Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, May 2, 2017

Action Hero Biju (2016) - இறைவிகளை தொழும் வேட்டைக்காரன்



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 075.

இறைவிகளை தொழும் வேட்டைக்காரன்.

இந்த வேலை இல்லனா ஒரு சூப்பர் மார்கெட், இல்ல!! ஒரு மளிகை வெச்சி கூட பொழச்சிபன் எனக்கூறும் போதும். அந்த சின்ன கிராமத்தில் இருந்து சென்னைக்கு பதவிஉயர்வுடன் இடமாற்றமும் கிடைக்க, தனது குடும்ப உறுப்பினர்களை பிரிந்து செல்ல இயலாமல் தயங்கி நிற்கும் கணங்கள். காவல் துறையில் தனது பணிக்காக அனைத்தையும் இழந்தும் கடமையை மட்டுமே கண்ணாக கொண்ட நாயகர்களை மட்டுமே பார்த்து பழகிய நமக்கு. நாம் பார்க்க தவறிய, தமிழ் சினிமா கட்டாயமாக தவிர்த்த எளிய மனங்களின் ரணங்களுக்கு மருந்திட்ட ஒரு காவல் அதிகாரியின் சாதாரண பகுதி.


நாயகன் காவல்துறையை சார்ந்தவன் என்றாலே பெரும் கொலை, கொள்ளை, உலக மகா ஊழல் அரசியல்வாதிகள், நாட்டில் ஒற்றுமைக்கே கேடு விளைவிக்கும் தீவிரவாதிகளை, தனது துறையின் உதவிகூட இல்லாமல் தனி மனிதனாக சென்று வென்று வாகை சூடும் சினிமாக்களுக்கு மத்தியில். அன்றாடம் காவல்துறை சந்திக்கும் கடைநிலை மனிதர்களின் பிரச்னைகளை மட்டுமே கூறும் படம்.


காவல் நிலையத்தில் தனது கீழ் பணிபுரியும் காவலர்களிடம் இன்முகத்துடன் ஒவ்வொருவரின் அன்றாட பணிகள் குறித்து நாயகன் கேட்க்கும் பாங்கு. சிறு தனியார் நிறுவனத்தில் தனக்கு சம்பளம் வழங்கபடாத புகார் குறித்து கனிவுடன் கேட்க்கும் இடம். பள்ளி செல்லும் சிறுமியை நாய் கடித்த புகாரில் அதற்க்கு காரணமானவர் பெரும் செல்வாக்கானவர் என்ற நிலையிலும் ஆக்ரோத்தசுடன் தலைமறை ஆனவரை கைதுசெய்து தண்டனை வாங்கி தருவது.


தன் பக்கத்து வீட்டுகாரர் வரம்புமீறல் குறித்த புகரில், அவனது அடையாளங்களை கேட்க்க, ஆள் குள்ளமா!! கருப்பா!! சுமாரா இருப்பான் என கூறும் பெண்மணியிடம். அப்ப அவன் நல்ல இருந்தா சேச்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லாதான என நக்கலாக நாயகன் கேட்க்கும் இடத்தில் அந்த நடுத்தரவயது பெண் அசடுவழியும் இடம். ஒரு கதையும், இயக்குனரும் கேட்பதை நிறைவு செய்யும் பாத்திரங்கள் மட்டுமே அந்த கதையில் நாயகர்கள். நாயகனிடம் புகார் தரும் ஒவ்வொரு பெண்களுமே அந்ததந்த காட்சியின் நாயகர்கள். தனது பாத்திர தேர்வு, கதையில் அவர்களை வடிவமைத்த விதத்தில் நம்மை ஈர்த்த 1983 இயக்குனர் அப்ரிட் சினே இதில் மேலும் நம்மை வசீகரிக்கறார். நிவின் எது, எவ்வளவு, எப்படி செய்தால் சரிவரும் என்பது இவர் அளவு நிவினுக்கு தெரியுமா என்பது ???


தனது மனைவி காணாமல் போனதாக புகார் அளிக்க வருபவரிடம் அவரது விபரங்களை கேட்க்க, அவள் தனது நண்பனுடன் இருப்பதாக கூறவும். அந்த பெண்மணியிடம் அவள் கணவனின் விபரங்களை கேட்க்க அவரிடம் எந்த கெட்ட பழக்கங்களோ, குறையும் இல்லை. ஆனால் தான் அவருடன் செல்ல விரும்பவில்லை. சரி என்னோட குழந்தையாவது என்னிடம் கொடுத்து விடுமாறு கணவன் மன்றாட, வாக்குவாதத்தின் இடையே அது உன்னோட குழந்தையே இல்ல!! என சொன்னவுடன் அதிர்ச்சியில் உடைந்து அந்த சிறுமியை இறுதியாக இழுத்தனைத்து முகத்துடன் முகம் புதைத்து அழும் அந்த கணவன் கூறாமல் சென்ற வார்த்தைகளும் விடயங்களும் நிறைய.
ஒரு போலீஸ் கதையில் ஒரு பிரேம் மட்டுமே வந்து போகும் அரசியல்வாதி. பெண் மற்றும் ஆண் காவலர்கள் பணிபுரியும் காவல் நிலையத்தில், அவர்களிடையே வலிந்து திணிக்கப்பட்ட இரட்டை அர்த்த வசனங்களோ காட்சிகளோ இல்லாத சினிமா.


மேலும் பல சுவாரசிய புகார்களும், நம்மால் அடுத்த காட்சிக்கு உடனே செல்ல இயலாத சம்பவங்களின் சரியான கோர்வை இத்திரைப்படம்.

No comments:

Post a Comment

Search This Blog