WEB SERIES -004
Undercover
agent
காவல்துறையின் உடல் மற்றும் மனதளவில் நன்கு தேறியவர்களில் கூடுதல்
பயிற்சி மற்றும் அவர்களின் பூரண சம்மதத்துடன் அவர்களுக்கு வழங்கப்படும் பணி காரணம்
அவர்கள் எதிரணியில் அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கான இழப்பிடோ, விருதுகளோ
அரசு சார்பில் அவர்களுக்கு கிடைக்காது. காரணம் அவர்கள் அரசாங்கத்தில்
பணிபுரிவதற்கான எந்த தஸ்தாவேஜுகள் ஏதும் இங்கு இருக்காது. சம்பளம் கூட அரசாங்கத்தின் மூலம் அவர்களுக்கு
வழங்கப்படமாட்டாது. இவர்களை அனுப்பிய மேலதிகார்கள் மூலம் இவர்களின்
குடும்பத்திற்கு பணம் அனுப்பப்படும்.
இந்த கதையின் தலைப்பை வைத்து அப்படி அனுப்பப்படும் ஒரு
பெண்ணை பற்றிய கதையிது என நினைத்தால் கிட்டத்தட்ட பாதி சரி. ஏனெனில் வயதான அம்மா
மற்றும் திருமண வயதில் ஒரு தங்கையுடன் மாத செலவுக்கே பெரும் கஷ்டத்தில் காவல்துறையில்
காண்ஸ்டபிள் பணியில் உள்ளவள். வீட்டின் அனைத்து வேலைகளையும் முடித்து தினமும்
பணிக்கு தாமதமாக வந்து சக ஆண் காண்ஸ்டபிள்களின் கேலி கிண்டலை தினமும் கடந்து
செல்பவள்.
சரி இப்படியான ஒரு பெண் தன்னை முழுமையாக தயார்படுத்தி
கொண்டு வெறிகொண்ட வேங்கயாகி எதிரிகளை துவம்சம் செய்பவளாக நீங்கள் அவளை யுகித்தாலும்
உங்கள் கணிப்பு தவறே. ஏனெனில் அவள் இந்த நிலையிலேயே undercoverராக முதல் எபிசோடின்
துவக்க காட்சியிலேயே எதிரிகளை பற்றி அறிய அனுப்பபடிகிறாள். அதும் ஆசியாவின் பெரிய போதை
வஸ்து கடத்தல் குழுவிற்குள். அங்கு வெளியாட்கள் எந்த வகையிலும் உள்ளே நுழைய வழியில்லா
காரணத்தால் prostituடாக அனுப்பபடுகிறாள்.
அதெப்படி அவளுடைய சம்மதம் இல்லாமல் நடக்கும்? அவளின் குடும்பத்திற்கு உள்ள ஒரே
பிடிமானமான இவளின் பணியை மறைமுகமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மனதளவில் இந்த
பணியை ஒப்புகொள்ள தயார்படுத்தபடுகிறாள். அதும் முதல் எபிசோடின் முதல் காட்சியே ஒரு
விடுதியில் துவங்குகிறது. அந்த drug குழுவின் முக்கிய புள்ளி வந்துசெல்லும் இடம்.
அவனை தனித்து வளைத்து பிடிக்க மட்டுமே எந்த அனுபவமும் இல்லாத இப்பெண்ணை
தேர்ந்தெடுக்கபடுகிறாள். அந்த விடுதியில் இருந்து non linear ல அவங்க குடும்பம்
வேலைன்னு போற முதல் எபிசொட் செம்ம த்ரில்லிங். அதும் அவன தனியா மடக்கி பிடிக்க
எல்லா வகையிலும் காவல்துறை தயாராக இருக்க. அவன் ரொம்ப சாதாரணமா இந்த பெண்ணோட
வெளியே போய்டுவான். அவன ஏதோ தற்செயலா பிடிபட. வேறு வழி இல்லாததால் இந்த பெண்ணை
கொண்டே அவனின் தலைவன் உட்பட முழு குழுவையும் பிடிக்க உயரதிகாரிகள் முடிவெடுக்கும் சூழல்.
இந்த தற்செயல் சம்பவத்தை வெச்சே அதே பாணியில் இதைவிட மிக
விறுவிறுப்பாக இந்த முழு சீரீஸ் ரொம்ப சுலபமாக கொண்டு சென்றிருக்கலாம். அனால் அவள்
prostitute டாக அவர்களிடம் நடிக்க மனதளவில் தயாராகும் விதங்களை. அவளின் திருமணம்
விவாகரத்தில் நிற்கும் காரணங்களை அலசும் விதங்களை. தான் இந்த பணிக்கு முழுக்க
தேர்ந்தவளா என அவள் சுயபரிசோதனை செய்துகொள்ளும் காட்சிகள் என இந்த பெண்ணின்
முழுஉணர்வுகளையும் உள்ளதை அவ்வாறே நமக்கு கொடுத்திருக்கும் சீரீஸ். மொத்தம் மூணு சீசனில் முதல் சீசன் மட்டும்
NETFLIX ல் வெளிவந்துள்ளது. பெரிதாக யாராலும் பேசபடாத இந்த சீரீஸ் கதை மற்றும்
திரைக்கதை IMTIYAZ ALI. முதல் சீசன் உங்களை
எந்த வகையில் ஈர்த்தாலும். அது கண்டிப்பா அடுத்தடுத்த சீசனுக்கு உங்களை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கும்.
No comments:
Post a Comment