பார்த்ததில்
மிகவும் ரசித்தது : 110.
கிட்டத்தட்ட
திருமணத்திற்கு இருபது ஆண்டுகளுக்கு பின் குடும்பம் குழந்தைகள், வேலை
என்றிருக்கும் ஒரு நாற்பத்தைந்து வயது குடும்பத்தலைவன். எதன்மீதும் ஈடுபாடில்லாமல்
தன்னுள் முழுக்க பரவியுள்ள வெறுமையும், திடிரென வேறொரு பெண்ணின் மீது ஏற்படும்
ஈர்ப்பும். தான் எந்த புள்ளியிலிருந்து இவ்வாறு மாற தொடங்கினேன் + இதற்கான மாற்று
என்ன என்பதற்கான அவனது உளவியல் ரீதியான தேடலே இப்படம்.
உளவியல்னு
சொன்னவுடன், அய்யோ!! “பேசியே சாகடிப்பாங்கனு பயந்து ஓடிடாதிங்க. அவரோட மாற்றங்கள குட்டி
குட்டி காட்சிவழியாவும், அழகழகான வசனங்களின் மூலமாவும் அருமையா கொண்டுபோயிறுக்காங்க.
இதே
போன்ற குடும்ப உறவுகளை மையமாக கொண்ட படத்தில் சமீபமா நிவின் & துல்கர்
இருவருமே நடிச்சிருந்தாங்க. பிரமாதமான ஒரு படத்தை இழுத்துகொண்டு செல்வது (நல்ல படத்தை எந்த
நாயகனும் இழுக்கவே தேவையில்லை விட்டு பாருங்க அதே போகும்.) மட்டும் ஒரு நாயகனோட
கடமை இல்லை. இதுபோன்ற மிக எளிய கதையை ஒரு மிகபெரும் அனுபவமா பார்வையாளர்களுக்கு
மாற்றிதர இந்த நாயகன் எப்படி முயற்சி பண்ணிருக்கார்னு பாருங்க.
அவரது
பிள்ளைகளிடமே பெரிதாக எந்த பேச்சுவார்த்தையும் வைத்து கொள்ளாமல் இருப்பது. மனைவி
(மீனா) எந்த நேரமும் தொலைக்காட்சியில் மட்டுமே நேரம் செலவிடுவதாக குத்திகாட்டியே
பேசுவது. “யார கேட்டு என் சரக்கில் சோடா கலந்திங்கன்னு” கீழே ஊற்றுவது என
நண்பர்களிடம் கூட சிடுசிடுக்கும் பாத்திரத்தில் வழக்கம் போல் மோகன்லால் மிக இயல்பா பொருந்திபோகிறார்.
“உன்னோட
முடி மட்டும் நரைச்சு போகல, நீயும்தான்! – இது இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு பின்
கல்லுரி FRIENDS MEET இல் சந்திக்கும் லாலின் முன்னால் காதலி கூறும் வசனம்.
“இவ்வளவு
நாள் இந்த வீட்ல தனிமைல இந்த வாழ்க்கை நரகம்னுதான் நெனச்சேன்.” ஆனா, இங்க
பக்கத்துலதான் சொர்கமே இருப்பது தெரியாம இருந்திருக்கேன். – இது லால்
மனம்மாறியபின் அவர் தோளில் சாய்ந்து அவர் மனைவி கூறுவது.
“எங்க
அப்பா உனக்கு யார் மேலாவது விருப்பம், காதல் இதுபோல ஏதாவது இருக்கானு
கேட்டிருக்கார்.” ஆனா, இல்லன்னு அப்ப போய் சொல்லிட்டேன். இப்ப அந்த பொய்ய
உண்மையாக்க வந்திருக்கேன்னு. – இது லால் மகள் அவரை விரும்புவனிடம் கூறுவது.
“நீ
சந்தோசமா இருக்கியானு? ஒரு முறை கூட என் கணவர் என்னிடம் கேட்டதேயில்லை.”
நீங்களாவது உங்க மனைவியிடம் கேட்டு இருக்கிங்களா? – இது லால் அவரை பெரிதும் ஈர்த்த
பெண் அவரிடம் கேட்பது.
இதும்
போக உம்மணா மூஞ்சி டூ சமத்து பையனு லால் அனைவரிடமும் பழகும் விதத்தில் வேறுபாடு
காட்டினாலும், உடன் பணிபுரியும் அவர் மீது காதலுடனே சுற்றும் ஒரு பெண் பாத்திரம்.
வசனங்களே இல்லாமல் வெறும் முகபாவத்திலே நம்மை கொல்லும் ஒரு ப்ளாக் பாரெஸ்ட் கேக். இப்படி முழுக்க ஈர்க்கும்
பெண்களாலும், அழகழகான வசனங்களாலும் நம்மை
கதையுடன் வெகுஇயல்பாக லயிக்க வைக்கும் படம்.
இந்த
பெண் பாத்திரங்கள் கேட்கும் கேள்விகளுக்கு லால் கூறும் பதிலே இந்த கதைக்கான
உயிர்நாடி. தனக்கான அனைத்து வசனங்களை மட்டுமின்றி, இந்த கதைக்காக தனியே ஒரு
வாழ்க்கையையே வாழ்ந்துள்ளார்.
லாலின்
நண்பர்கள், அவர்கள் குடும்ப உறுபினர்களுக்கிடையேயான பிரச்சனைகளுக்கும் தீர்வை
சொல்வதெல்லாம் குட்டி குட்டி கதையா அழகா, நகைச்சுவையா பண்ணிருக்காங்க.
No comments:
Post a Comment