Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Monday, March 13, 2017

Hacksaw Ridge - ஒரு பார்வை

OKINAVA ஜப்பான் நுழைவாயிலில் உள்ள ஒரு தீவு. இங்கு இரண்டாம் உலக யுத்தம் முடிவுறும் காலக்கட்டம் மே1945 ல் அமெரிக்கா படையினருடன் நடைபெற்ற யுத்தமே கதைக்களம்.


எல்லா WAR கதைகளிலும் வரும் பொறுப்பற்ற சிறுவன், குடும்பம், காதல், தியாகம் எல்லாம் இதுலயும் இருந்தாலும் போர்க்களத்திற்கும் ரத்தத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற விசயங்களில் இருக்காது. இவை அனைத்தையும் அட்டகாசப்படுத்தி போர்கள காட்சியையும் அமளி துமளி பண்ணிருக்காங்க.


MELGIBSON ன்னா எனக்கு முன்னல்லாம் நம்ம விஜயகாந்த் ஞாபகம்தான். ஏன்னா அவர் நடிக்கும் படம் பூரா வெறும் ஒரே ஆக்ரோஷ பேச்சும் துப்பாக்கி சண்டையுமா இருக்கும். BRAVE HEART, APOCALYPTO படங்களில் அவர் கொடுத்த ஆச்சர்யத்தை விட இதில் இவரது துல்லியம் நிச்சய பிரமிப்பு. படம் பார்த்து 12 மணி நேரமாகியும் ஒரு வார் மூவில அதனோட பிரமாண்டத்தை தாண்டி வேறு பெரிதாக எந்த நினைப்பும் இருக்காது. ஆனால் இதன் பாத்திரத்திங்களின் தன்மை இன்னும் நினைவில் வந்து செல்வது உண்மை ஆச்சர்யம்.






DESMOND DOSS எனும் நபர் இந்த போரில் உண்மையாக காயமடைந்து உயிருக்கு ஆபத்தான 75 நபர்களை காப்பாற்றிய உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவான படம். இவர்தான் அமெரிக்காவில் ஆயுதம் ஏந்தாமல் இந்த விருதை பெரும் முதல் நபர். படத்தின் இறுதியில் இந்த உண்மை நாயகனின் கிளிபிங்க்ஸ் உடன் முடித்துவிடாமல் இவரது வாழ்வின் உன்னத தருணங்களின் உண்மை நிகழ்வுகளை அவரே கூறிய வீடியோ கிளிப்பிங்க்ஸ்ல் அவர் சிலாகித்து கூறும் விசயங்களை அச்சு மாறாமல் இந்த கதையில் முக்கிய காட்சிகளாக வரும்படி அமையப்பெற்ற திரைக்கதை மிகபெரும் பலம். முழு படமும் பார்த்து இறுதில் இவரது பேச்சை கேட்கையில் இன்னும் கூடுதலாக உரைக்கும் இவரது செயல்.


அமெரிக்கா ராணுவத்தில் ஆயுதம் ஏந்தாமல் வெறும் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு முதலுதவி செய்து காக்கும் ஒருவரின் உண்மை கதைதான் எனினும் அதை நாமும் ஒப்புக்கொள்ளும் படி அமைக்கபெற்ற காட்சிகள் மிகப்பெரும் பலம் இக்கதைக்கு.


நாயகனின் பட்டாலியனில் அவனுடன் போருக்கு செல்லும் ஒரு துணை பாத்திரம் இரு கால்களையும் இழந்து நாயகனின் முதல் உதவியால் உயிர் பிழைத்துவிடுவார். இதில் ஆச்சர்யம் போரின் ஆரம்பகட்டத்திலேயே இவர் திரையிலிருந்து விலகிவிடுவார். பின் போரே முடிந்து நாயகன் மருத்துவமனை வருவார். அந்த நபருக்கு குண்டு வெடிப்பில் கால்கள் மட்டுமே சிதறியிருக்கும் முகத்தில் ஒரே இடத்தில் சிறியதாக ஒரு வெட்டு மட்டுமே இருக்கும். அந்த இறுதி ஷாட்டில் அவருக்கு மிகசரியாக அந்த இடத்தில மட்டுமே கட்டு போடப்பட்டிருக்கும். இப்படத்தின் துல்லிய உருவாக்கலுக்கு இந்த ஒரு காட்சியே மிகப்பெரும் சான்று.


இந்த படத்தின் லவ் போர்சன் வெச்சி முழுசா, தனியா ஒரு வெற்றி காதல் திரைப்படமே எடுக்க இயலும். படத்தின் நீளம் கருதியோ அல்லது காட்சிக்கான முழுவடிவம் சரிவர அமையப்பெறவில்லை என நிராகரிக்கப்படும் ஷாட்களில் நிரம்பியுள்ள இயக்குனரின் உழைப்பும் + தயாரிப்பாளரின் வலியும் இதற்க்குமுன் எந்த படத்தையும் பார்க்கையில் நினைத்து பார்ததாக நினைவில்லை. கண்டிப்பாக மொத்த காட்சிகளில் எழுவது சதவீதம் மட்டுமே பயன்படுத்தபட்டிருக்கும்.


No comments:

Post a Comment

Search This Blog