தனது ஆசாத்திய மதிநுட்பத்தால் மராட்டியம் முதல் டெல்லி வரை தனது சாம்ராஜியத்தை நிறுவிய பாஜீரோ என்ற மணமான அரசன். அவரின் படையை உதவியாக. கேட்டு வரும் இளவரசி மஸ்தானிக்குமான காதலேஇந்த மிக பிரமாண்ட படைப்பின் அடிநாதம். போர் உடையில் வந்து தன்னை கோபப்படுத்தியது தூதுவன் என பாஜீரோ தாக்குகிறார். தலைகவசம் கழண்டு முதல் முறை மஸ்தானி பாஜீரோவின் கண்களை நோக்கும் கணம். தனது நாட்டிற்கு சூழும் ஆபத்தை காக்க உதவிகேட்க்கும் பார்வை. தனது படையை உதவியாக கேட்டவளுக்கு, தானே போரை முன்னின்று நடத்தி வெற்றி பெற வைக்கிறார்.
இளவரசியின் அந்தபுரத்தில் பஜேரோவின் நினைவில்தான் விளித்துக்கொண்டே கனா காணும் அந்த கண்களை இரண்டாம் முறை கம்பீரமாகவே சந்தித்து செல்கிறான். விருந்துக்கு பின் தாம்பூலத்தோடு கையில் சிறு பந்தத்துடன் பாஜீரோ தங்கியுள்ள நிலவொளி பூசிய மாடி அறையில் இறுதி யாசகமாக காதலை கேட்க்கும் கண்களை மூன்றாம் முறை சந்தித்து சிறுநிலகுலைவுடன் தனது தேசம் திரும்புகிறான்.
தனது நாட்டிற்க்கு எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் வெற்றியீட்டி தந்த அரசனுக்கு பொன், பொருள், ஆபரணங்களுடன் தனது மகளையும் பரிசாக அனுப்புகிறார் மஸ்தானியின் தந்தை. பாஜீரோவின் தாயாரால் நடன மங்கைகளுடன் தங்கவைக்கப்படுகிறார். பல மாதங்கள் போருக்குபின் வெற்றி வாகையுடன் தனது நாட்டிற்க்கு திரும்பும் அரசனுக்கு ஏற்பாடு செய்யும் விருந்தில் நடனமாட பணிக்கப்படுகிறார்.
நான்காம் முறை மீண்டும் அந்த கண்களை சந்தித்து முதல்முறை முழுதாக நிலைகுலைகிறான். பின் பல சாம்ராஜ்யங்களை தன்வசப்படுத்திய பேரரசனின் வாழ்வில் நடப்பவையாவும் அந்த கண்களை சந்தித்ததின் வினை... பாஜீரோ மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் முழுதாக மட்டுப்படாத. பாசமும், கனிவும், தியாகமும், சாம்ராஜிய. குடும்பத்தின் பொறுப்புணர்வும், தனது வாழ்கையே பங்கிட வந்தவளிடத்திலும் மனிதநேயம் காட்டும் கண் ஒன்றும் இக்கதையில் உண்டு.நான்கு முறை போரிட்டு பாஜீரோவை வீழ்த்திய கண்களை காட்டிலும் தான் தாய்மை அடைந்ததை தன் கணவனிடத்தில் கூறும் அந்த கண்கள் .......
No comments:
Post a Comment