ஒரு எளிவேடரில் (ELEVATOR, LIFT) பயணிக்கும் முன்பின் அறிமுகமில்லா நால்வர். லிப்ட் மின்சார தடைபாட்டால் சில நிமிடங்கள் நிற்க அடுத்தடுத்து மூவர் ரத்த வெள்ளத்தில் இறக்க நான்காவது (நிரபராதி) நபர் கைதாகிறார்.
இந்த நால்வரும் யார்? ஒரே நேரத்தில் இவர்கள் மிக சரியாக இந்த லிப்டில் பயணிக்க வேண்டிய காரண காரியத்தை தேடி கதை முன்னோக்கி பயணிக்க கதையின் கடைசி நிமிடம் (லிப்டில் நுழையும் நொடிவரை). இந்த நால்வரின் கதாபத்திரங்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமலே செல்வது. கடைசி நொடியில் அனைத்து முடிச்சிகளும் அவிழும் வரை சாதரணமாக கொலையாளி யார் என யூகிக்க இயலா திரைக்கதை.
இந்த நால்வரின் கதைகளும் ஒன்றின் பின் ஒன்றாக முழுதாக வராமல் இரண்டு முதல் நான்கு நிமிடமே ஒருவரின் கதை என இந்த நால்வரின் கதைகளும் அடுத்தடுத்து வந்தும் சிறிதும் குழப்பமின்றி தொகுத்த அசாத்திய படத்தொகுப்பு.
மேலும் இந்த நால்வரின் கதைகளமும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இன்றி ரசிக்கும் படி வடிவமைத்த திரைக்கதை. நான்கு ஒளி வண்ணங்களில் காட்சிபடுத்திய விதம். மேலும் இந்த நால்வரும் சந்திக்கும் இறுதி காட்சிகளில் அந்த நான்கு வண்ணங்களும் வெளிப்படுத்தும் படி அமையப்பெற்ற அற்புத CINEMATOGRAPHY.
No comments:
Post a Comment