பார்த்ததில் மிகவும் ரசித்தது : 079.
கருங்கல்லை கதைக்கு மூல பாத்திரமாக்கி, அதன் நிறத்தை கதை நிகழும் களத்தின் ஒளிவடிவமாக்கி, அதன் ஒழுங்கற்ற வடிவத்தை பார்வையாளர்களின் எண்ண ஓட்டதில் புகுத்தி, இவர்கள் தந்தது நிச்சயம் அந்த கல்லை போலவே ஒரு கனமான சினிமா.
1983 மும்பை 1987 கல்கத்தாவில் குறிப்பிட்ட ஒருசில பகுதிகளில் நடைபாதையில் தனிமையில் உறங்குவோர் தலையில் கருங்கல்லை போட்டு தொடர்ச்சியாக கொலைசெய்யபடுகின்றனர், இன்றும் அதற்கான காரணகர்த்தா யாரென தெரியாமல் நிலுவையில் உள்ள உண்மை சம்பவத்தின் காரணத்தை அலசும் சினிமா.
ஒரு நெகிழ செய்யும் குட்டி கதையுடன் துவங்கும் படத்தின் முதல் ஒன்பது நிமிடங்களுக்கு பின் வரும் டைட்டில் கார்டுக்கு முன்பே ஒரு தெளிவான கதையையும், அது செல்லும் பாதையையும், பாத்திரங்களின் குணாதிசயங்களும் மிக அழுத்தமாக நமக்கு உணரவைக்கப்படுவதிலே நம்மை தொற்றிகொள்ளும் ஆர்வம் இறுதி ஐந்து நிமிட காட்சிக்கு முன்புவரை கூட்டிசென்ற வகையில் ஒரு நல்ல THIRLLER சினிமா.
எந்த குறிப்பிட்ட காலகட்டத்தை சொல்லும் நல்ல சினிமாவும் அதன் நிறம், ஒளி, இசை, உடை, பேச்சு, கலை என நம்மை அந்த காலக்கட்டதிற்கே கூட்டி செல்ல முயற்சிக்கும். ஆனால் அப்படத்தின் தரம் அதை உருவாக்கும் காலக்கட்டத்திற்கு சமமாகவே இருக்கும். ஆனால் இப்படத்தின் தரம் திரைக்கதை உட்பட அனைத்தும் எண்பது இறுதிகளில் வெளிவந்த நல்ல படங்களை ரசித்த மனநிலையையே தரும்.
இந்த கொலைகளை விசாரிக்க வரும் காவலரின் வாழ்வில் நிகழும் சம்பவங்களும், தனது அருகிலேயே சுற்றிவரும் கொலையாளியை பிடிக்க படும் சிரமங்களும், அவரது குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களும், தான் பிடித்த கொலையாளியையும் தன்னால் நிரூபிக்க இயலாமல் படும் வேதனைகளும் என தனது பாத்திரத்தின் முழுமையை தொட்டுள்ளார் கே கே மேனன்.
எந்த காலக்கட்டத்தின் நல்ல திர்ல்லர் சினிமாக்களிலும் பரபரபிற்கு பஞ்சம் இருக்காது. ஆனால் அனைத்து ரசிகனையும் தனது தலையிலும் கல் விழுந்து விடுமோ என பயமுறுத்திய திரைக்கதையும் இசையும்...
No comments:
Post a Comment