ஆட்டோவில் வந்த
கோபத்தில் மகன் முதலில் இறங்கி உள்ளே செல்ல. வழியில் காரில் வந்திறங்கும் தனது
தோழனிடம் பேச்சு கொடுக்கிறான். அவனது தந்தையின் பெருமைகளை பேசிக்கொண்டே அந்த
சிறுவன் வருகையில். இருவரது தந்தைகளும் வந்துசெர்கின்றனர். அந்த காரில் வந்தவர்
சட்டென காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கும் அந்த சல்யூட்டை கொடுத்து.
நெளிய ஆரமிக்க. அதுவரை தன் தந்தை மீதிருந்த கோவம் சட்டென விலகி. தனது தாயின் கையை விடுத்து
தன் இரு கைகளாளும் தந்தையின் கையை பற்றிகொல்கிறான்.
பெரிய காரண காரணமின்றி அந்த சிறுவன் எப்படி நொடியில் தன்
தந்தையின் பக்கம் சாய்ந்தானோ. அப்படி ஒரு சினிமா பார்வையாளனை ஒரு படம் தன்பக்கம்
ஈர்த்து கொள்ள வேண்டும். அந்த சிறுவனை போலவே ரசிகனுக்கும் குறைந்த பட்ச நியாய
தர்மத்துடன் காட்சிகள் இருந்தாலே போதுமானது. ஒரு நிமிடம் மட்டுமே வரும் இந்த
காட்சி இல்லாமல் போனால் கூட அந்த படத்திற்கு பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் இந்த
கதையின் நாயகனை பற்றி நாம் புரிந்துகொள்ளவேண்டியது. அவசியம். இவரின் இந்த குணநலனை
கொண்டே இக்கதையின் அனைத்து திருப்பங்களும் நிகழும்.
அவர் அச்யுத்குமார். ரஜினிமுருகனில் கீர்த்திசுரேசின்
தந்தையாக வருவாரே அவர். முழு படத்திலும் அவர் இல்லாத காட்சிகள் அதிகபட்சம் 20-30 நிமிடங்கள்
இருக்கலாம். அந்தளவு இவரை சுற்றியே பின்னப்பட்ட கதை. சின்ன சின்ன குட்டி
பாத்திரங்கள் மூலமாக அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருக்க. இரண்டாம்
பாதியில் பிரகாஷ்ராஜ் பாத்திரம் கதைக்குள் வருகிறது. அதுவரை நாம் பார்த்த அனைத்து
பாத்திரங்களும் பெரிதும் பரிச்சயம் இல்லாதவர்கள். அதுவரை ஒரு கலரில்
சென்றுகொண்டிருந்த கதையை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்வார்.
அதென்ன மாயா பஜார் 2016? அதான்
கதையில் ஏற்படும் முதல் திருப்பமே. காதல் ஜோடி. ஒரு அரைகுறை திருடன். நேர்மையான
இந்த அதிகாரி. ACP பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ். இந்த சில முக்கிய பாத்திரங்களை மட்டுமே
கொண்டு இரண்டு மணிநேரம் ஒரு விறுவிறுப்பான படம். கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.


எக்ஸெலன்ட் ரைட் அப்
ReplyDeleteரொம்ப நன்றிங்க சார். 😍
DeleteSuper 🙂 🙂
ReplyDeleteநல்லா வார்த்தை பிரயோகம் அண்ணா.
ReplyDeleteரசிகனுக்கு குறைந்தபட்ச நியாய தர்மத்துடன் காட்சிகள் இருந்தாலே போதும் 🙏