Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, October 14, 2019

FAMILY MAN (2019) – SEASON 01 – 10 EPISODES





WEB SERIES -003

பத்து வருஷங்களுக்கு முன்னவரை ஆக்ஷன் படங்கள் முழுக்கவே குடும்ப கதைகளை பின்னணியாக கொண்டே இருக்கும். அந்த Template அப்படியே எடுத்து. அதுல நாயகன் பாத்திரம் Raw  ஏஜென்ட்டா இருக்கும்படியா திரைக்கதை  பண்ணிருக்காங்க. சும்மா சொல்லகூடாது அது இந்த கதைக்கு செம்மையா பொருந்தியிருக்கு. அவருக்கு உளவுத்துறையை சார்ந்த பணி அப்படிங்கறதால நெறைய விசாரணை, துப்பாக்கி சூடு, கார் சேசிங், அந்நிய நாட்டு சதின்னு முழு சீரீஸ்ம் செம்ம விறுவிறுப்பா போகுது. இவ்ளோ சுவாரசியம் கதை முழுக்க இருந்தாலும் நம்மள கதையோட கட்டிபோட்ற மேஜிக்க அந்த குடும்ப பின்னணிதான் பண்ணுது.        


நாயகன் உளவுத்துறைல வேலைபாத்தாலும் ஆபத்து+ ரகசிய பணிங்கறதால வீட்ல அரசாங்கத்தில் க்ளார்க் பணியில் இருப்பதாக தெரிவித்திருப்பார். அவரின் மனைவியும் தொடர்ந்து ஒரே பணியில் இருந்து சலித்து. தன்னோட கேரியரும் வளர்த்துகொள்ள தனது நண்பனின் அலுவலகத்தில் சேர்கிறார். மேலும் இவர்களின் வயதுக்கு வந்த பெண் மற்றும் அவளின் சகோதரனும் சேர்ந்து அவர்களின் வயதுக்கு அதிக ஈடுபாடுடைய எந்த சாகசங்களும் இல்லாமல் அமைதியாக தன்னை வீட்டில் காட்டிகொள்ளும் தந்தையை பெரும்பாலும் கலாய்ப்பதும். மேலும் தங்கள் மகளின் வயதுக்கு மீறிய செயல்களில் பெற்றோர்கள் கிலியாவதும் என முழுக்க கடைசி Episode வரை நம்மை கட்டிபோடும் மேஜிக் இந்த குடும்ப பின்னணியே. இதன் மெயின்கதை  நாயகனின் பணி சார்ந்தது. அது வெறும் அக்சன், சேசிங் மட்டுமில்லாமல் தீவிரவாதிகள், ஜிகாதீஸ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரயா, பலுசிஸ்தான் என கதையும், லோகேஷன்ஸ்சும் நம்மை முதல் சீசன் முழுக்க பத்து எபிசோட்ஸ்ம் ஒரே மூச்சில் பார்த்து முடிக்கும்படி பல சூவாரசியங்களை கொண்டது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என  அனைத்து தரப்பினருக்கும் அறிமுகமான நட்சத்திரங்களை பயன்படுத்தி உள்ளனர்.


இவை அனைத்திலும் அதிக ஈர்ப்பு நாயகன் பாத்திரம் வடிவமைக்க பட்டவிதம். உதாரணமாக கதையின் துவக்கத்தில் தனது குழந்தைகளை பள்ளியில் விட்டு, நண்பருடன் தேனீர் என தாமதமாகவே அலுவலகம் வரும் இவருக்கு. அதன் பின்னான அவசர மீட்டிங்கில் Navy Guards யிடம் ஆயுதங்களுடன் பிடிபட்ட மூவரை கொச்சியிலிருந்து விமானத்தில் இங்கு அழைத்து வருகிறார்கள்.  அவர்களை அழைத்துவந்து விசாரிக்கும் பணி இவருக்கு ஒப்படைக்கபடுகிறது. விமான நிலையத்தில் மற்றொரு அதிகாரி தான் அழைத்துவந்து அவர்களை தங்களது அலுவலகத்தில் ஒப்படைப்பதாக முரண்டு பிடிக்க. நாயகனின் நண்பன் பாத்திரம் அதற்க்கு மறுப்பு தெரிவிக்கிறார். வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் நாயகனே பொறுபேற்க வேண்டிய சூழலிலும் அவர் நிதானமாக அமர்ந்திருப்பார்.
ஆனால் அவரது மகள் படிக்கும் பள்ளியில் இருந்து அழைப்பு வர. அதற்க்கு பதறிஅடித்து கொண்டு இந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கபடும் மூவரையும் அம்போயென விட்டு பள்ளிக்கு சென்று விடுவார். அங்கு தலைமை ஆசிரியரிடம் பேசிகொண்டிருக்கும் போது. அழைத்து செல்லும் வழியில் அந்த தீவிரவாதிகள் தப்பிவிட்டதாக இவர் நண்பர் மூலம் தகவல்வர.  இந்த நிலையையும் வெளியே தெரிவிக்க இயலாது. உடனே சென்றே ஆகவேண்டிய சூழலில் தன் மகளை பற்றி புகார் கடிதம் வாசித்து கொண்டிருக்கும் ஆசிரியரிடமிருந்து இவர் தப்பித்து வெளியேறும் காட்சியும். பின் தன் மகளை சஸ்பென்ஷனில் இருந்து காப்பாற்றும் காட்சிகளும் அதகளம்.


இதில் நாயகனாக மனோஜ் பாஜ்பாய் Aligarh போல முழு நீள பாத்திரமாகட்டும், Gangs of Wasseypur, Love Sonia போல கதையின் ஒரு சில இடங்களை நிரப்பும் வேடங்களாகட்டும் மிகசரியாக அந்த கூட்டத்திலும் தன் வேடத்திற்கு நியாயம் சேர்த்து செல்பவர். இதில் முழுக்க இவரை சுற்றி சுழலும் கதை. இந்த முழு சீசனிலும் எந்த காட்சியிலும் கதையோடு வெகு இயல்பாக பயணித்து அந்த கதை அந்த காட்சியில் யாரை தேடுகிறதோ அவரிடம் சேர்ப்பார். இதை அவர் அலுவலகத்தில் புதிதாக பணியில் சேர்ந்த பெண்னுக்கு இவருடனான காட்சிகள் வெகு குறைவு அதிலும். இவர் மனைவியோடு (பிரியாமணி) பேசும் வசனங்களிலும் நீங்கள் அடையாளம் காணமுடியும். அடுத்து எடிட்டிங் இவங்க குடும்ப பின்னணி. நாயகனின் அலுவல் அவரது நண்பன் மற்றும் புதிதாக பணியில் சேர்ந்த பெண், தப்பிய விசாரணை கைதிகள், அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் பாகிஸ்தான், காஷ்மீரிஸ் இவர்களது  சீனியர்ஸ் பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானை சேர்ந்த ஜீகாதீஸ் என்பதோடு மட்டுமில்லாமல் இந்த ஒவ்வொரு பகுதிகளுக்கு பின்னுள்ள கிளைகதைகளையும் மிக சரியாக எதன் பின் எது என்று கோர்த்த விதத்தில் பெரும் மலைப்பை எற்ப்படுத்துகிறார். 


அதன் பின்னே வசனங்கள் தற்போதைய அரசியல் சூழல் முதல். அந்த பாத்திரங்கள் ஏற்றிருக்கும் வேடத்திற்கு மிகபொருத்தமாக அமைந்திருக்கும். தீவிரவாதியை பற்றி துப்புதருவோருக்கு சன்மானம் என அறிவிக்கபட. அவனைபற்றி தகவல் தெரிவிக்கும் டீ கடைகாரர் இப்படி கேட்ப்பார். “ எல்லோருக்கும் 15 லட்சம் தரதா சொன்னிங்கன்னு பேங்க்ல அக்கௌன்ட்லாம் ஆரமிச்சேன். அதுமாறி இல்லாம சரியா கொடுத்துடுவிங்கள? நாயகன் காஷ்மீர் செல்லும் அதே நேரத்தில் ஒரு தீவிரவாதியும் அங்கு வருகிறார். இவர் அவருடைய அலுவல் வாகனத்திலும், அவன் அவர்கள் இயக்கத்தின் வாகனத்திலும் காஷ்மீரை பார்த்தபடியே தங்களது சீனியரிடம் பேசியபடியே செல்வர். இந்த வசனங்கள் மட்டுமே போதுமானது. இருவரும் கிட்டத்தட்ட ஒரே பகுதியைதான் பார்பாங்க. ஆனால் அவர்கள் இருவரும் வெளிப்படுத்தும் வார்த்தைகள் சொல்லும் அவர்களின் புரிதல்களை. பெரும்பாலும் நம் அனைவரும் இந்த இரு வசனங்களையுமே ஏற்றுக்கொள்ளும் படி அமைக்கபற்றதுதான் இதன் பெரும் சிறப்பம்சமே. சீரீஸ் ரசிகர்கள் நிச்சயம் தவறவிடகூடாத படைப்பிது. Scared Games, Mirzappur இரண்டு மட்டுமே இந்திய சீரீஸ்களில் பார்த்துள்ளேன். ஆனாலும் இந்த இரண்டிலும் மிக சிறந்ததாக என்னால் இதை பரிந்துரைக்க முடியும்.

No comments:

Post a Comment

Search This Blog