Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Sunday, March 29, 2020

பார்த்ததில் மிகவும் ரசித்தது: 152.

 BROCHEVAREVARURA 2019 – TELUGU -

நல்ல கதையம்சம் உள்ள படங்களில் திரைக்கதை மற்றும் இயக்குனர் முதல் துணை பாத்திரங்கள் வரை ஏற்படும் சின்ன சின்ன தவறுகளை அந்த கதை காப்பாற்றி விடும். ஆனால் இது போன்ற மிக மெல்லிய கதைகளை திரைக்கதை மற்றும் இயக்குனர் முதல் துணை பாத்திரங்கள் வரை அனைவருமே தங்கள் பணியில் மிக கவனம் கொள்ளுதல் அவசியம். தமிழில் சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் இந்த இரு படைப்புகளும் இப்படியான கதைகள் ஒன்று நகைச்சுவையிலும் மற்றொன்று காதலிலும் எக்ஸ்ட்ரீம் தொட்ட படங்கள். தமிழில் இப்படியான படிப்புகள் வருவதில்லையேனு கேட்பவர்களுக்காக.

அப்படியான ஒரு சின்ன வரி கதையை.கொண்டு ரசிகர்களுக்கு பெரிய விருந்தே கொடுத்த படைப்பிது. உதவி இயக்குனர் தயாரிப்பாளருக்கு கதையை சொல்லி, அவரும் எல்லாம் ஒரே போல கதைகளாவே இருக்கு. ஆனா இப்படியான கதைகளைதான் எதிர்பார்த்தேன் உறுதியா பண்ணலாம்னு சொல்லிடறார். அவர் புது தயாரிப்பாளர் என்பதால் அனைத்து பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை இவரையே தொடர்பு கொண்டு புக் பண்ண சொல்லிடறார். கதை முழுக்கவே வரும் நாயகி பாத்திரத்திற்கு முன்னணி நடிகையை தொடர்புகொண்டு கதை சொல்ல தொடங்குறார்.

அவர் சொல்லும் கதையோடே அது காட்சிகளாக நமக்கும். ஒரு மூன்று நான்கு கட்டங்களாக நடிகையிடம் கதையை அவர் சொல்வதில் அந்த நடிகைக்கு இவரின் மேல் ஒரு சின்ன அபிப்பிராயம் ஏற்பட. அதன்பின் அவரின் ஓய்வு நேரங்களில் மட்டுமே நிகழ்ந்த அந்த சந்திப்பு அவரின் ஷூட்டிங் இடைவெளிகளில் கூட தொடர்கிறது. அப்படி ஒரு சந்திப்பில் இவரின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக  செய்தி வருகிறது. இவரின் பதட்டத்தை உணர்ந்து அந்த நாயகியே இவரை தனது காரில் அழைத்து செல்கிறாள். உடன் அவரின் தந்தைக்கு மருத்துவ உதவியாக ரூபாய் பத்து லட்சமும் எடுத்து செல்கிறார்கள். 

இவரை சகஜமாக்க விடுபட்ட கதையை தொடருமாறு அந்த நடிகை கேட்டுகொண்டே வருகிறார்.  (கதடைபட்ட அந்த கதையில் நாயகி கடத்தபட்டு நாயகனிடம் பத்து லட்சம் கேட்கும் இடத்தோடு நிற்கிறது) சட்டென அவர்கள் வந்த வாகனத்தின் கண்ணாடி உடைத்து கொண்டு பெரிய கல் வந்து விழ. நாயகி சுதாரிப்பதற்குள் கட்டுபாட்டை இழந்த வாகனம் அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி நிற்க. தூரத்தில் இவரின் கதையில் பார்த்த நாயகனும் அவரின் நண்பர்கள் இருவரும் முகமுடியுடன் காரை நோக்கி ஓடி வருகின்றனர்.
ஓ.. இந்த கதை ஏதேனும் காலபயணம் சார்ந்ததோ. அவரின் கதையில் வரும் பாத்திரங்கள் எவ்வாறு அவனது பொருளை அபகரிக்க முடியும்? அவர்களுக்கு எவ்வாறு இவர்கள் பணத்துடன் செல்வது தெரியும்? அதை துளியும் எங்கேயும் குழப்பி, நம்மை குழம்ப வைக்காமல் செம்ம நீட்டா ப்ரெசென்ட் பண்ணிருக்காங்க. அந்த இயக்குனர் நடிகையிடம் கதை சொல்லல் காட்சிகள் முழு படத்திலும் சில நிமிடங்கள் மட்டுமே வரும். அந்த ஹீரோயின் பாத்திரத்திற்கு தன்னிடம் கதை சொல்லவரும் இயக்குனரின் மேல் வரும் அந்த மெல்லிய அபிப்பிராயம் மட்டுமே இந்த முழு படத்திலும் உள்ள லவ் போர்ஷன்.


அவர் கூறும் கதைவழியே வரும் நாயகி. அவரை காப்பாற்ற பத்து லட்சம் தேவை அவர்கள் எவ்வாறு இந்த கதையுடன் இணைந்தார்கள் போன்ற சமாச்சாரங்கள் முழுக்க முழுக்க துளியும் செண்டிமெண்ட் கலக்காமல் ஒரு முழு நீள கலகலபான படம். அந்த கதை கேட்கும் தயாரிப்பாளர் ஆரம்பத்தில் சொல்வதுபோல வழக்கமான படங்களில் இருந்து இந்த கதை புதுவகை ட்ரீட்மென்ட் தெலுங்கு ஆடியன்ஸ்க்கு. எந்த மனநிலையில் இருந்தாலும் நம்மை முழு ஈடுபாட்டுடன் கதையுடன் ஒன்றவைக்கும் படைப்பிது.   

5 comments:

Search This Blog