Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Saturday, April 22, 2017

Neerja (2016) - ஒரு பார்வை




இந்தியாவில் இளம்வயதில் அசோக சக்ரா விருதை வென்றவர் NEERJA BHANOT. 05 SEP 1986 PAN AMERICA WORLD AIRWAYS என்ற விமானம் 360 பயணிகளுடன் பம்பாயிலிருந்து கராச்சி வழியாக ஜெர்மனி சென்று,  அங்கிருந்து அமெரிக்க செல்கிறது.  இந்த விமானம் கராச்சியில் சில பாலஸ்தீனர்களால் கடத்தப்பட்டும் சூழலில் சாதூர்யமாக செயல்பட்டு விமான ஓட்டிகளை முதலில் தப்பிக்க வைகிறார்.   விமானத்தை அங்கிருந்து நகற்ற வழியில்லாமல் கடத்தல்காரர்களை குழம்ப செய்து.  பயணிகள் அனைவரின் பாஸ்போர்ட்களை மறைத்து அனைவரும் எந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் என்ற தகவல் அவர்களிடம் சென்று சேராமல் தடுகிறார். மேலும் தக்க தருணத்தில் பயணிகளை அவசர வழியை பயன்படுத்தி தப்பிக்க வைத்து குழந்தைகளை காப்பாற்ற முயல்கையில் கடத்தல்காரர்களின் துப்பாக்கி குண்டுக்கு உயிர்இழக்கிறார்.  இது வெறும் இப்படத்தில் வரும் காட்சிமட்டுமின்றி எண்பதுகளின் காலகட்டத்தில் நம் நாட்டின் பெண்மணி இந்த வீரதீர செயல் புரிந்தது உயிர் துறந்தமைக்காக  அவரது  இருவதுமூன்றாவது வயதில் இந்த விருது அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அவரின் மதிநுட்பத்தால் 17 மணிநேரத்தில் நான்கு கடத்தல்காரர்களும் உயிருடன் பிடிபட்டனர்.

கடத்தல் தேதிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் படம் துவங்குகிறது. பம்பாயில் நாயகியும் கராச்சியில் கடத்தல் நபர்களும் என தேர்ந்த படத்தொகுப்பில், பத்தாவது நிமிடம் நாயகியும் இருவதாவது நிமிடம் கடத்தல் நபர்களும் கதைக்குள் (விமானத்துக்குள்) வந்துவிடுகின்றனர். நாம் எதிர்பார்த்தது போலவே கர்ப்பிணி பெண்ணும் குழந்தைகளும் வயதானவர்களும் விமானத்தில் பயணிக்கின்றனர்.

அதிகம் படிப்பறிவு இல்லாத முன்கோபம் மிகுந்த கடத்தல்காரர்களின் உடல்மொழியை மிக நேர்த்தியாக படைத்தது, செட்டிங்க்ஸ் என சத்யம் செய்தாலும் நம்பமுடியா வண்ணம் அமைந்த விமானத்தின் உட்பகுதி, எண்பதுகளின் காலகட்டத்தில் உள்ள உடை, உதட்டு சாயம், முடியலங்காரம், வெடிகுண்டு, கைத்துப்பாக்கி ஆகிய அனைத்தும் கொண்டு நம்மை அந்தகாலகட்டத்திற்கே கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

முழுக்க நாயகியை சுற்றியே பின்னப்பட்ட கதையில் அம்மா வேடத்தில் ஆச்சர்ய ஷபானாஆஸ்மி .  தனக்கு வழங்கப்பட்ட சிறு இடங்களிலும் பெரு இடங்களை நம் மனங்களில் பிடிக்கிறார். இது போன்ற திரை ஆளுமைகள் இந்திய சினிமாக்களில் மிகக்குறைவு .  சமீபத்திய WAZIR –ல் அமிதாப் போல, sonamkapoor உடனான காட்சிகளிலும், நாயகி இறந்தபின்னான கடைசி பதினைந்து நிமிடங்கள் ஷபானாவின் ஆட்சி.  இப்படத்திற்கான உயிர்நாடியும், முழு படத்தையும் அனைவரும் ரசிக்கும்படி அமைக்கபட்டுள்ளபோதும் நம் மனதில் நீண்ட நேரம் நினைவில் உள்ளவர் ஷபானா....

விமான ஓட்டிகள் தப்பித்தபின் விமானத்தை இயக்க வழியின்றி பயணி ஒருவரை கராச்சி விமான அதிகாரி முன்னிலையில் தீவிரவாதிகள் சுட.  தன கண்முன்னே சுடப்பட்டு ஒருவர் இறந்ததை பார்த்த அதிர்ச்சியில் விறுவிறுவென சென்று தட்டில் கோப்பைகளை அடுக்கி அதில் நாயகி பயணிகளுக்காக நீர்நிரப்புகிறார்.  தீவிரவாதிகளில் ஒருவன் அவளை  தடுக்க முயல...

 "நீ உன் வேலய செய்யற.."  "என்னை என் வேலைய செய்ய விடுன்னு" சொல்லி பயணிகளுக்கு குடிநீர் வழங்க செல்கிறார்.

 "நீ ரொம்ப அழகா இருக்க என் பேரன கல்யாணம் பண்ணிகிரியா?" என சில நிமிடங்களுக்கு முன் தன்னிடம் கேட்ட வயதான பெண்மணி.  தற்போது துப்பாக்கி சூட்டில் தன் கண்முன்னே அவரது பேரன் இறந்தபோதும் அழகூட முடியாமல் துப்பாக்கி முனையில் அமர்ந்திருக்கிறார்.  பயணிகளுக்கு நீர் கொண்டு வரும் நாயகியை பார்த்து பெரும் குரலெடுத்து அழும் இடம்..

விறுவிறுப்பிற்கான கதைகளத்தில் இதுபோன்ற உணர்ச்சிமயமான காட்சிகள் இப்படத்திற்கான மிகப்பெரும் பலம்.

No comments:

Post a Comment

Search This Blog