தனது சகோதரியின் திருமணத்திற்காக பெங்களூரில் பணிபுரியும் நவநாகரிக மங்கையான நாயகி சொந்த ஊருக்கு (கேரளாதான்) திரும்ப அங்கு தனது திருமணத்திற்க்கான அடித்தளம் அமைவதும் மேலும், தனது தாயின் அதே கண்டிப்பும் சகோதரியின் திருமண விழாவிலிருந்தும் பாதியிலே வெளியேறி பழைய பணிக்கும் செல்ல விருப்பமின்றி நண்பியின் மூலம் இசை பயில முற்படுகிறார். அவசரத்திற்கு அறையேதும் கிடைக்காத சுழலில் ஒரு அறையில் ஏற்கனவே தங்கிருந்தவரின் உடமைகளுடன் வேறு அறை கிடைக்கும் வரை தங்கும் சூழல் அந்த உடமைகளும் அவரை பற்றி கேள்விப்படும் மிகச்சுவாரசிய சம்பவங்களும் அவரை காணும் ஆவல் உந்தப்பட்டு நாயகி மேற்கொள்ளும் பயணமே இந்த திரைப்படம்.
நாகரிக இத்தலைமுறை பெண்ணின் பாத்திரத்திற்கு நூறு சதவிதம் பொருந்தும் பார்வதி பாத்திரமே இக்கதையின் உயிரோட்டத்திற்கு அடிநாதம். படம்நெடுக அத்துணை க்ளோஸ்அப் ஷாட்களிலும் அந்த கதையின் அப்போதைய மனநிலையை தன்னுள் ஏற்படும் மாற்றங்களை ஒரு சிறு பார்வையால், ஏளன புன்னகையால், தனது உடை, கூந்தல் அலங்காரம் என நூல் அளவு விலகாமல் அச்சஅசல் பிரதிபலிக்கிறார்.
விருப்பமே இன்றி சரியாக விளக்குகள் எறியாத சுவரின் வண்ணங்கள் பெரும்பாலும் உதிர்ந்த பழைய கட்டிடத்தின் சிறு அறைக்கு செல்லும் படிகளைஒட்டிய சுவர்களில் தெரியும் வித்தியாச மனதை கவரும் ஓவியங்களை கண்டவுடன் அதுவரை சிறு தயக்கத்தோடே அங்கு செல்லும் பார்வதி அதுவரை இருந்த அவரது முகம் நடை என ஒரு ஓவியத்தில் அவரிடம் ஏற்படும் மாற்றம். இது போன்று நமது அன்றாட வாழ்வில் நாம் கவனிக்க தவறிய சிறு சிறு சந்தோசங்களும், சகமனிதனை பரவசபடுத்த நாம் செலவழிக்காத மிக சில நிமிடங்களின் மிக சுவாரசிய தொகுப்பே இந்த திரைப்படம்.
இந்த கதையின் பாத்திரங்களின் மூலம் நமக்குள் ஏற்படும் எந்த மாற்றங்களையும் ஒரு ஷாக்சோபோன், ஒரு வயலின், ஒரு புல்லாங்குழல் என சாதராண இசை மூலம் பரவசநிலைக்கே கொண்டு செல்லும் கதையை ஒட்டிய எளிமை இசை & ஒளிப்பதிவு இப்படத்திற்கான ஆகச்சிறந்த பலம்
No comments:
Post a Comment