Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, May 2, 2017

Maheshinte Prathikaaram (2016) -



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 073.
நமது படங்களில் வைக்கப்படும் முதல் ஷாட் பொதுவாக ஒரு கோவிலில், சூரியஉதயம் அல்லது அந்த கதையில் இறுதிவரை வரும் ஒரு துணை கதாபாத்திரம் கூறும் (இன்னக்கி நாள் ரொம்ப நல்லா இருக்கு, இந்த வருஷம் வெளச்சல் அமோகமா இருக்கும்) பாசிடிவ் வசனங்கள் இந்த நிலையும் மாறி (எங்க இன்னும் மாறல) ஒளிப்பதிவாளர்கள் பெயரை திரையில் பார்த்தாலே பெருவாரியான ரசிகர்களிடமிருந்து கைதட்டல் பெறுமளவு விளங்கிய குறிப்பாக அந்தளவு ரசனையான ரசிகர்கள் நிறைந்திருந்த காலக்கட்டத்தில் வந்த பிசிஸ்ரீராம் மற்றும் பாலுமகேந்திரா படங்களின் (பெரும்பாலான) முதல் ஷாட் நேச்சுரல் ஷாட்ஸ்களாக நம்மை மெய்சிலிர்க்க வைத்தன. மூடுபனி மற்றும் இதயதாமரை இன்றும் நினைவிலுள்ள படங்கள், பின் வந்த யதார்த்த சினிமாக்களின் காலக்கட்டத்தில் இந்த சாயல் ஏதுமில்லாமல் அவர்கள் எடுக்க படும்பாடு நம்மையும் பெரிதும்படுத்துகிறது.
மேற்கூறிய எந்த சாயலும், பெரும் பிரயத்தனமும் இல்லாமல் சமீபநாட்களில் பார்த்த படங்களில் FANDRY யின் இறுதி ஷாட் ஏற்படுத்திய அதிர்வுக்கு பின் பெரிதும் ஈர்த்த முதல் ஷாட் எந்த வசனமும் இன்றி அந்த பாத்திரத்தின் குணநலனை உணரவைக்கும் படியான, யதார்த்த சினிமாவின் திரைமொழி பெரும் பங்கு அமைந்த படம்.
வயதான தந்தை, சொந்தமாக ஒரு போட்டோஸ்டுடியோ, காதலிக்க வெளியூரில் தங்கி படிக்கும் ஒரு பெண், அவளது பிரிவுக்கு பின் அமையும் இன்னும் சுந்தரமான தன்னை ஆழமாக உணர்ந்த பெண்ணுடன் காதல் + திருமணம் என்ற சாதா கதையில் (முதல் ஷாட் சிலாகிக்கபட்டது போல் பெரும்பான்மை காட்சிகள் இல்லாத போதும்) நம்மை வசீகரிக்கும் உருவாக்கல் பாத்திரங்களின் குணநலமுடன் நம்மையும் சேர்த்து பயனிக்கவைக்கும் அழகிய பதிவு இந்தப்படம் .
தந்தை மட்டுமே தனது வாழ்வின் முழுமைக்கும் தன்னை இந்த இடம் வரை கொண்டுவந்தவர் தாயில்லாமல், என்பதை படத்தில் வசனங்கள் இல்லாமல் பார்வையாளனுக்கு மேரி மாதாவை வணங்கும் காட்சியில் அருகிலேயே தனது தாயின் அவனது ஒத்தவயதுள்ள படம் ஜஸ்ட் ரெண்டு செகண்ட் ஷாட்டில் புரியவைப்பது, வயதான தந்தைக்கும் பெரும் சமையல் வல்லுநர் அல்லாத நாயகனே சமைக்கும் காட்சி உடைக்கும் தேங்காயை நீரை சிந்தியபடியே குடிப்பது, சாதம் வெந்ததை சோதிக்கும் காட்சி சொல்லும், தன்னுடனே பயணிக்கும் பாத்திரத்தின் குடும்ப சூழல் அவர் நாயகனுடன் இணக்கமானது, நாயகனுக்கும் அவரும் அவரின் மீது ப்ரியம் உண்டானதுக்கான காரணம் கூறும் இரண்டு ஷாட்ஸ், சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்கு வீடியோ கவரேஜ் தான் நாயகனின் பணி, நாயகனின் நிலமும் அந்த நிலம் சார்ந்த தொழில்களை கூறும் ஷாட்ஸ், அவனது புன்னகை, மனநிறைவு சூழ்ந்த அவனுடன் பயணிக்கும் பாத்திரத்தின் குடும்ப உறுப்பினர்களுடன் அவனுக்கான நெருக்கம் என மேற்கூறிய நாயகனும் அவனை சூழ்ந்த பாத்திரங்களும் என அடுத்த இரண்டு மணிநேரம் அவனுடன் பயணிப்போரின் தகவல்களை எந்த வசனங்கள், தேவையற்ற காட்சி சொறுகள்கள் ஏதுமின்றி இரண்டு நிமிட டைட்டில் கார்ட் + மயக்கும் ஒரு மேலோடியின் மூலமே கூறியவிதம் என நம்மை சில நிமிடங்களில் ஆட்கொள்ளும் இந்த மாயஜாலம் பெரும்பாலோரை ஈர்க்கும் என்பதில் ஐய்யமேதும் இல்லை.

No comments:

Post a Comment

Search This Blog