Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Tuesday, May 2, 2017

Ek Hasina Thi (2004 ) - ஒரு பார்வை


பார்த்ததில் மிகவும் ரசித்தது : 072.


அறையிருட்டான முக்கால்பாகம் சிதிலம் அடைந்த இருட்டு அறையில் கடமைக்கு சமைக்கப்பட்டு அலுமினிய தட்டில் வழங்கப்பட்ட உணவை எலி அருந்திகொண்டு இருக்க.  அறையின் மூலையில் ஒரு தீர்க்கமான முடிவுடன் அமர்ந்திருக்கும் ஊர்மிளா. ஒரு நாயகியால் ஒரு முழு திரைப்படத்தையும் இன்றைய சூழலில் சுமந்து செல்ல, பார்வையாளர்களை கதையின் போக்கில் பிடித்து வைக்க, வெறும் உணர்வுகளை மட்டுமே கொண்டு கட்டிபோட வாய்ப்புகள் அதிகம். ஆனால், கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய சினிமாவின் போக்கில் அது சாத்தியப்பட்டது வெறும் இந்த நாயகியால் மட்டுமல்ல.  உணர்வுகளுக்கு கால்பங்கு மட்டுமே அளவுள்ள மீதம் முழுதும் பழிவாங்கல். அதும் ஒரு அப்பாவி பெண் அந்த நகரின் மிகப்பெரும் GANGSTER - ன் வலக்கரத்தை துளியும் நம்பத்தகாத வழிகள் ஏதுமின்றி இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பின் பார்க்கும் பார்வையார்களும் ஏற்றுக்கொள்ளும் அதிவேக அசாதாரண திரைக்கதை.


பெண்கள் சிறையில் தீர்க்கமான முடிவுடன் அமர்திருக்கும் நாயகியின் சிலமணித்துளி முந்தைய பக்கங்கள் நோக்கி நகரும் திரைக்கதை.  இதில் மிக நாகரிக பெண்ணாக, டிராவல்ஸ் அலுவலகத்தில் பணிபுரியும், அபார்ட்மெண்டில் தனி பெண்ணாக வசிக்கும் நாயகியை அடிக்கடி வெளி நாடுகளுக்கு பணியின் நிமித்தம் செல்லும் நாயகன் சந்தித்க்க, சிலபல சந்திப்புகளில், சிலபல உதவிகளில், நெருக்கம் அதிகரிக்கிறது.  யாரையும் வசீகரிக்கும் தோற்றத்துடன், நேர்த்தியான உடை, எப்பொழுதும் உதட்டிலிருக்கும் புன்னகை என நாயகன் மீது காதல் வயப்படுகிறார். முழுதும் நம்பிக்கையுடன் சிறிதும் சந்தேகம் இன்றி அவனது அண்டர் கிரௌண்ட் பணிகளில் அவளை பயன்படுத்தி கொள்கிறான்.


திடுக்கிடலுடன் நடக்கும் ஒரு சம்பவத்தில் சுதாரிக்க சில நிமிடங்கள் அவகாசம் அற்ற நிமிடங்களில் காவல் துறையால் கைது செய்யப்படுகிறாள். விசாரணையில் தனது பேரை நாயகி பயன்படுத்தாமல் இருக்க அவள் நம்பும்படியான விதத்தில் அவள் சார்பாக ஆஜராகும் வக்கீல் மூலம் நம்பவைக்கப்பட்டு சிறைக்கும் செல்கிறாள். அங்கு பெரும் செல்வாக்குடன் வளம் வரும் பெண்ணால் தனது சரியான நிலையை உணர்ந்து ஒரு தீர்க்கமான முடிவுடன் தனது ஏழு வருட தண்டனை காலம் வரை பொறுக்க முடியாமல் சிறையிலிருந்து தப்பித்து நாயகனை அவனது வழியிலே பழிவாங்கும் படலமே....


முதலில் பெண்கள் சிறை என்ற கதைகளமே நாம் இந்திய சினிமாக்களில் அதிகம் காணாதது.  நம்மை அதிகம் ஈர்க்கும் ஒரு களம். அதில் நடக்கும் சிறு கைகலப்பு, ஆயுத பதுக்கல் இவையாவும் அதிகம் நாம் பார்ததானாலும் பெண்கள் சிறை என்ற புது களமும் + அங்கிருந்து தப்பிக்க அவள் & கோ எடுக்கும் முயற்சிகள் என முதல் பாதி சென்றாலும் அதை அவ்வளவு சுவாரசியமாக கொண்டு செல்லும் திரைக்கதை.  வெளியில் வந்து நாயகனை அவனது வழியிலேயே பழிவாங்கும் அதிவேக திரைக்கதை மேலும் அசத்தல்.


நாகரிக பெண்ணாக, எலியை கண்டால் கூட பெரும் கூச்சலிடும் அப்பாவியாக. நீதிமன்றத்தில் தயக்கத்துடன் பதிலளிக்கும் பலிகடாவாக. உடலின் சர்வமும் நடுக்கத்துடன் முதல்முறை சிறைசாலை எனும் புது உலகத்தில் காலடி எடுத்துவைக்கும் இடம். சிறையில் நண்பர்கள் உதவியுடன் பெரும் போராட்டத்தில் தப்பித்து அவர்களின் உதவி மூலம் ஒரு கைத்துப்பாக்கியை வாங்கி கொண்டு திமிருடன் நடக்கும் இடம். தன்னை நிழல்போல் தொடரும் காவல்துறையை மீறி நாயகனை சந்தித்து அவனிடம் தனது பழைய காதலுடன் காதலியாகவே நடிக்கும் இடம். அந்த பெரும் GANGSTER யை கொன்றதாக பெரும் படை நாயகனை சூழ அதற்க்கு காரனகர்தாவான நாயகியை அடித்து அவர்களிடம் ஒப்படைக்க,  அவர்களிடம் தன்னை சூழ்ந்துள்ள துப்பாக்கிகளில் தன்மீது சிறு சந்தேகம் ஏற்ப்பட்டாலும் நடைபெறும் விபரீதம் உணர்ந்து கதறும் இடம். சிறையில் தன்னை சந்திக்க வரும் பெற்றோர்களிடம் அந்த பெரும் கூட்டத்தின் இறைசல்களுக்கு இடையே நடுவில் உள்ள தடுப்புகளையும் தாண்டி தான் குற்றமட்டவள் என தனது பெற்றோர் மற்றும் இந்த சமூகத்திற்கு பெரும் கூச்சலுடன் உணரவைக்க முயலும் இடம் என முழுக்க தன்னை மட்டுமே சூழ்ந்துள்ள கதையில் தன்னிலை தன் பாத்திரம் உணர்ந்து தனது பங்களிப்பை பூர்த்தி செய்யும் ஊர்மிளாவிற்கு இந்த முறை சற்று கூடுதலான பொறுப்பு. அதை சற்றும் குறைவின்றி அவ்ளோதான் இருக்கணும்னு நாம் நினைக்கும் அளவில் துளியும் குறைவோ குறிப்பாக அதிகமும் இல்லாத பங்களிப்பு அற்புதம்.

இது ஏதோ முழு கதையும் கூறியது போல தோன்றினாலும் பெரும் ஆச்சர்ய திருப்பங்களும், நேர்த்தியான பாத்திரங்களும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்த்தாலும் நம்மை வியக்க வைக்கும். ஒரு அறிமுக இயக்குனர் அதுவும் 2௦௦௦ காலக்கட்டத்தின் இந்திய சினிமாவின் போக்கில் இருந்த அதே GANGSTER களத்தை கையில் எடுத்திருந்தாலும் நாயகியை பிரதான பாத்திரமாக்கி அதை நேர்த்தியாகவும் செய்ததில் உள்ளது அவரது வெற்றி.  அவருக்கே தெரியாது அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின் 2௦17ல் வெளியாகும் ஒரு தமிழ் வெற்றிபடத்தின் இயக்குனர் தனது டைட்டில் கார்ட் FILMOGRAPHY ல் பதிவிடும் ஏழு படங்களில் இரண்டு தன்னுடைய படங்கள்  வரும் என்று.

No comments:

Post a Comment

Search This Blog