ஊரில் நல்ல செல்வாக்குடன் வாழும் ஒருவர் தனது ஒரு நிமிட சபலத்தில் பூட்டிய ஒரு கடையினுள் மாட்டிகொண்டு ஒரு நாள் முழுதும் படும் வேதனையே இத்திரைப்படம்.
மிக எளிய கதையையும் தனது அசகாய திரைக்கதை மூலம் ஒரு மிக சிறந்த படைப்பாக கொடுக்க இயலும் என்பதற்கு இப்படம் நல்ல உதாரணம்.
அந்த செல்வாக்கு உள்ள மனிதனாக இப்படத்தின் நாயகனாக லால் (சண்டகோழி வில்லன்) நல்ல வசதியான வாழ்க்கை பெரிய வீடு மேலும் மூன்று சொந்த கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு கடையை மட்டும் நண்பர்களுடன் தினமும் மது அருந்த பயன்படுத்துகிறார்.
ஒரு இரவில் தனது நண்பர்கள் அனைவரும் கிளம்ப தனது எடுபிடி ஆட்டோ டிரைவருடன் பிளாக் இல் சரக்கு வாங்க செல்கிறார். அந்த பின்னிரவு வேலையில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்மணியை கண்டவுடன் இவருக்கு சபலம் ஏற்பட அவளை தனது கடைக்கு ஆட்டோவில் அழைத்து வருகிறார். மேலும் அப்பெண்மணிக்கு சிற்றுண்டி வாங்க அக்கடையின் SHUTTER -யை வெளிப்புறம் பூட்டி செல்லும் ஆட்டோ டிரைவர் இரவு ரோந்து செல்லும் போலீஸ்சிடம் DRUNK & DRIVE இல் மாட்டிக்கொள்கிறார். மின்சார வசதியும் அற்ற அந்த சிறிய கடையினுள் அப்பெண்மணியுடன் மாட்டிகொண்ட லால்க்கு என்ன நேர்ந்தது என்பதே இக்கதை.
கூறிய நேரத்தில் வராமல் போகும் ஆட்டோ டிரைவர், தன்னுடைய நேரம் முடிந்தது வெளியே செல்ல வேண்டும் என கத்த ஆரமிக்கும் பெண்மணி. நேரம் அதிகாலை ஆக ஆள் அரவம் ஆரமிக்கும் சாலை என லால் அவர்களுக்கு ஏற்படும் பதட்டத்தை நமக்கும் கடத்துவது இயக்குனர் + திரைக்கதை ஆசிரியரின் திறமை. அக்கடையின் ஜன்னல் வழியாக தெரியும் தனது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் பார்த்து கலங்கும் இடங்களில் லால் AWESOME ஆக்டிங் அக்கடையில் இருந்து யாருக்கும் தெரியாமல் மீண்டார்களா....
No comments:
Post a Comment