பதினேழு வயதில் கடத்தப்பட்டு ஒரு சிறு அறையில் சிறைவைக்கப்பட்ட பெண்/ ஏழு வருடங்களாக வெளி உலகையே காணாமல் கடத்தப்பட்டவனால் குழந்தைக்கும் தாயாகி அச்சிறுவனும் தனது வாழ்வின் ஐந்து வருடங்களும் வெளி உலகென்ற ஒன்றையே தனது தாய் எவ்வளவு எடுத்து கூறியும் நம்பாமல் அந்த அறை மட்டுமே உண்மை உலகமென நம்பி இருக்கிறான். கடத்தப்பட்டவனிடம் இருந்து தப்பித்து தனது மகனுக்கு உண்மை உலகை அறிமுகப்படுத்த போராடும் அபலை தாயின் உணர்ச்சி போராட்டமே இந்த திரைப்படம்.
அந்த அறையில் காலை கண்விழிக்கும் மகன் எழுந்தவுடன் அந்த அறையில் உள்ள TV, WASH BASIN, TEDDY BEAR க்கு Good Morning சொல்லும் ஆரம்ப காட்சியே நம்மையும் அந்த குட்டி அறைக்குள்ளே சிறைப்படுத்தும். படத்தின் முதல்பாதி முழுதும் அந்த சிறு அறைக்குள்ளே வெறும் இரு பாத்திரங்களை கொண்டே நகர்ந்தாலும் நம்மால் சிறு சோர்வும் சலிப்பும் ஏற்படுத்தாத காட்சிகளும் வசனங்களும் இப்படத்திற்கு ஆகபெரும் பலம்.
ஜன்னல்களற்ற அந்த அறையின் மேல் பகுதியல் சிறு கண்ணாடியின் மேல் விழுந்த காய்ந்த சருகை தன் மகனுக்கு காட்டி வெளிஉலகை உண்மை என நிருபிக்கமுயலும் இடம், பதினேழு வயதில் தொலைந்த மகள் ஏழு வருடங்களுக்கு பின் ஐந்து வயது மகனுடன் காணும் தந்தை முகத்தை திருப்ப கலங்கிய விழி கனத்த இதயத்தோடு தனது தந்தையை காணவைக்கும் இடம் என பிரமாதப்படுத்தும் தாய் பாத்திரம்.
அந்த சிறு
அறையிலேயே மிக சந்தோசமாக முதல் ஐந்து வருட வாழ்கையை அனுபவித்த சிறுவன்
முதன் முதலாக மற்ற மனிதர்கள், மரம், ஆகாயம் காணும் இடங்களில் அவனது
முகபாவனை & சமதள அறையிலேயே இருந்து முதன்முறையாக தனது தாயின் வீட்டில்
படியில் நடக்க தடுமாறும் இடமெல்லாம் அமர்களபடுத்தும் மகன் பாத்திரம்.
No comments:
Post a Comment