Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, March 20, 2017

White Dog - ஒரு பார்வை



ஒரு நடிகை நெடுஞ்சாலையில் தனது வாகனத்தில் அடிபடும் ஒரு நாயை சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கிறார். அதற்கான கட்டணத்தை செலுத்தி அந்த நாயை தன்னுடனே அழைத்தும் செல்கிறார். பின் தனது பாய் பிரண்ட் மூலமாக அந்த நாய் தன்னிடம் இருப்பதாகவும் அதன் உரிமையாளர் அழைத்து செல்லும்படியும் விளம்பரபடுத்தும் சூழலில் தனியாக வசிக்கும் அவரை திருடன்  ஒருவன் கற்பழிக்க முயல நாம் நினைத்தது போல அந்த நாய் அவரை காப்பாற்றுகிறது. மேலும் அந்த நாயை அவரே வைத்துகொள்ளவும் விரும்புகிறார். அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கும் சூழலில் அந்த நாய் மாயமாகிறது.


இவ்வாறு தொலைந்து போகும் மற்றும் கைவிடப்பட்ட செல்ல பிராணிகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு சென்ற பின்னேதான் அதன் சட்ட திட்டங்களும் (இவ்வாறு அங்கு கொண்டுவரப்படும் பிராணிகள் இரண்டு நாட்களுக்குள் அதன் உரிமையாளர் வராதபட்சத்தில் கொல்லப்படுவதும்)  எத்தனை பிராணிகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் அங்கு உள்ளதும் அவருக்கு தெரியவருகிறது. மேலும் அங்கு கொண்டு வரப்படுவதில் தங்களது தொலைந்த பிராணிகளை காண மக்கள் நூற்றுகணக்கில் காத்திருகின்றனர். பெரும்பான்மை பார்வையாளர்கள் செல்ல பிராணிகள் வளர்க்காத அதன் அடிப்படை விஷயங்கள் கூட அறியாதோரே. மேற்கூறிய இந்த முகாம் காட்சிகள் அவர்களையும் இந்த கதையினுள் இழுக்க (என்னையும் சேர்த்து) தொலைந்த நாயின் மீது பரிதவிப்பை ஏற்ப்படுத்தும் அட்டகாச திரையுக்தி.


அடுத்த நாளே ரத்த கறையுடன் தனது வீட்டிற்கே வரும் நாய் ஒருவரை கொலை செய்ததும் அது அவ்வாறே பழக்கபடுத்தபட்டதும் அவருக்கு தெரியவருகிறது. தன்னிடம் குழந்தை போல் பழகும் நாய் தனது பாய் பிரண்ட்டுடன் நெருக்கமாக இருக்க அனுமதிக்காததும் அவரின் மேல் அதன் சீற்றத்தையும் கண்கூடாக காண்கிறார். ஆகவே சர்க்கஸ் மற்றும் உயிரியல் பூங்காகளுக்கு சிங்கம், புலி, யானை போன்ற உயிரினங்களை சாதுவாக பழக்கபடுத்தி அனுப்பும் இடத்திற்கு அழைத்து செல்கிறார்.




எந்த ஒரு கதைக்கும் ஒரு பாத்திரம் எவ்வாறு நேர்மையாக நடந்து கொள்ள இயலும் என்பதற்கு நடிகையாக வரும் “KRISTY McNICHOL” மற்றும் அந்த நாயை சாதுவாக்க பழக்கபடுத்தும் TRAINEER “TONY BRUBAKER” பாத்திரமே மிக பெரும் சான்று. சிங்கம் மற்றும் புலிகளுடன் மிக சாதரணமாக புழங்கும் டோனி அந்த நாயிடம் நெருங்கும் கணங்கள் அவரை மட்டுமின்றி நம்மையும் திக்.. திக்.. ஏற்ப்படுத்தும் அட்டகாச பின்னணி இசை. குறிப்பிட்ட அந்த காட்சிகளுக்கு மட்டுமின்றி முழு கதைக்கும் மிகபெரும் தூண்.


முழுக்க அந்த நாயை சுற்றியே பின்னப்பட்ட கதையில் அதன் செயல்பாடு மற்ற எந்த பாத்திரத்துடன் ஒப்பிடுகையில் சற்றும் குறைவில்லாத வகையில் அதனிடமிம் வேலை வாங்கிய வகையிலே இயக்குனருக்கு தனி ஸ்பெஷல் பாராட்டுக்கள்.


கொடிய மிருகங்களுக்கு இடையே பிற்பாதி கதை முழுக்க இருக்கும். பூனை, பறவைகள் போன்றே சிங்கம், புலி, கரடிகளையும் மிக சாதாரணமாக நாம் கடந்து செல்லும்படியும், அந்த நாயை காணும் காட்சிகள் மட்டுமின்றி தன் குறைக்கும் ஒலி கூட நமக்குள் “கிலி” ஏற்ப்படுத்தும் வண்ணம் அமையபெற்ற இயக்குனர் “SAMUEL FULLER” திரைமொழி நிச்சயம் அனைவரையும் கவரும்.

No comments:

Post a Comment

Search This Blog