உலகிலேயே அதிக எண்ணைவளம் மற்றும் பணமதிப்பு மிகுந்த குவைத்தை அண்டை நாடான ஈராக் அவர்களுக்குள்ளான உலக எண்ணெய் பங்கீட்டு கொள்கையின் மாறுபட்ட கருத்தால் 1990 களில் ஆக்ரமிக்க அந்தகட்டதில் குவைத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு லட்சத்து எழுவதாயிரம் இந்தியர்களை நமது நாடு நேரடியாக அங்கு சென்று உதவமுடியாத சூழலில் அத்துணை இந்தியர்களையும் UNOFFICIALLY AIRINDIA மற்றும் INDIAN AIRLINES மூலம் நமது நாட்டிற்க்கு அழைத்துவந்த இந்த செயலே இன்றும் உலக வரலாற்றில் அதிகப்படியான மக்களை ஓரே சமயத்தில் பாதுகாப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்க்கு அழைத்துவந்த செயலாக கூறப்படும் இந்த உண்மை சம்பவமே இப்படம்.
தனது பணியில் தடாலடியான, கடமையே கண்ணான நாயகன் தான் இந்தியன் என்பதைவிட குவைத்தி என்பதையே பெருமையாக கருதுபவன், குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு எண்ணெய் பகிர்ந்தளிக்கும் தனது நண்பனது நிறுவனத்தின் ஒப்பந்தங்களையும் பெற்று தனது நிறுவனத்தை முதலாவது இடத்திற்கு வருபவன், நேரடியாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளவன், அந்த நாட்டிலேயே பெரும் தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்தி கொண்டவனை இராக்கின் திடீர் ஆக்கிரமிப்பு அவனது வாழ்வில் (நமக்கும்) ஏற்படுத்தும் மிகப்பெரும் மாற்றமே இப்படம்.
மேற்குறிய நாயகனை பற்றிய எந்த தகவல்களுக்காகவும் தேவையற்ற காட்சிகள் ஏதுமின்றி முதல் பத்து நிமிடங்களிலே ஈராக்கின் ஆக்கிரமிப்பு துவங்க தாங்கள் குடும்பத்துடன் லண்டன் செல்ல தனது குடும்பத்துடன் சற்று நெருக்கமான தனது ஓட்டுனருடன் எம்பசி செல்லும் சில நிமிட காட்சிகளே இப்படத்திற்கான அஸ்திவாரம்.
பெரும் ரத்தமோ, வழியெங்கும் கிடக்கும் பிணங்களோ, குழந்தைகளின் அழுகுரலோ, பெண்களின் ஓலமோ இல்லாத அந்த நாட்டின் குடிமக்களை மட்டுமே கொள்ளும் போர். தனது சில நிமிட பயணத்தில் தவறியும் ஹிந்தி பாடல் தவிர்த்து அரபி பாடல்கள் மட்டுமே கேட்கும் நாயகனை குவைத்தி என நினைத்து வாகனத்தை இராணுவத்தினர் நிறுத்த தான் இந்தியன் என அவர்களிடம் அவன் கதறுமிடம், தனது கண்முன்னே தனது ஓட்டுனர் சுட்டுகொல்லப்பட அவனுள் ஏற்ப்படும் மிகப்பெரும் மாற்றமும் தன் குடும்பத்தையும் சேர்த்து தனது நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரின் குடும்பங்களையும் இந்தியா கொண்டுசெல்ல எடுக்கும் முயற்சிகள் அதற்காக எம்பசியில் இந்திய அரசாங்கத்தில் அதற்க்கான துறை அதிகாரிகளிடம் போராடுவதும் என்ன உங்க ஆபீஸ் டாய்லட் ரொம்ப அசிங்கமா இருக்கு சீக்கிரம் கிளீன் பண்ணுங்க என உறைவிடம் கூட அற்று தனது நிறுவனத்தில் அடைக்கலம் புகுந்தவன் அதிகாரமாக கூறும் போதும் அவனிடம் காட்டும் கண்ணியம் பெரும்பாலும் தடாலடி பாத்திரத்தில் மட்டுமே பார்தோருக்கு இதில் அசத்தல் அக்க்ஷய்.
‘’மிக சிறந்த வியாபாரி நல்ல மனிதனாக முடியாது நல்ல மனிதன் நிச்சயமாக சிறந்த வியாபாரியாக இயலாது’’ என்பது போல தனது நண்பனது நிறுவனத்தின் ஒப்பந்தங்களையும் தன் வசமாக்கும் புத்திகூர்மை, அனைத்து மக்களையும் காக்க நினைக்கையில் நடைபெறும் சிறு தவறுகளுக்கும் நிலைகுலைவது என இரு வேறு வடிவங்களை ஓரே பாத்திரத்தில் மிக சரியாக கொடுக்க முயன்றுள்ளார் அக்க்ஷய்.
இறுதி பத்து நிமிட காட்சி AWESOME
No comments:
Post a Comment