Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Sunday, March 1, 2020

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – SWEET SURPRISE


ஒரு படம் அது வெளியாகும் முன்னமே இந்த படம் இப்படிதான் இருக்கும்னு நமக்குள்ள ஒரு கணக்கு இருக்கும்ல. அது அந்த படத்தோட மோஷன் போஸ்டர். டீசர்னு இப்படி ஏதாவது ஒன்ன பாத்து அப்படி நெனச்சி இருப்போம். ஆனா இந்த படத்தபத்தி நம்ம யாருக்குமே எந்த அபிப்பிராயமும் இருந்திருக்காது. காரணம் இப்படி ஒரு படம் வரபோறதே நம்மில் பல பேருக்கு தெரிஞ்சி இருக்க வாய்ப்பில்லை. ஆனா இந்த படம் கண்டிப்பா நான் தியேட்டர்ல பாக்க நெனச்ச ஒரே காரணம். இது துல்கரோட 25வது படம் அப்படிங்கற ஒரே காரணம்தான். புதுசா வர எந்த நடிகனுக்கும் ரொம்ப ரொம்ப முக்கியமா, கவனமா எல்லாமும் பாத்து பாத்து பண்ண வேண்டியது இந்த முதல் 25வது படத்துலதான். அதும் ஒவ்வொரு படத்தையும் ரொம்ப கவனமா பண்ற துல்கர் இந்த ஸ்கிரிப்ட்ட சாதாரணமா தேர்ந்தெடுத்து இருக்கமாட்டார் அப்படிங்கற நம்பிக்கைதான். அதும் புது டைரக்டர் வேற. ஆனா 100% ஜெயிச்சும் இருக்கார்.

உதாரணமா காக்க காக்க வரும்போது நமக்கு அந்த படத்தபத்தி என்ன அபிப்பிராயம் இருந்திருக்கும். மின்னலே பண்ணவர் அடுத்து ஒரு போலீஸ் ஸ்டோரி பண்றார். சூர்யா வேற செம்மையா இருக்கான். கண்டிப்பா பக்கா ஆக்ஷன் பேஸ் கதையாதான் இருக்கும்னு நெனச்சி இருப்போம்ல. ஆனா அதுல லவ் நமக்கு எவ்ளோ சர்ப்ரைசா இருந்தது. அப்படி டீசர் முதற்கொண்டு எதுமே பாக்காத இந்த படத்தோட போஸ்டர்ஸ் பாத்தா வெறும் லவ் சப்ஜெக்ட் அப்படிங்கற நெனப்போட போனிங்கனா அங்க உங்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் இருக்கு.
நம்ம சினிமா பாணில சொல்லனும்னா ரெண்டு IT Youngsters எப்படி இருப்பாங்க. அப்படி ஜாலியா செலவு பண்ணிட்டு சுத்திட்டு இருக்குற பசங்க. அதுல நாயகனுக்கு ரொம்ப எளிமையா நேர்மையா இருக்கும் நாயகிய ரொம்ப பிடிச்சி போய்டுது. அவங்களும் ஒருமாறி இவர ஏத்துகறாங்க. அப்பறம்தான் இந்த ரெண்டு பசங்களுமே ப்ராட்னு நமக்கே தெரியவருது. அப்பறம் என்ன இந்த விஷயம் அவளுக்கு தெரிஞ்சி. இவனவிட்டு போய். அப்பறம் அவன் திருந்தி நேர்மையா உழைச்சி முன்னுக்கு வந்து. கடைசியா ரெண்டு பெரும் ஒன்னு சேருவாங்கனு நம்ம நெனச்ச எதுமே இல்லாம போனது மட்டும்தான் இந்த படத்தோட வெற்றிக்கு பெரிய காரணமே.

அதும் நாயகியோட தோழியும் நாயகனோட தோஸ்த் லவ் போர்ஷன்லாம் கௌண்டர் ஹீரோக்கு தோஸ்தா நடிச்சிட்டு இருந்த காலத்துல இருந்திருக்கும் அதும் ஜோதி மீனா மாறி ஒன்னுதான் அவருக்கு ஜோடியா வரும். இந்த GENERATION நடிகர்கள்ல இப்படி ரெண்டு ஸ்மார்ட் பசங்களும் ரெண்டு க்குயூட் பொண்ணுங்களும் படம்பூரா இந்த நாளு பேரையும் பாக்கவே அவ்ளோ நல்லா இருந்தது. அதும் துல்கருக்கு தோஸ்த்தா நம்ம விஜய் டிவி ரக்ஷன் படம்பூரா வரமாறி பாத்திரம் வேற. படம்பூரா எங்கயுமே அவன் நமக்கு போர் அடிக்கவே இல்லை. ஆரம்ப கொஞ்ச நிமிஷங்கள் தாண்டிட்டா. படம் முடியும் வரைக்கும் எங்கயுமே திரைக்கதை எந்த பிடிப்பும் இல்லாம நொண்டி அடிக்கவே இல்லை.
கதைல நெறைய இடங்கள்ல ட்விஸ்ட் அது நமக்கு இன்னும் கூடுதல் சூவாரசியத்த கொடுக்க தவறவே இல்லை. அதும் எப்பவோ திரைல வந்திருக்க வேண்டிய கெளதம் மேனனுக்கு இப்பதான் ஒரு முழுநீள பாத்திரம். நல்ல வேலை அவர் படங்கள் போல மொக்க வாங்காம நல்லதா அமைஞ்சிடுச்சி. என்ன அதே கைல காப்போடவே இதே போலீஸ் வேடமே எல்லா படமும் பண்ணாம இருந்தா சரி.


இதே சென்னைலதான் பாதிபடம் போனாகூட எங்கயுமே LOCATION நம்ம ஏற்கனவே பாத்தமாறி இல்லாத இடங்களா பண்ணது. ஆன்லைன் ஷோப்பிங்ல இருக்கும் மொள்ளமாரிதனம் முதற்கொண்டு. ஹீரோ பண்ற எல்லா தில்லு முள்ளும் நமக்கு கோவமோ, சிரிப்போ வர வெக்காம கடைசிவரைக்கும் சூவாரசியத்ததான் கொடுத்திருக்கு. கண்டிப்பா ரொம்ப நாளைக்கு அப்பறம் வெறும் ஜாலியா மட்டுமில்லாம நெறைய SURPRISES இருக்கும்படியா ஒரு படம்.

2 comments:

Search This Blog