படம் துவங்கிய முதல் நொடியில் வரும் இசை ஏதோ அமானுசிய கதையோ
என நிறுத்த முற்ப்படுகையில். கிட்டத்தட்ட
ஐந்தாவது நொடியில் வரும் பியானோவின் பின்னணி ஒலி ஒன்று போதும் அடுத்த இரண்டு
மணிநேரமும் கடைசி ஷாட் வரை இந்த கதையை ரசிக்க.
1986 - KHANDWA வட இந்தியாவிலுள்ள சிறு நகரில் துவங்கும்
கதை. 10 மற்றும் 6 வயது வயதுடைய (காக்கா முட்டை) சிறுவர்கள். அதே போல இரயிலில்
நிலக்கரி திருடி அதில் வரும் சிறு தொகையை குவாரியில் கல் உடைத்து பிழைக்கும் தனது
தாயிடம் கொடுப்பது என ஏழ்மையிலும் நிறைவாக தனது குட்டி தங்கையுடன் நாட்களை
கழிக்கின்றனர்.
எல்லாம்
நல்லவிதமா போனாதான் சினிமாகாரங்களுக்கு பிடிக்காதே. ஒரு நாள் தங்கையை பார்த்து
கொள்ளும் படி சொல்லி தாய் பணிக்குசெல்கிறார். அருகில் சில கிலோமீட்டரில் உள்ள
ரயில்வே ஜங்ஷனில் கிடைக்கும் வேலைக்கு கிளம்பும் அண்ணனிடம் அடம் பிடித்து
கிளம்புகிறான் தம்பி சரூ. அங்கு தூங்கி
வழியும் சரூவை பிளாட்பாரமில் படுக்கவைத்து விட்டு பணிக்கு செல்கிறான்.
குளிர்
அதிகமாக அருகில் நின்று கொண்டிருக்கும் ரயிலில் ஏறி படுத்துகொள்ளும் சரூவிற்கு
தெரியாது அந்த காலி ரயில் வழியில் எங்கும் நிற்காமல் அடுத்த இருநாட்கள் 1600
கிலோமீட்டர் பயணித்து கொல்கத்தா சென்றடைய போவது. அவ்வாறே நடக்க தனது பாசமான தாய்,
தங்கை, அண்ணனை பிரிந்த இந்த சிறுவனது அடுத்த 25 ஆண்டு கால வாழ்க்கையே இந்தப்படம்.
இதே
போல சிறு வயதில் தொலைந்த சிறுவன் சமூக அமைப்பின் மூலம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும்
தம்பதியருக்கு தத்து கொடுக்கப்பட்டு. பின் 25 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்தை
சந்தித்த உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு படைக்கப்பட்ட
அற்புத சினிமா. கடந்த வருட ஆஸ்காரில் ஆறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு “BEST
SUPPORTING ACTOR” விருதை தட்டி சென்ற படம். GOLDEN GLOBE மற்றும் BAFTA விழும்
இதே விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
பிரிவு,
சோகம், ஏமாற்றம் என அனைத்தையும் கலந்து பார்வையாளனின் மனதை வெகு எளிதில் கணமாக்க
அனைத்து இலக்கணங்களும் அமையப்பெற்ற கதை. ஆனால் மிகநேர்மையாக கதையின் போக்கை எந்த
இடத்திலும் வளைக்காமல், அதன் இயல்பிலிருந்தே சொன்ன வகையில் நம் மனதில் இக்கதையின்
பால் மிகப்பெரும் ஈர்ப்பு ஏற்படுத்துகிறது. கதைத்தளம் இந்தியாவில் நடப்பதால் நாம்
பார்ப்பது மராத்தி போன்ற ஏதோ ஒரு இந்தியபடம் என்ற நினைவே வருமன்றி ஹாலிவுட்
படத்திற்கான வண்ணம் ஒரு ஷாட்டில் கூட வெளிப்படுத்தாததே இதன் உருவாக்களுக்கான மிகப்பெரும்
வெற்றி.
சரூ ஆஸ்திரேலியா அடைந்து அந்த தம்பதியர் அவனை தனது மகனாக
ஏற்றுக்கொண்டு, அந்த மேல்தட்டு வாழ்க்கைக்கு மனம் பழகியபின்னும் தனது ரத்த
சொந்தங்களை நினைத்து கொண்டே இருக்க வேண்டுமெனில் அவர்களுடனான காட்சிகளில்
அந்த சிறுவன் இருக்கும் முதல் 20 நிமிட காட்சிகளை பற்றி மட்டுமே தனியே ஒரு பதிவு
எழுதலாம்.
ஏழ்மையிலும்
அந்த தாய் தனது குழந்தைகளிடத்தில் நடந்துகொள்ளும் பாங்கு. ஒரே காட்சிதான் என்ற போதிலும் தனது
வருமானத்தில் வீட்டுக்கு பால் வாங்கிவரும் சகோதரனுடன் ஒரு பூவை கொண்டுவந்து தனது
குட்டி சகோதரிக்கு கொடுக்கும் காட்சி. ஒரு வேலை உணவிற்காக கொல்கத்தா வீதிகளில்
அலையும் பொழுதில் கிடைக்கும் சிறு உணவையும் தனது தாயுடன் பகிர்ந்து கொள்வதாக
நினைத்து சிலாகித்து கொள்வது. தனக்கு எல்லாமுமாக இருந்த அண்ணனை நினைத்து அனைத்து
நிகழ்வுகளிலும் நினைத்து கொள்வது, குறிப்பாக இந்திய நண்பனது வீட்டில் நடக்கும்
விருந்தில் ஜிலேபியை பார்த்து கலந்குமிடம் என படம் முழுக்க சோபிக்கிறார் DEV
PATEL.
SLUM வகையறா
கதை அனைத்துமே அவர்களை அதிக அழுக்குடனும், அந்த பகுதியை எவ்வளவு அருவருப்பாக
காட்டபடுகிறதோ அதுவே நேர்மையான, யதார்த்தமான கதை என எடுத்து கொள்வார்களோ என்னவோ? ஆனால் சரு
என்ற சிறுவனது பார்வையில் இந்த அனைத்து பகுதிகளையும் அதற்கே உரிய அழகியலுடன்
காண்பித்த வகையில் GREIG FRASTER காமெராவுக்கு கைகுலுக்கல்கள்.
No comments:
Post a Comment