WEB SERIES -002- II
ஜோம்பி வைரஸால ஒரு பெரிய நிலபரப்பை ஆளும் ராஜா பாதிப்படையறாரு. அவங்க இரண்டாம்
மனைவி அவங்களோட அப்பா. இவங்க தவிர்த்து அவங்க குடும்பத்துல யாருக்கும் தெரியாம
அவருக்கு மருத்துவம் பாக்கறாங்க. அப்பாவுக்கு பின்னால இருக்கும் மர்மத்தை கண்டுபிடிச்சி
அவரோட மகன் தங்கள் ஆஸ்தான மருத்துவரை தேடி போறாரு. அங்கேயே அவரோட கதையை முடிச்சி
தனக்கு பிறக்க போகும் குழந்தையை அரசனாக்க ராஜாவோட இரண்டாம் மனைவியும். அவரோட
அப்பாவும் திட்டமிட்றாங்க.
இதுல மருத்துவரை தேடி போகும் இளவரசன். ராஜாவோட இரண்டாம் மனைவி கற்பத்தின் பின்னால்
ஒளிந்திருக்கும் ரகசியம். மருத்துவரின் கிராமமே ஜோம்பி வைரஸால பாதிப்பில் இருக்க.
இளவரசன் உடன் செல்லும் முக்கிய வீரர்கள் ஒவ்வொருவரின் மர்ம பின்னனினு முதல் சீசன் ரொம்ப
பிரமாதமா கொண்டு போயிருந்தாங்க. அதும் இரவுல மட்டுமே ஜோம்பி வைரஸால் பாதிப்படஞ்சவங்க
அட்டகாசம் பண்ணிட்டு இருந்து. அதுங்க பகல்லயே அந்த மலைகிராமங்களில் இருந்து
நகரத்தை நோக்கி வரும் பரபரப்பான கட்டதோட போன சீசன முடிச்சிருந்தாங்க.
ஒரு எதிர்பார்ப்போட துவங்கி பெரிய அதிர்ச்சிகளும். நிறைய ஆச்சர்யங்கள்.
கொஞ்சம் அதிகமான பரபரப்பு. சுவாரசிய கிளைகதைகள் என முடிஞ்ச முதல் சீசனோட அடுத்த
பாகம். கண்டிப்பா இதவிட பெருசா இல்லனாகூட இதுக்கு இணையா இருந்தாவே பெரிய ஹிட்ங்கற
மணகணக்கோட பாக்க ஆரமிச்சா.முதல் சீசன்ல எதெல்லாம் திருப்பங்களா கொண்டுவந்து
முடிச்சி இருந்தாங்களோ. அத்தனையையும் சரியான திரைக்கதை+காட்சிகள் மூலமா மிரட்டி
இருக்காங்க.
போன சீசன்ல சொன்னது மாறியே இந்த சீரிசோட முழு ஸ்கிரிப்ட் படிச்சிட்டு
பாத்தாலும் முக்கிய திருப்பங்கள் தவிர்த்து பெரும்பாலான இடங்கள்ல நம்மை கண்டிப்பா
மிரள வெச்சிடும். ஜோம்பிகளோட ஒப்பனை, CG வொர்க். அதுங்க நூத்து கணக்குல வரும்
காட்சிகளில் கூட இங்க அங்கனு அதுங்க சிதறி ஓடும் சிறு சிறு குழுக்கள். காட்சிகள்ல
ரொம்ப பின்னால இருக்கும் ஜோம்பிங்களுக்குகூட அவ்ளோ உழைச்சிருக்காங்க. அதுங்க யாரை
தாக்குது. அவங்க கதையில் எந்தளவு முக்கிய பாத்திரம்னு நம்மள அதிகமா பதட்டம்
அடையவெச்சதிலே வெற்றி அடஞ்சிடறாங்க.
அந்த மருத்துவர் குழுவில் இருக்கும் ஒரு உதவிமருத்துவர். இளவரசனோட தளபதி
பாத்திரங்கள் அதிக இடங்கள்ல நம்மள நெகிழ வெச்சிடறாங்க. அதும் இளவரசன் நாட்டுக்கு
திரும்பி வரும்போது எல்லா அதிகாரமும் மன்னனோட இரண்டாம் மனைவியோட தந்தையிடம்
போய்டுது. ஒருபக்கம் உள்ளவே போகமுடியாத சூழல். மறுபக்கம் தங்கள் நகரத்தை நோக்கி
வரும் ஜோம்பிங்கனு இளவரசனுக்கு முதல் எபிசொட்ல வரும் இக்கட்டான சூழல் இந்த ஆறு
சீசன்லயும் கடைசி காட்சிவரைகுமே இருக்கும். அத எப்படி சமாளிச்சி அடுத்தடுத்த
கட்டத்துக்கு போறார். இதுக்கான திரைக்கதையும். துணை பாத்திரங்களோட கிளைகதைகளும் அவ்ளோ
அருமையா இளவரசன் கூடவே பயணிச்சி இருக்கு.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உண்டான மருந்து. அதை எப்படி பயன்படுத்தி இவங்கள
குனபடுத்த முடியும் இப்படியான விசயங்களை மூணாவது சீசன்ல சொல்லிட்டு கூட இந்த சீசன
பெரிய ஆக்ஷன் சீசனா கொடுத்து இருக்கலாம். ஆனா நம்ம முதல் சீசன் பாத்து என்னென்ன
கேள்விகள் இருந்ததோ அது எல்லாத்துக்கும் இதுல பதில் சொல்லிருக்காங்க. முதல் சீசன்
பாத்தா எல்லோருக்கும் இருக்கும் ஒரே கேள்வி இந்த சீரிஸ் இந்த சீசனோட முடியுதானுதான்
இருக்கும். அது இந்த ஆறு எபிசோடும் பாத்து தெரிஞ்சிகோங்க.
No comments:
Post a Comment