பார்த்ததில் மிகவும் ரசித்தது : 080.
வாழ்வில்
எந்த நோக்கமும் இல்லாமல், தனது செயல்கள் அனைத்திலும் பெரும்பாலும் பெண்கள்
சார்ந்தே வாழப்பழகிய நடுத்தர வயது, நல்ல வசதிபடைத்த, அட்டகாச ரசனைகாரனது
வாழ்வின் சில அத்யாயங்களே...
ஒரு இரவில் தனது அறைக்கு வரும் பெண்ணிடம், விளக்கில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றச்சொல்லி, தான் சிறிது போதை ஏற்றிக்கொள்கிறான். அந்த விளக்கை வாங்கி தனது தலைமாட்டில் வைத்து நான்தான் உனது தந்தை, நான் இறந்துவிட்டால் எவ்வாறு அழுவாய் என கூறி விட்டு படுத்துக்கொள்கிறான்.
முதலில் திடுக்கிட்டு, தடுமாறி, தயங்கி தனது வாழ்வின் கறுப்பு பக்கங்களை நினைத்து பெரும் குரலெடுத்து அழும் அப்பெண்ணின் ஓலம்.. சொந்தமென யாருமில்லா தனது தனிமையை பெரும் பொழுது இதுபோன்ற பெண்களுடனே வாழ்ந்து பழகியவன். எதிர்காலத்தில் தனது மரணம் குறித்த கவலை என இருவேறு எரிமலை அளவு உணர்ச்சிகளை ஒரு சிறு அறையில் வைத்து படத்தை துவக்கும் இயக்குனர்...
ஒரு இயக்குனர் தனக்கென எந்த அடையாளமும் இல்லாமல் அனைத்து களங்களிலும், அனைத்து வகையான கதைகளிலும் நீரில் மூழ்கிய கல்லைப்போல முழுமையாக அமிழ்ந்து எழுந்தால் தான் அவர் மிகச்சிறந்த இயக்குனர். என்ற எனது எண்ணத்தை வெறும் தனது இந்த இரு படங்களின் மூலம் மட்டுமே சுக்கு நூறாக நொறுக்கிய இயக்குனர் திரு.ரஞ்சித்...
தனது கதையின் கடைசி ஷாட்வரை கதை எவ்வாறு முடியும் என பார்வையாளனை குழப்புவது பெரிய விசயமல்ல. கதை எதை நோக்கி செல்கிறது என ஒருவராலும் யூகிக்க இயலாவண்ணம் கதையை நகர்த்துவது... அவரது முந்தைய படத்தில் செய்த அதே யுக்தியை. அதனினும் பெரிதாக, அதிலிருந்த தொய்வு சிறிதும் இல்லாமல் இந்த முறை ஒரு அசூர பாய்ச்சல். முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் தனது பிரத்தியேக அடையாளத்துடன் இணைந்துள்ளார். இதற்காக இவர் தொட்ட விடயங்கள் நிச்சயம் மலையாள திரையுலகம் மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவில் மிக தைரிய முயற்சி.
நாயகன் என்ற ஒற்றை மனிதரை மட்டுமே பெரும்பாலும் நம்பும் இவரது கதைகளில் மம்மூட்டி சாதாரணமாக கடந்தது பெரும் விசயமன்று. அதனினும் ஆழமான இந்த கதையை பிஜுமேனன் அனாவசியமாக கடந்துள்ளது...

No comments:
Post a Comment