1950 களின் காலகட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு கொரியாவை முறையே பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க நாடுகள் கைப்பற்றின. மேலும் கொரிய படைகளை கொண்டே தங்கள் சாம்ராஜியத்தை விரிவுபடுத்த வேண்டி நடந்த உண்மை நிகழ்வை மையபடுத்தின திரைப்படம்.
195௦ ஆகஸ்ட் காலகட்டமே இப்போரின் உச்சம் பெற்ற சமயம். படைபலத்தில் மிகவும் பின்தங்கிய வடக்கு கொரியாவை நோக்கி அசுர பலம் பொருந்திய கிழக்கு கொரியன் படை ஆக்ரமிக்க வருகின்றனர். படைபலத்தில்மிகவும் பின்தங்கிய வடகொரியர்கள் தங்கள் தலைநகரை பலப்படுத்த பின்வாங்கி தலைநகர் நோக்கி செல்கின்றனர். வலுகட்டாயமாக ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்பட்ட, துளியும் முன் அனுபவம் அற்ற கல்லூரி மாணவர்கள் 72 பேர் மட்டுமே வேறு வழி இன்றி வட கொரியாவின் நுழைவாயிலை பாதுகாக்கும் பொறுப்பு திணிக்கபடுகின்றது. அடுத்த 3௦ நாட்கள் அம்மாணவர்களின் வாழ்வே இத்திரைப்படம்.
படம் நிறைவடைந்த பின் வரும் டைட்டில் கார்டு தவறாமல் பார்க்கவும். இந்த நிஜ யுத்தத்தில் பங்குகொண்டு உயிர் பிழைத்த மூவரின் மிக முக்கிய அனுபவ வரிகளுடே படம் நிறைவடையும். இந்த சுவாரசிய சரித்திர நிகழ்வு நிச்சயம் பார்வையாளர் அனைவரின் மனதிலும் காலத்துக்கும் பதிந்திடும் என்பதில் ஐய்யமில்லை.
போர்க்காட்சிகள் மட்டுமின்றி அம்மாணவர்களின் சந்தோசம், கோபம், ஏக்கம், பயம், பாசம் என அவர்களின் அத்துனை உணர்வையும் துளியும் சினிமாத்தனம் இல்லாமல் இயக்குனர் நம் மனதிற்கு கடத்துகிறார். உலகின் மிக சிறந்த போர் திரை படங்களில் நிச்சயம் இப்படத்திற்கும் இடம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.
இப்படத்திற்கான ட்ரைலரை காண:
https://www.youtube.com/watch?v=KuxbJ4Abwa4
No comments:
Post a Comment