Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Saturday, October 5, 2019

அசுரன் (2019) – தமிழ் – வெற்றிமாறன்




பார்த்ததில் மிகவும் ரசித்தது: 149.


“வெற்றிமாறன்”  தன்னோட படைப்புக்களுக்கு இவர் தேர்ந்தெடுக்கும் களம். அதற்கான ஆய்வுகள். அதை ஸ்க்ரீன்ல எவ்ளோதூரம் அவரோட பாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மூலமா வெளிபடுத்தறார் அதுதான் அவரோட முழுமையான வெற்றி. அதும் இவரோட படைப்புகள் எல்லாமே ஏதோ ஒருவகையில் வன்முறையோடே இருக்கும்.  விசாரணைலகூட காவல்துறை செயல்படும் விதத்த அவர் அவ்வளவு நுணுக்கமா விவரிச்சதால தான் ஒரு தனிமனிதன் மேல உச்சபட்சமா அவங்க கட்டவிழ்த்த வன்முறையை கூட நாம எந்த கேள்வியும் கேக்காம ஏத்துக்கொள்ள ஒரே காரணம்.  இந்த வன்முறை, பழிவாங்கல் இல்லாத கதைகள் வியாபார ரீதியில் வெற்றிபெறாதுங்கற அடிப்படைல அவர் தேர்ந்தெடுக்கிறாரா? இல்ல ரத்தம் இல்லாம ரசிகர்கள் மனதை கனமாக்கும் படைப்புகள் அவரால கொடுக்கமுடியாதா? நமக்கு பிடிச்ச எந்த படைப்பாளிங்க கிட்டயும் கேக்க நமக்கு பல கேள்விகள் இருக்கும். வெற்றிகிட்ட எனக்கிருக்கும் ஒரே கேள்வி இது மட்டும்தான்.

அப்படிபட்டவர் இந்த முறை தொட்டது கிட்டத்தட்ட முழுக்கவே மனிதத்தோட பெரும் வன்முறையும் சரிவிகிதத்தில் வழிந்தோடும் வெக்கை நாவலை. ரத்த வீச்சம் இவரோட மற்ற படங்களை காட்டிலும் அதிகம் உணரும் இந்த கதையிலும் இந்த வன்முறைக்கு நியாயம் சேர்ப்பது இவரின் களமும், பாத்திரங்களின் பங்களிப்பும். சமீபமாக நல்ல இயக்குனர்கள் கூட தங்களோட கதை எதைபத்தி பேசினாலும் சம்மந்தம் இல்லாம ஜல்லிக்கட்டையும், விவசாயத்தையும் பத்தி ஒரேயொரு காட்சியோ வசனமோ இல்லாம படங்கள் பண்ணாத மாறியே. வலிந்து புகுத்திய வசனங்களும் காட்சிகளின் மூலமா ஒரு குறிப்பிட்ட பிரிவினரோட வாழ்கையை பதிவுபண்ணாங்க. அந்த படைப்புகள் எந்தளவு ரசிகர்கள் மத்தில தாக்கத்தை கொடுத்துச்சினு தெரியல. ஆனா முழுக்கவே விவசாய நிலங்களின் மேல அதிகார வர்கத்தின் சுரண்டலையும்,  தொழிலாளி வர்கத்தினர் ஜாதிரீதியாக படும் இன்னல்களை மட்டுமே கதையாக கொண்ட இந்த படத்தில். எந்த ஜாதியையும் உயர்த்தி பிடிக்கும் காட்சிகளோ , ஏன் ஒரு வசனமோ கூட இல்லாமல். பார்வையாளர்கள் மொத்த பிரிவினருக்குள்ளும் பெரும் பாரத்தை கடத்திய ஒரே காரணத்திற்கே தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய படைப்பிது.

தன்னோட கதை என்ன. அதற்கு எந்தளவு நியாயம் செய்யும்படியான காட்சிகள். வசனங்கள். பாத்திரங்கள்னு அதுக்குள்ள மட்டுமே இவர் பயணிச்சி இருக்காரா. எங்கயும் ஒரே ஒரு ஷாட்கூட தேவையில்லாம வசனமோ இவர் சேர்க்கவே இல்லையா? உதாரணத்துக்கு இந்த படத்தில் இருந்தே ஒரே ஒரு காட்சி எந்த விளக்கமும், விரிவான தோரணைகள் எதுமில்லாம பாக்கலாம். அதிகார வகுப்பினரின் வீடு வீடாக சென்று நாயகன் மன்னிப்பு கேட்கும் காட்சி. அதில் ஒரு வீட்டின் வாசலில் குனியும் போதே பதறி அந்த வீட்டுகாரர் இவர் கையைபற்றி இதெல்லாம் வேண்டாம்னு காலில் விழுவதை தடுப்பார். அவர் கருப்பு சட்டை அணிந்திருப்பார் அவ்ளோதான். இதான் வெற்றிமாறன்.

அடுத்ததா இவர் கதையில் சும்மா ஊறுகாய் அளவுதான் காதல் இருக்கும் அதும் பெருசா நம்மள ஈர்க்கும் படில்லாம் இருக்காது.  வன்முறை அளவு இவர் காதலை தொட்டதில்லை. அதும் ஏதோ வியாபாரத்திற்க்காக மட்டும்தானு ஒருபேச்சு. இவர் கதையில் விசாரணை தவிர்த்து காதலுக்கு பெருசா எந்த முக்கியத்துவமும் இல்லாத இந்த படத்தில் இருந்தே உதாரணம் சொல்ல முடியும். இந்த படத்தில் கூட பேச்சியம்மா, மாரியம்மானு ரெண்டு பெண்கள் இருக்காங்க. ஒருத்தி முழுக்க நெருப்புல வெந்து. அடுத்த சில வினாடில உயிர் பிரியற நேரத்துல நாயகனிடம். தன்னோட முழு ரணத்தையும் தாங்கிகிட்டு இப்படி கேப்பா.


“மாமா, நீ என்கூட எப்படிலாம் வாழனும்னு ஆசைபட்டியோ, அத அப்படியே சொல்லு மாமா. நா அதை கேட்டுகிட்டே சந்தோசமா செத்து போயட்றேனு.. ஒரு ரெண்டு மணிநேர காதல்படம் கொடுக்க கூடிய பெரிய வலியை இந்த ரெண்டு வரி வசனம் கொடுத்திடும் – தொடரும்...

2 comments:

Search This Blog