குடும்பத்தில் தலைமகனாக பிறந்து தனது மூன்று தங்கைகளுக்காக வெளிநாடு (துபாய்) சென்று பின் தன் மனைவி மற்றும் வாரிசுகளுக்காக என தனது முழு வாழ்வையும் வெளிநாட்டிலேயே தொலைத்த விக்ரமன் டைப் படத்தில் மிக அழகான காட்சி அமைப்பு மற்றும் மம்மூட்டி என்ற அசகாய சூரனின் யதார்த்த பெர்பார்மன்ஸ் மட்டும் இப்படத்தை நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும் மாயம்..
Munnariyippu ல் 2014 இல் ஒரு மெச்சூர் நடிகராக தன்னை பல படங்களுக்கு பின் நிருபித்த மம்மூட்டி இப்படத்தில் அடுத்த கட்டத்திற்கு அனாயசமாக செல்கிறார்.
போன் பூத் வரிசையில் நின்றபடி அறிமுகமாகும் காட்சி அவரது தாய் மற்றும் புது மனைவி அவர்கள் கிராமத்து மளிகை கடையில் காத்திருக்க அம்மாவிடம் பேசியவுடன் இருப்பா நளினிட கொடுக்கறேன் சொன்னவுடன் அதுவரை உன்கால் இப்ப எப்டி இருக்கு, ஊர்ல மழை வந்துச்சா வரலையானு கம்பிரமா பேசனவன் அவன் மனைவிடம் பேச ஆரமிக்கும் நொடியில் மாறும் உடல் மொழி குலையும் குரல் என மம்முட்டி ppppphhhaaaaaaaaa.
விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பும் மம்மூட்டி குடும்பத்தினருக்கு அவனது நண்பன் பிஸ்தா வாங்கித்தர இதை நா கடைல பாத்ததோட சரினு வாங்கியவர் ஊரில் தன் தங்கையிடம் கொடுத்து எல்லாருக்கும் கொடுன்னு சொல்ல அவங்க தனது கணவர் தங்கைகள் அவர்களது கணவர்கள் மற்றும் குழந்தைகளிடம் கொடுத்துவர அவர்களது தாய் நாராயணன்க்கும் கொடுனு சொல்ல அண்ணாதான் ஊர்ல இருவத்தி நாலு மணிநேரமும் இததான சாப்டுதுனு சொல்லும் காட்சியில் எந்த பதிலும் சொல்லாம ஒரு சின்ன சிரிப்புல நம்மளையும் பாவி எப்படி அடுத்த காட்சிக்கு இழுத்துட்டு போனார்னே தெரியல இந்த மம்மூட்டி.
இதுதான் கடைசி முறை அடுத்த முறை வந்தால் திரும்ப போற வேல கெடயாது என பல பல இடங்கள் வெளிநாட்டில் வாழும் அனைத்து நண்பர்களும் பார்த்த அனுபவித்த காட்சிகளின் தொகுப்பே இந்த படம்.
No comments:
Post a Comment