பாலிவூட் இன் புதிய அலை சினிமாவின் முதன்மையான இயக்குனர் என்பதை இப்படத்தின் மூலமும் நிருபித்து உள்ளார்.
ஹீரோ கனவோடு சினிமாவில் போராடும் கதையின் நாயகன், அவனை விட்டு குழந்தையோடு உயர் போலீஸ் அதிகாரியை மறுமணம் செய்து கொள்ளும் மனைவி, இப்படி வித்தியாச கதாபத்திரங்களின் வலைப்பின்னல், ஒரு சனிக்கிழமை மதியம் காரில் தனது பத்து வயது மகளை தவறவிடுகிறார்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க நண்பனுடன் செல்கிறார் தொலைந்தது உயர் காவல் அதிகாரியின் வளர்ப்பு மகள் என தெரிய வர விசாரணையை வேறு விதமாக முடுக்குகிறது காவல்துறை.
தொலைந்த குழந்தையின் தேடும் படலமே இக்கதை என பார்த்தால் நாயகன், அவரின் முன்னால் மனைவி, அந்த உயர் அதிகாரி, நாயகனின் நண்பன் என இவர்களது FLASHBACK குழந்தையை தேடும் காட்சிகளின் இடையே வருவது போன்ற காட்சி அமைப்பு அனுராக் இன் EXCELLENT SCREENPLAY.
காவல் துறையின் விசாரணை ஒருபுறம் நடந்தாலும் பின்னணியில் இருப்பது ஒவொவ்வொருகுள்ளும் இருக்கும் பழிவாங்கும் ஈகோ மட்டுமே என வித்தியாச TREATEMENT. இந்த ஈகோ விளையாட்டில் குழந்தை எங்கு இருக்கிறாள் என்ற பதட்டத்தை ஒவொவொரு காட்சியிலும் அதிகரித்து கொண்டே செல்கிறார்.
இறுதி காட்சியின் கடைசி ஷாட் வரை கண்டிப்பாக நம்மால் யூகிக்க இயலா திரைக்கதை அனுராக் இன் ஸ்பெஷல். கதாபாத்திரங்களின் ஈகோ யுத்தம், குழந்தையின் நிலை என நிச்சய இப்படம் நல்ல அனுபவம்.
No comments:
Post a Comment