எந்த ஒரு பீரியட் திரைப்படத்திலும் அதநடைபெறும் காலகட்டத்தில் கதையின்ஓட்டம் இருந்தாலும்படம் கதையின் ஓட்டத்தை ஒட்டியே நகரும். அக்காலகட்டத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பெரும்பாலும் அக்கதைகளில் தென்படாது.
ஆனால் இப்படத்தின் கதை 19௦௦ இல் இருந்து 197௦ இல்நிறைவுறுகிறது. வெள்ளையர்கள் அஸ்ஸாம் இல் இருந்து தேயிலை பயிரிட கேரளா வந்த (19௦௦) காலகட்டதில் துவங்கி, முதல் உலக போர் (1914), இந்திய சுதந்திரம் (1947), அதற்கு பிந்தைய ஜமின்தார்களின்(ஆண்டே) ஆட்சி, KERELA வில் COMMUNISAM தின் துவக்க காலம், EMERGENCY காலம் (197௦) என இந்திய வரலாற்றின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் தொட்டு செல்லும் கதையின் போக்கு நிச்சயமாக அபாரம்.
வெள்ளையரின் நன்மதிப்பை பெற்ற ஒரு இந்தியன் அவருக்கு பிறகு ஆண்டேவாக. அவருடைய மகனே தன் தந்தையை எதிர்த்து அம்மக்களை மீட்கும் சாதாரண கதை. ஆனால் இத்திரைக்கதைக்கு இயக்குனரின் HOME WORK நிச்சயம் பாராட்டபட வேண்டியதே.
திரைகதையின் ஒவ்வொரு காட்சியும் சரித்திரத்தின் அனைத்து முக்கிய நிகழ்வுகளிலும் ஏதோவொரு வகையில் கதையின் போக்கை மாற்றும் வகையில் அமைத்த வகையில் மிகவும் ரசித்த வைத்த வகையே இப்படம்.
வெள்ளையனிடம் அடிமையாக இருப்பது முதல் ஆண்டே வாக அனைவரையும் ஆள நினைப்பது என லால் மற்றும் அவரின் இரு மகன்கள், மூன்றாம் மகனாக நம்ம பகத் பாசில், மதுரை முத்து ராவுத்தர் மகனாக ஜெயசூர்யா, சஸ்பென்ஸ் பத்மப்ரியா என அத்துனை பாத்திர தேர்வும் கணகச்சிதம்.
சரித்திர நிகழ்வுகளை கதையின் போக்கோடு இணைக்க எடுத்த சிரத்தையை திரைக்கதையில் எடுத்து இருந்தால் இந்திய அளவில் மிக முக்கிய சரித்திர திரைப்படமாக இடம் பெற்றிருக்கும்.
No comments:
Post a Comment