பார்த்ததில் மிகவும் ரசித்தது : 077.
“நம்மளோட சாதிக்காகவே கடைசிவரை கஷ்டப்பட்டு உயிரை விட்ட நம்ம அய்யாவோட சிலைய நிறுவவும் நம்ம புது செயலாளர அறிமுகப்படுத்தவும் தான் நம்ம இங்க கூடிருக்கோம்”. இந்த அறிமுக காட்சில 1999 காலக்கட்டத்தில் துவங்கும் சாதாரண கதை கூட்டம் முடியறப்ப வர பிஜிம் மூலமா அசாதாரன கதையா மாறுவதற்கு உண்டான முதல் அறிகுறி தென்படுகிறது.
ஒரு நடுத்தர நகரத்தின் ஒதுக்குபுறமாக அமைந்த தனியார் பொறியியல் கல்லூரி + விடுதி + அதன் அருகே அமைந்துள்ள ஒரு தாபா + சில வெகு சாதாரண கதாபாத்திரங்கள் என ஒரு பரபரப்பான ஷார்ட் பிலிம் மட்டுமே எடுக்க சாத்தியமான கதைக்கரு. ஆனால் சில நிமிடங்கள் கூட சலிப்பேற்படுத்தாத அதிவேக மிரட்டல் திரைக்கதை.
அந்த நடுத்தர நகரத்தில் ஒரு ஜாதி சங்கம் சில சுயநல நபர்களின் ஆதாயத்திற்காக ஜாதி கட்சியாக உருவெடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீட்டப்படும் திட்டத்தில் துளியும் சம்பந்தம் இல்லாத நான்கு கல்லூரி மாணவர்களின் வாழ்வு சிதைக்கப்படும் அவலம் இந்த படம்.
காதல் திரைப்படங்களின் பாடல் காட்சிகளே இயக்குனராக இவர் தேறுவாரா மாட்டாரா என எடைப்போட சுலபவழி. இருவருக்கும் இடையேயான காதலின் நிலையையும் அந்த பாடல் + கதைக்களம் அமைந்த சூழலையும் சுவாரசிய காட்சிகளால் நிரப்பினாலே அந்த இயக்குனரின் நிலையை ஓரளவு ஊகிக்க இயலும். அந்த வகையில் படம் துவங்கிய சில காட்சிகளிலே வரும் பாடல் இந்த இயக்குனருக்கான முதல் நற்சான்று.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் தாபாவில் நாயகன்&கோ மது அருந்துவது போன்ற கதையின் சூழலை, நமக்கு அலுக்காத வண்ணம் கதைக்கு சற்றும் மிகாத பாத்திரங்கள் மூலம் நிறைவுசெயதது. பொதுவாக குடிப்பது போன்ற எந்த காட்சியிலும் பாத்திரங்கள் மிக கவனமாக மது புட்டியை எடுத்து செல்லும் காட்சி நம் மனதில் நினைவில் வரும். ஆனால் தினமும் இக்கதையில் குடிப்பது போல் வரும் பாத்திரங்கள் அனைவரும் வெகு சாதாரணமாகவும் லாவகமாகவும் மது புட்டியை கையாளுவதும், குடிக்காத பாத்திரங்கள் மது புட்டியை கையாளும் விதம் என மதுபானக்கடை படத்திற்குபின் சரியாக மதுபானத்தை கையாண்ட விதம் மிகஅருமை.
மகிழ்திருமேனி, பன்னிர்செல்வம் போன்று action கதைகளுக்கு முக்கியத்தும் தரும் கமெர்சியல் இயக்குனர்கள் மயிரிழையில் தவறவிட்ட பெரும் வெற்றிக்கான சூத்திரங்கள் இந்த படத்தின் உருவாக்கத்தில் புதைந்துள்ளது.
இந்த படத்தில் கையாளப்பட்ட ACTION SEQUENCEகளை பற்றி விவாதிக்க சரியான நபர்கள் கிடைத்தால் நாள் முழுக்க போதாது என்பதே உண்மை. சிறு ரசிகனின் பெரும் விருப்பம் யாதெனில் நாயகனாக ஜொலித்த எந்த இயக்குனரும் அவர்களது ஆரம்பகால தரத்தை நாயகனான பின் தந்ததே இல்லை என்பதே உண்மை.
இந்த வெற்றியின் மூலம் தாங்கள் அடுத்து எடுத்து வைக்கும் படி கண்டிப்பாக இதற்கும் மேலேதான் இருக்கும் என்ற காரணத்தால் இயக்குனராகவே எங்களை நிறைவு செய்யும் படி இந்த படத்தை ரசித்த, ரசிக்கும் அனைத்து பார்வையாளர்களின் சார்பாக கேட்டு....
அந்த பாடல் காட்சியில் நாயகியின் டெஸ்கில் நாயகன் ILU எழுதிகிறார். அவள் அதை அழிக்க இயலாமல் அதன் மீது INK ஊற்றிவிடுகிறார். அடுத்த நாள் வகுப்பில் அந்த ஊற்றிய INK யை HEART வடிவத்திற்கு மாறியுள்ளதை கண்ட நாயகி நாயகனை காணும் காட்சியில், INK அப்பிய விரல்களால் தாடையை தாங்கிக்கொண்டு குழி விழுந்த கன்னத்தோடு அந்த சிரிப்பு......
துளியும் ஆக்சன் கலக்காத சுத்தமான காதல் கதையில் நாயகனாக நடிக்கும் முழு தகுதி உன்கிட்ட இருக்குப்பா.
சேலம் GCE ல் தான் இவர் ENGG முடித்து இருப்பதற்கான அறிகுறி கதையில் சில இடங்களில் தென்படுகிறது. அது எப்படிப்பா பீர் பாட்டில் கார்க் 7up பெட்பாட்டில் கப் வழியா ஓபன் பண்றீங்க. சுரேஷ் கிருஷ்ணாவின் சத்யா, RGV ன் உதயம் படங்களுக்கு பின் பல வருடங்களாக ஏற்ப்பட்ட பெரும் பள்ளத்தை நிரப்படாமலே போய்விடுமோ என்று நினைத்தவர்கள் அனைவருக்கும் முதல் முயற்சியிலே அதற்கான பெரும் மெனக்கடலுடன் களம்கான வந்த இந்த புதியவர் ஆரத்தழுவி வரவேற்கலாம்.
No comments:
Post a Comment