இந்திய சினிமாக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் காதல் என்ற அத்யாயம் இல்லாத சினிமாவோ முக்கிய காட்சிகளோ காண்பது ரொம்ப கஷ்டம்ம்ம்ம்ம் அவ்வாறு வரும் காட்சிகளும் வசனங்களும் புதிதாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் முன்னர் வந்த படங்களின் பாதிப்பும் இல்லாமல் புதிதாக காட்சிப்படுத்துவது அவ்வளவு எளிதான விசயமல்ல அப்படி இந்த படமும் முந்தய சினிமாக்களின் பாதிப்போடு வந்தாலும் ரசிக்கத்தக்க காட்சிப்படுத்தல் மற்றும் பாத்திரங்களின் சரியான வெளிப்பாடு என முழுநீள படத்தையும் மனதிற்கு நெருக்கமாக உணர செய்த காதல் ரசம் மட்டுமே உள்ள சூப்பர் விருந்து.
கம்யுனிசத்தின் வேர் இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரளத்தின் கடைகோடி வரை ஆழமாக வேர்விட முக்கிய காரணமான இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சியின் காலகட்டமே இப்படத்திற்கான கால கதைகளம் காதலை அடித்தளமாக கொண்ட கதையில் கம்யுனிச அரசியலை பயன்படுத்திய அளவு பிரமிக்கும் அளவு துல்லியம்.
கதையின் பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்ட அளவும் கதையை ஒட்டிய காட்சி அமைப்புகளும் நிகழும் நேரம் லோகேசன் பருவநிலை மாற்றங்களை மழையை தங்களது கதைக்கு சாதகமாக மாற்றிகொண்டது என அனைத்தும் துல்லியம்.
புது மழையால் பச்சை பசேல் பூமியும் மெல்லிய காற்றால் கோலமிட்டு செல்லும் செந்நீர் ஓடும் ஆற்றிலிருந்து அந்த காற்றை போலவே மெதுவாக ஜூம் அவுடில் லேசாக பாசி படர்ந்த சற்று குறுகிய படித்துறையில் நின்றிருக்கும் காதலர்கள் (ப்ரிதிவி&பார்வதி) பேச்சினிடையே மழைவர துவங்க தனது கைகளை குவித்து நீரை சேமிக்க தனது கைகளுக்கு நேர்கீழே நாயகன் கைகளை நீட்ட தனது கைகளால் சேமித்த நீரை அவரது கைகளுக்கு ஊற்ற இந்த காட்சிகளுக்கு முந்தய அவர்களது உரையாடலின் (வெறும் கடிதங்கள் மூலமே காதலை வளர்க்கும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மட்டுமே விடுமுறையில் ஊருக்கு வந்தாலும் சில மணித்துளிகள் கூட நாயகனிடத்தில் செலவிடமுடியா குடும்ப சூழல்) வலியை பிரிவின் தவிப்பை தன் கைகளில் சேமித்த நீரை தனது நினைவுகளாக நாயகனின் கைகளில் ஊற்ற அதை பத்திரமாக சேமிப்பதன் அடையாளமாக தனது விரல்களை இருக்கி மூடிக்கொள்ளும் ஒற்றை காட்சி ............
No comments:
Post a Comment