Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Friday, March 27, 2020

THE PLATFORM (2019) – ENGLISH – ஆச்சர்யம்.


பார்த்ததில் மிகவும் ரசித்தது: 151.


விசாலமான ஒரே அறை. அறைக்கு இருவர். மொத்தம் 300+ அடுக்குகள் கொண்ட ஒரு கட்டிடம். ஆங்கில படமென்றதால் நாம் நினைக்கும் மற்ற எந்த சமாச்சாரங்களும் அங்கு இல்லை. அறைக்கு இரு படுக்கைகள். மற்றும் ரசம் போன பழைய கண்ணாடியும். ஒரே ஒரு சிங்க் மட்டுமே. நாம் அணிந்திருக்கும் ஒற்றை ஆடையை கூட அதிலே துவைத்து கொள்ள வேண்டும். மற்ற சிறைசாலையை போல பகல் பொழுதில் வெளியே சூரிய வெளிச்சத்தில் விளையாட்டு போன்ற பொழுதை கழிக்கும் சமாச்சாரங்கள் ஏதும் இருக்காது.

காவலர்கள், சக கைதிகளுடன் அரட்டை ஏதுமில்லை. நம் அறையில் நம்முடன் இருக்கும் அந்த ஒரே நபர் மட்டுமே. நாளுக்கு ஒருமுறை மட்டுமே உணவு. அதற்காக அறையின் நடுவில் ஒரு பெரிய செவ்வக இடைவெளி இருக்கும். உதாரணமாக நாம் 10மாடியில் இருப்பதாக வைத்து கொண்டால். நம் அறையில் உள்ள அந்த பெரிய செவ்வக இடைவெளியில் அனைவருக்குமான உணவு முதல் தளத்தில் இருந்து ஒவ்வொரு தளமாக அந்த இடைவெளி வழியே வரும். அந்தந்த தளங்களில் சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும். நமக்கான உணவை அந்த குறிப்பிட்ட நிமிடத்திற்குள் உண்ண வேண்டும்.
அந்த குறிப்பிட்ட நிமிடத்திற்கு பின் அந்த 600+ நபர்களுக்கான உணவு அடங்கிய பெரிய மேஜை தானாக நமக்கு கீழ் உள்ள அடுத்த தளத்திற்கு செல்லும். யாரும் உணவை எடுத்து வைத்து கொள்ள அனுமதி இல்லை. அந்த சில நிமிடங்களில் நாம் உண்ணும் உணவு மட்டுமே நமக்கான அன்றைய ஆகாரம். இதில் குறிப்பிட தகுந்த ஒரே விஷயம் அங்குள்ள அனைத்து நபர்களுக்கும் வேண்டிய உணவு இருக்கும். அதாவது ஒரு நபர் இன்று புதிதாக வருகிறார் எனில் அவரது விருப்ப உணவு குறித்து கொள்ளப்பட்டு. அவை எந்த நாட்டின் உணவு வகையோ அதற்கான தேர்ந்த நபர்களின் மூலம் மிக கவனமாக தயாரிக்கப்பட்டு அந்த பிரமாண்ட உணவு மேஜையில் அன்றிலிருந்து இணைக்கபடும்.

பெரும் சூவாரசியம் நாம் இருக்கும் தளத்தில் ஒரு மாதம் மட்டுமே இருக்க முடியும். அடுத்த நாள் நாம் கண்விழிக்கையில் அடுத்த ஒரு மாதம் நாம் இருக்க போகும் தளத்தில், நம்முடன் பழைய தளத்தில் இருந்த அதே நபரோடு கண்விழிப்போம். அந்த சூவாரிசியம் கடந்த மாதம் நாம் 10வது தளத்தில் இருந்திருந்தால் இம்முறை உதாரணத்திற்கு 200வது தளத்தில் இருப்போம். அடுத்த மாதம் 35வது, 54வது அல்லது அதிர்ஷ்டம் இருந்தால் 6வது தளம் கூட கிடைக்கலாம். அதென்ன குறைவான எண்ணிக்கை உள்ள தளங்களில் உள்ள அதிர்ஷ்டம் என்றால்.
     
துவக்கத்தில் அந்த தினம் ஒரு முறை மட்டுமே வரும் உணவு மேஜை பற்றி குறிப்பிட்டேன் அல்லவா. அது 0,1,2,3 என மேலிருந்து துவங்கி இறுதியாகவே அந்த 300+ தளத்தை வந்தடையும். நாம் 200வது தளத்தில் இருக்கிறோமெனில் நமக்கு முன்பாக அந்த உணவு மேஜையில் கிட்டத்தட்ட 400 நபர்கள் உணவருந்தி இருப்பார்கள். அதனால் என்ன நமக்கான உணவும். அதும் விருப்ப உணவையே அவர்கள் அனுப்பி இருப்பார்களே. ஆம் கண்டிப்பாக நமக்கான உணவும் அதில் இருக்கும். ஆனால் உணவை எடுத்துவைத்து கொள்ளகூடாது, உணவருந்தவும் சில நிமிடங்கள் மட்டுமே அந்த மேஜை ஒவ்வொரு தளத்திலும் இருக்கும். மற்றும் அனைவரின் மொத்த உணவும் அந்த ஒரே மேஜையில் இருப்பதால்.

முதல் தளத்தில் இருந்தே அவரவர் தன்பக்கம் இருந்தது. தன் பார்வையில் ருசிக்க விரும்பியது என வரைமுறை இல்லாமல் உண்ண துவங்கினால் கிட்டத்தட்ட 10-15 தளங்களுக்கு முன்னமே அந்த முழு மேஜையும் அலங்கோலமாகும். அதற்கடுத்த தளங்களில் மேலும் சிதையுண்டு ஒரு 50-55வது தளங்களை எட்டும்போது எவ்வளவு தேடினாலும் மருந்துக்கும் அதில் உணவிருக்க வாய்பிருக்காது. எனில் அதன் கீழ் உள்ள தளங்களில் உள்ளோர் அந்த ஒரு மாத உணவிற்கு என்ன செய்வார்கள்? இதுதான் இந்த படத்தின் கதையா என்றால் அதுமட்டுமல்ல. அந்த சிறைச்சாலையை நாம் வசிக்கும் இந்த உலகமாக கணக்கிட்டு கொண்டால் இந்த படம் இன்னும் ஆழமாக பல விசயங்களை பேசுவதை நம்மால் உணரமுடியும்.

ஒரு திரைப்படத்திற்கு களம் எந்தளவு முக்கியம் என்பதற்கு இந்த படம் மிகச் சிறந்த எடுத்துகாட்டு. அவ்வாறு யூகித்து இப்படம் பேசும் அரசியல் தேவையில்லை என்போரும் மேம்போக்காக பார்க்கவும் சலிப்பில்லாத சமாச்சாரங்கள் உள்ள படமிது.

2 comments:

Search This Blog