குஜராத் கலவரத்தின் பிந்தைய நாட்களே படத்தின் கதைக்களம். இப்படத்தை நான் பார்த்த பிறகே ரிலீஸ் செய்ய வேண்டும் என அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன் அறிக்கைக்கு, நந்திதாதாஸ் பதில் என்ன தெரியுமா? இப்படம் குஜராத்திலும் ரிலீஸ் ஆகும் நீங்கள் எப்பொழுது முடியுமோ பார்த்து கொள்ளுங்கள் என்பதே.
நந்திதாதாஸ் இயக்கம் என்ற ஆச்சிர்யத்தில் பார்த்தால் அதை அவர் பூர்த்தி செய்ததாகவே உணருகிறேன்.
குவிந்து கிடக்கும் உயிரற்ற உடல்களை ஓரே குழியில் அடக்கம் செய்யும் சமயம் ஒரே ஒரு ஹிந்து பெண் உடலை பார்த்து ஆத்திரத்தில் வெடிக்கும் நம்ம நாசர். கலவரத்தின் பாதிப்பை தொலைகாட்சியில் கண்டு மனம் தாங்காமல் சமையல் எண்ணெய்யால் கையில் சுடு இட்டு கொள்ளும் (ஹிந்து) குடும்ப தலைவி கதாபத்திரம். முஸ்லிம் பகுதியில் மக்கள் சேமித்து வைத்துள்ள குடிநிரை கூட கிழே கவிழ்க்க சொல்லும் (அங்கே தீபிடித்தால் அவர்கள் அணைக்க கூடாதம்) போலீஸ் கதாபத்திரம். கலவரத்தில் தனது துணி கடை முழுதும் சூறையாட பட்டு வேறு மாநிலம் சென்றாவது பிழைத்து கொள்ள நினைக்கும் முஸ்லிம் பணக்கார இளைஞன் கதாபாத்திரம்.
கலவரத்தில் தனது வீடு மற்றும் அனைத்து பொருட்களும் தீயில் அழிந்து அடுத்த நாளே வீடு திரும்பும் ஆட்டோ டிரைவர், மனைவி, மற்றும் அவர்களது கை குழந்தை பத்திரங்கள். அடுத்த வேலை பாலுக்கு குழந்தைக்கு வழிஇன்றி ஒரு திருமண வீடுக்கு பணிக்கு செல்லும் வழியில் தனது பொட்டை எடுத்து அக்குழந்தையின் அன்னைக்கு வைக்கும் ஹிந்து பெண் கதாபத்திரம். (அப்பெண் முஸ்லிம் என தெரியவேண்டாமே) என படம் நெடுக நம்மை ஆச்சிர்யத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகள் பல. எப்பொழுதும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் நஸ்ருதின்ஷா இதிலும்...
No comments:
Post a Comment