Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Sunday, April 9, 2017

The Danish Girl - ஒரு பார்வை






ஓவியம் வரைவதை தொழிலாக கொண்ட மனமொத்த தம்பதிகள்.  தங்களது ஓவியத்திற்கான அங்கீகாரதிற்க்கான போராட்டத்தில் தனது கணவனையே பெண் மாடலாக்கி வரைந்த ஓவியத்திற்கு கிடைத்த அங்கீகாரத்தால் அவளின் கனவான பாரிஸ் வரை செல்லும் வாய்ப்பு.  இதனிடையே தனது சிறு வயதில் மனதின் ஓரத்தில் ஒளிந்திருந்த அவனது பெண் உணர்வு மெல்ல மேலேலகிறது. முழுதாக தன்னை பெண்ணாக உணர அவனது மனைவியின் அதற்க்கு பின்னான செயல்பாடுகள்??


எந்த படமும் ஆரம்பித்த  முதல் சில நொடிகளே தீர்மானிக்கும் நான் முழுதும்  பார்க்க  தகுதியானவனா? இல்லையா? என்பதை.  இப்படத்தின் மீதான எனது ஈர்ப்பு  முதல் நொடி டைட்டில் கார்ட்டில் இருந்தே  துவங்குகிறது. சமீபத்திய எந்த திரைப்படத்திலும் இந்த அனைத்து அம்சங்களும் உள்ள டைட்டில் கார்ட் நான் பார்த்ததில்லை.




நாயகன்: EDDIE REDMAYNE 

 வீட்டில் தனது மனைவியின் உள்ளாடையை முதல் முறை தனது குழந்தையை தொடும் ஒரு தாயின் பாசத்தோடு கையாள்வதும், மனைவியின் உதட்டு சாயத்தை காதலுடன் தனது விரல்களால் சரிசெய்யும் போதும், தன் மனைவியின் உடையை போர்த்தியபடி ஓவியத்திற்கு அமரும் இடத்தில் அவனது விரல்கள் அந்த உடையுடன் ஒரு (ஊமை) காதல் அத்யாயமே நிகழும் நொடிகளில், தான் பெண்ணாகவே வாழ விரும்புவதை தனது மனைவிக்கு உணரவைக்க துடிக்கும் நிமிடங்கள், மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணியை காணும் போது தன்னை அறியாமல் தனது கைகளால் வயிற்றை தடவும் மைக்ரோ நொடிகள் என உடலில் உள்ள ஒவ்வொரு அனுவிலும் பெண்மை நிரம்பிய ஒருத்தி அல்லது ஒருவனால் கூட இந்த பாத்திரத்திற்கு இவ்வளவு முழுமை சேர்க்க இயலாது என்பது சத்தியம்.

நாயகி : ALICA VIKANDER

முழுக்க நாயகனுடனே பயணிக்கும் கதையில் சிறு சிறு மாற்றம் முதல் அவரை சார்ந்தே இயங்கும் திரைக்கதை ஆனாலும் நம்மை அனைத்து காட்சியிலும் கவனிக்கவைத்த ஒன்றே இவரின் உழைப்பிற்கான சான்று
மொத்தத்தில் இது உண்மையான வேற லெவல் சினிமா.

No comments:

Post a Comment

Search This Blog