TAGLINE: 8 years ago, Alex's wife was MURDERED. Today... She e-mailed him.
இப்படத்தின் தலைப்பை போலவே படத்தின் போக்கை யூகிக்கா வகையில் கடைசி ஷாட் வரை பயணிக்கிறது. இதுபோன்ற படங்கள் சிலவற்றை முன்பே பார்த்திருபோம். இந்த படத்திற்கான சிறப்பு நடந்த அந்த சம்பவத்திற்கு யார் காரணமென நாம் சந்தேகிக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் அதற்கான முடிச்சை அவிழ்க்க ஆரமித்த சில காட்சிகளிலே... "இவர் இருக்காது," "இதுவா இருக்காதுனு" அந்த பட்டியலில் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும். ஆனால் இந்தக்கதையில் அந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருமே ஒழிய குறைய வாய்ப்பில்லாத வகையில் அமையப்பெற்ற கனகட்ச்சித திரைக்கதை.
பெரும் புரிதலுடன் வாழும் தம்பதிகளின் வாழ்வில் நடைபெறும் ஒரு சம்பவத்தில் மனைவி மரணமடைகிறார். அவளது உடலை காவல்துறையில் பணிபுரியும் அவளது தந்தையே அடையாளம் காட்ட சம்பரதாயங்களுடன் எரியூட்டப்படுகிறது. கணவன் சில நாட்கள் கோமா நிலைக்கு சென்று திரும்புகிறான். அதற்கு எட்டு வருடங்களுக்கு பின் நகரும் கதையில் அவனது இறந்த மனைவியின் தாயாரே அவனை வேறு திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்துகிறார். இந்த நிலையில் தனது மனைவியின் மெயில் ஐடி யில் இருந்து அவனுக்கு ஒரு மெயில் வருகிறது. "யார் அனுப்பியது?..." என கணவன் குழப்பமடைகிறார். இதே சமயத்தில் இந்த தம்பதியரின் விபத்து நடந்த அதே பகுதியில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்படுகிறது. இறந்த இவனது மனைவியின் மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்காமல் நிலுவையில் உள்ள வழக்கும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது.
சிறப்பு அதிகாரி பெரும் சிரமத்தில் சேகரிக்கும் தகவல்கள் அனைத்தும் அவளது கணவராக குழந்தைகள் நல மருத்துவராக இருக்கும் நாயகனுக்கு எதிராகவே இருக்கிறது. ஆதலால் அவரை கைது செய்ய முற்படுகையில் தப்பித்து தலைமறைவாகிறார். சிறப்பு அதிகாரியோ இவரை இந்த வழக்கில் சிக்கவைக்க இவருக்கு நெருங்கிய வட்டாரத்திலே உள்ளவரே செயல்படுவதாக நம்புகிறார்.
திடீர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட தனது மகனை நாயகனே மருத்துவம் பார்க்க வேண்டுமென மருத்துவமனையில் சண்டையிட்டு பின் அவரது நட்பு வட்டத்திற்குள் வரும் அந்த குழந்தையின் தந்தையிடம் காவல்துறையிடம் தப்பித்த நாயகன் அடைக்களம் அடைகிறான். அவரது உதவியால் தனது மனைவியை பற்றி சில தகவல்கள் கிடைக்கும் நிலையில் அவளை பற்றிய தகவல் தெரிந்த நபர்களை ஒரு கும்பல் அவள் இருக்கும் இடம் கேட்டு சித்ரவதை செய்து கொலையும் செய்கிறது. காவல் துறை, ஒரு கொலைவழக்கு மேலும் மேலும் தங்கள் கண்முன்னே பெரும் சிக்கலாகிகொண்டே செல்வதில் நிலைதடுமாறி நிற்கிறது. அதன் பின் அவர்களது அடுத்த திட்டமும், நாயகன் காதலுடன் மனைவியின் தேடலும்..
இது போன்ற திர்ல்லர் வகையறா படங்களுக்கு என ஒலிக்கும் பெரும் சப்தங்கள் ஏதுமின்றி வரும் மெல்லிய இசையின் ஊடே இப்படத்தை காணும் அனுபவம் சுகம். காவல்துறையிடம் தப்பிக்கும் ஓரே சேசிங் காட்சியே இருந்தாலும், மெதுவாக அதேசமயம் சீரான வேகத்தில் நகரும் திரைக்கதையே இப்படத்திற்கு பெரும்பலம்.
மேலே குறிப்பிட்ட பாத்திரங்களில் ஒருவரே நடந்த சம்பவங்களுக்கு காரணகர்த்தா படத்தை முன் பார்க்காதவர்கள் யாராக இருக்குமென முடிந்தால் முயற்சித்து பாருங்கள். :-)
படத்திற்கான ட்ரைலர்:
https://www.youtube.com/watch?v=ryMVzQsTmZY