இந்த படத்தின் எந்த ஒரு சிறு காட்சி அமைப்பும் பார்வையாளர்களை ஆடுகளம் படத்தை நினைவு கூறாதது வெற்றிமாறனின் மிகபெரும் பலம். ஆனால் இப்படத்தின் திரைக்கதை அமைப்பு மட்டும் கண்டிப்பாக சில இடங்களில் வழக்கு எண் (பாலாஜி சக்திவேல்) படத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க இயலா.
ஒரு மிக மோசமான சாலை விபத்தில் இணையும் மூன்று கிளை கதைகளின் கோர்வையே இப்படம் மூன்று அத்தியாயங்களாக வரும் இக்கிளை கதைகளும் அந்த சாலை விபத்தை மைய்யபடுத்தியே நகரும் விதத்தில் அமையபெற்ற அற்புத திரைக்கதை இப்படத்திற்கு மிகபெரும் பலம்.
1. OCTAVIO & SUSANA 2. DANIEL & VALERIA 3. EL CHIVO & MARU
இதில் முதல் இரண்டு கதைகளும் காதலை மைய்யபடுத்தபட்டது. மேலும் முதல் கதையில் மட்டுமே நாய் சண்டை (ஆடுகளம்) வரும். அக்காட்சிகள் கண்டிப்பாக ப்ரில்லியன்ட் மேக்கிங்.
கதையின் இறுதி கட்டம் வரை இந்த மூன்று கதைகளும் தொடர்பு இல்லாமலே இருந்து இறுதி காட்சியில் அந்த விபத்தில் சம்பந்தபடுத்தபடுவது, இக்கதையில் வரும் பல கதாபத்திரங்கள் நாம் வேறு படங்களில் காணா வகையில் வடிவமைத்த விதம் என படம் நெடுக நம்மை ஆச்சர்யபடுத்தும் காட்சிகளும், கதாபத்திரங்களும் நிறைய ஆதலாலே இந்த மூன்று கதைகளின் எந்த சிறு காட்சியும் திரையில் காணும் நேரம் சுவாரசியம் குறையகூடும் ஆதலாலே படத்தின் எந்த நிகழ்வுகளும் பகிராமைக்கு மன்னிக்கவும்.
No comments:
Post a Comment