Mohan Prabu Movie Recommentations பார்த்ததில் மிகவும் ரசித்தது

Wednesday, July 5, 2017







பார்த்ததில் மிகவும் ரசித்தது : 081.

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு மிகஅருகில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த சர்ப்ஜித்சிங். இவர் 9௦களில் தோட்ட வேலைக்கு சென்ற இடத்தில் மாயமாகிறார். பின் ஓராண்டு கழித்து அவரிடமிருந்து வரும் கடிதம் BHIKHIWIND எனும் அந்த கிராமத்தை மட்டுமின்றி அம்மாநிலத்தையே உலுக்கியது.
பாகிஸ்தான் மாநில எல்லையை அத்துமீறி நுழைந்தது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாதது கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம். அது மட்டுமின்றி தனது பெயரை மஞ்சித்சிங் என கூற வலியுறுத்துவதாகவும் (199௦களில் பாகிஸ்தானில் நடைபெற்ற பல வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவன்) இந்த விஷயங்கள் மட்டுமே இந்த நிகழ்வுகள் திரைப்படமாக மாற காரணமன்று.


அதன் பின் அவரது தங்கை தனது 23 ஆண்டுகள் தொடர் போராட்டங்களால் தமது குடும்பத்தை இழக்கும் சூழலிலும் நமது மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து சர்ப்ஜித்யை நமது நாட்டுக்கே திரும்பி வர செய்த முயற்சிகளே...
சர்பஜித்தாக ONCE UPON A TIME IN MUMBAI, MANSOON WEDDING, HIGHWAY படங்களில் நம்மை ஈர்த்த ரந்தீப் ஹூடா. அந்த பாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட இவரின் ஆத்மார்த்த உழைப்பு, சில நிமிடங்களே வரும் பாகிஸ்தான் சிறைச்சாலை சித்ரவதை கூடம் காட்சிகளுக்காக ஹூடா எடுத்துக்கொண்ட உழைப்பை விட அதற்காக காத்திருந்த தயாரிப்பு தரப்பை நிச்சயம் மெச்சி கொள்ளலாம்.


ஹூடா வின் மனைவி பாத்திரத்தில் தனது சிறு சபலத்தால் தனது வாழ்வே திசைமாறி சென்ற ரோலை அனாயசமாக செய்த கடந்த வருடம் மிகபெரும் வரவேற்ப்பை பெற்ற MASAAN பட நாயகி. எவ்வளவு கனமான கதையை இவரது தலையில் வைத்தாலும் வெறும் இறுக்கமான முகபாவனைகளை கொண்டே நம்மை ஈர்க்கும் வல்லமை.


இவர்கள் அனைவரின் பங்களிப்பை விட ஹூடாவின் தங்கையாக, இத்தனை ஆண்டு காலம் அந்த கண்களில் காதல் மற்றும் பிரிவின் சோகம் தவிர வேறு உணர்ச்சிகளே கண்டிராத நமக்கு முதன்முறையாக அந்த கண்கள் மனோதைரியத்தையும், போராட்ட குணத்தையும், தனது சகோதரனை அவனது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்படும் துயரங்களும், சிறையில் இருவது ஆண்டுகளுக்கு பின் தனது குழந்தையாகவே பாவிக்கும் தனது அண்ணனை சந்திக்கும் கணங்களில் என படம் நெடுக முதல் முறை திரையில் இந்த கண்கள் மட்டுமின்றி அதன் உரிமையாளர் (ஐஸ்வர்யா ராய்) பெண்ணின் பங்களிப்பு அபாரம்.


நமக்கு அறிவு சார் படங்கள் மேல் எப்பொழுதும் பெரும் ஈர்ப்பு இருந்தாலும், இது போன்ற மனம் சார் படங்களை என்றும் நம்மால் ஒதுக்கவே முடியாது என்பதற்கு ஹூடாவை அவனது குடும்பத்தார் சிறைச்சாலையில் சந்திக்கும் காட்சி மட்டுமே போதுமானது.


மேரி கோம் படத்தில் நூலிலையில் தவறவிட்ட காரணிகளை களைந்து இம்முறை அழுந்த தடம் பதித்துள்ளார் இயக்குனர் ஓமுங்குமார். இவர் மற்றும் நாயகன் ஹூடாவின் அர்ப்பணிப்புக்கு அடுத்த தேசிய விருது பட்டியலில் நிச்சய சிறிய ஆறுதலேனும் இருக்கும்.

https://www.youtube.com/watch?v=OppDLt2BKAE

Saturday, July 1, 2017





பார்த்ததில் மிகவும் ரசித்தது :114.

த்ரில்லர் கதைக்கான அடிப்படை சூத்திரமே அதன் பரபரப்பான திரைக்கதை. அதிவேக சேஸிங் காட்சிகள். ஆயுதங்களின் பெரும் இரைச்சல். குறிப்பாக ஒரே இடத்தில் நில்லாமல் அனைத்திலும் வேகமாக சுழலும் கேமரா. அதற்கேற்ற எடிட்டிங். 


ஆனால், மிக நிதானமாக நின்று பயணிக்கும் ஒரு திரைக்கதையில், மிகயதார்த்தமான ஒரு மெலோ டிராமாவில், சேஸிங், ஆயுதங்கள் ஒலி எதுவுமே கேட்க்காத ஒரு கதையில், துவக்கம் முதல் இறுதிக்கு முந்திய காட்சிவரை வரை நூலிழை அளவு மட்டுமே தெரியும் பெரும் திர்ல்லருக்கு உண்டான அறிகுறிகள். மிகஅடக்கமாக இறுதிகாட்சி வரை எந்தவித ஆர்ப்பாட்டமும் மின்னல்வேக சுழலும் காமெராக்கள் மற்றும் சேஸிங்கும் இல்லாமல் கொண்டுவந்து இறுதிகாட்சியுடன் இணைத்தது. மேலும் இக்கதைக்கு பீரியட் (193௦)யை கதைகளமாக பயன்படுத்தியது என இப்படம் பார்வையாளனுக்கு நிச்சயம் ஒரு புதுவித அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. 


இங்கு கொரியாவில் இருந்து ஜப்பானில் பெரும் செல்வந்தர் வீட்டிற்கு வேலைக்கு செல்லும் #பணிப்பெண்_HANDMAIDEN பிரதான பாத்திரம். இங்கு வரும்பொழுதே அவள் அங்கு ரகசியமாக செய்ய வேண்டிய பணிகளுக்கு ஒப்புக்கொண்டே வருகிறார். ஊருக்கு சற்று தள்ளி அமைந்துள்ள அந்த பெரும் மாளிகையினுள் SOKEE எனும் அப்பனிப்பெண்னுடனே நுழைகிறது அந்த நூலிழை அளவு திர்ல்லிங்கும். எந்த இடத்திலும் அந்த நூல் முடிச்சிட்டு பார்வையாளரை குழப்பாமலும். அதே நேரம் அங்கு நம்மால் இனம் கண்டுகொள்ளப்படாத ஏதோ ஓர் நிகழ்வு நடந்துவருவதை ஹாரர் கதைகளை போல ஒலி மூலம் நமக்கு உணர்த்தாமல். யதார்த்த காட்சி அமைப்பின் மூலமே உணரச்செய்யும் உருவாக்கல் அசாத்தியம். 


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நம் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு பணத்தை பிரதானமாக கொண்டு நடைபெறும் விதங்களில் ஒன்றை எவ்வாறு யுத்தம் செய் வெளிச்சமிட்டு காட்டியது. அதனினும் பலமடங்கு முதிர்ச்சி பெற்றவராலும் யூகிக்க இயலா வகையில் அங்கு நடைபெறும் சம்பவ(ம்)ங்கள் நமக்கு மிகபெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. திட்டத்துடன் நுழையும் அந்த பெண்ணின் பாத்திரம் வழக்கமான வெகுளியாக சித்தரிக்கப்பட்டாலும், அவளின் பிடிவாதமும்,          விடாமுயற்சியுமே இக்கதையை வெறும் முடிவுக்கு கொண்டுவராமல் சுபமாக முடிவுற செய்கிறது.


இப்படத்தின் இயக்கம் CHAN_WOOK_PARK. இவர் OLDBOY படத்தின் திரைக்கதை இயற்றியவர். SYMPATHY FOR MR. VENGEANCE, LADY VENGEANCE, THIRST படங்களின் இயக்குனர். கதையின் போக்கில் காட்டப்படும் காட்சிகளுக்கும் அது செல்லும் முடிவும் உண்மையல்ல என்று சால்ஜாப்பு காட்சிகளின் மூலம் ஒப்பேற்றிவிடாமல் அதற்க்கு தரப்பட்ட டீடைலிங்க் இந்த மேதையின் திரைக்கதைக்கான மிகபெரும் சான்று. “SARAH WATERSன் “FINGERSMITH” நாவலை அடிப்படையாக கொண்டே இக்கதை உருவாக்கப்பட்டாலும் இவரை விட யாராலும் இதன் மூலம் கெடாமல் அதை மேலும் சிறப்பிக்கும்படி உருவாக்க முடியாது என இந்நூலின் ஆசிரியர் கூறியதே இவருக்கான மிகப்பெரும் சான்று.

TRAILER LINK: உங்களுக்கு தில் இருந்தா இந்த ட்ரைலர் மட்டும் பார்த்திட்டு படத்தை பார்க்காமல் இருக்கவும்.

https://www.youtube.com/watch?v=IkvHtfRAKNk 

இதில் அதிர்ச்சியளிக்கும் பல சம்பவங்களும், நாம் அறிந்திடாத பல பாத்திரபடைப்புக்களும் நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.

Friday, June 9, 2017






பார்த்ததில் மிகவும் ரசித்தது :113.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்கள் பெரும்பாலும் அந்த சம்பவத்திற்கு முன்பும் பின்பும் அதற்க்கு காரணமானவர்களை சுற்றியே சுழலும். ஆனால் இக்கதை அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை அதற்கு மிக நெருக்கமாக அச்சு அசல் கொடுத்த வகையில் கவணிக்க வேண்டிய திரைப்படமாகிறது.


பாரத பிரதமர் அன்னை இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் 31 OCT 1984 அன்று தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டது. மேலும் கொன்ற பாதுகாவலர் சீக்கியர் என்ற ஒரே காரணத்திற்க்காக அவரது மரணத்திற்கு பின்னே சீக்கியர்கள் தேசமெங்கும் குறிவைத்து வேட்டையாடப்பட்டனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. பாலிவுட்காரர்களுக்கு மிகவிருப்பபான இந்த களத்தை கையில் எடுத்தது பஞ்சாபியர். ஆனால் ஹிந்தி படங்களுக்கு இணையான பிரமாண்டத்தை காட்சிகளில் கொண்டுவரவில்லை எனினும், அதற்க்கு கொஞ்சமும் சளைத்ததல்ல இவர்களது திரைக்கதையும் அதற்க்கு உண்மையான காட்சிகளும். பஞ்சாபி சினிமா நமக்கு பரிச்சயமில்லாததால் அவர்களை பற்றி...


193௦களின் துவக்கத்திலே அவர்களது முதல் படம் வெளிவந்துள்ளது. நமது சுதந்திரத்திற்கு பின்னான இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் அவர் மாநிலத்தின் சரிபாதிக்கு மேல் பாகிஸ்தான் வசம் சென்றதால் பெரிதும் தோய்வுற்றது இத்துறை. அதற்க்கு பின் 2000வரை ஆண்டுதோறும் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலே அவர்கள் படம் வெளிவந்து கொண்டிருந்தது. தேசமெங்கும் இளைஞர்களின் புதிய அலை சினிமா முயற்சியில் அவர்கள் மாநில சினிமாத்துறையும் புத்துயிர் பெற்றுள்ளது. தற்போது ஆண்டுக்கு  கிட்டத்தட்ட நாற்பது படங்களுக்கு மேல் வெளிவருகிறது. இப்படம் 2௦15ல் வெளிவந்து மிகப்பெரும் வெற்றிபெற்றதுடன், பல்வேறு விருதுகளையும் பெற்றது. இன்றும் இப்படத்தை பஞ்சாபி சினிமாதுறையினர் தங்களின் கௌரவமாகவே கருதுகின்றனர். அப்படி இந்த படத்தில் ஒளிந்துள்ள சமாச்சாரங்களை பற்றி...


முதலில் இப்படத்திற்கான கதை எழுதி தயாரித்திருப்பவர் HARRYSACH DEVA பஞ்சாபியான இவர். சிறு வயதில் தான் பார்த்து அனுபவித்த சம்பவங்களையே கதையாக அமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் SHIVAJI LOTAN PATEL மராத்தி சினிமாவின் மிகமுக்கிய இயக்குனர். கடந்த வருடம் தேசிய விருது பட்டியலில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த சிறார் சினிமா விருதுகளை பெற்ற DHANG திரைப்படத்தின் இயக்குனர். RAMANI RANJAN DASS PK, 3 IDIOTS, MUNNABHAI படங்களின் CINEMATOGRAPHER. PARVEZKHAN இவர் RA-ONE, KAI PO CHE, DEV D, VISWAROOPAM படங்களுக்கு சண்டை பயிற்சி செய்தவர். மேலோட்டமாக இயக்குனரை தெரிந்து கொள்ள பார்த்தால் பெரும்பாலான தொழில் நுட்ப கலைஞர்கள் நமக்கு பரிச்சயமான மற்றும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர்களே.


படத்தின் முதல் சில நிமிடங்களிலே இந்திராஅம்மையாரின் படுகொலை நிகழ்ந்து விடுகிறது. அதற்க்கு முன் கதையில் மிகச்சில காட்சிகளில் தோன்றிய பாத்திரங்களை கொண்டே ஒரு மிகப்பெரும் கலவர நிகழ்வின் வீரியத்தை பயத்தை பார்வையார்களுக்கு கடத்திய உருவாக்கல் இப்படத்திற்கு மிகப்பெரும் பலம். பொதுவாக இது போன்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதைகளில், அந்த சம்பவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதற்கான காரணங்களை அலசுவதிலோ காட்சிபடுத்தலிலோ இருப்பதில்லை.


மாறாக இக்கதை நம்முடனே பணிபுரியும் மற்றும் அருகில் வசிப்போரை ஒரே நிமிடத்தில் வெறுக்க கொலை செய்யும் அளவு துணிய அம்மையாரின் படுகொலையை முன்வைத்தாலும் தேசம் முழுக்க பரவிய இந்த காட்டுதீ எரிய துவங்குமிடமாக இவர்கள் வைத்த அந்த மூன்று காட்சிகளே போதும் இக்கதையை முழுமைக்கும் ரசிக்க. மூன்று நாட்கள் நீடித்த இந்த கலவரத்தில் 2146 பேர் டெல்லியில், மொத்தமாக 9000 நபர்கள் தேசம் முழுக்க வீதிகளில் எரித்தும், அடித்தும் கொல்லப்பட்டனர். இந்த பெரும் கலவரத்திற்கு காரணமானவர்கள் என ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படாதே இதில் மிகபெரும் வேதனையாக கருதப்படுகிறது.
இந்த கலவரத்தில் ஒரு சீக்கிய குடும்பம் இரு குழந்தைகளுடன் எவ்வாறு தப்பி பிழைத்தார்கள் என்பது மட்டுமே கதை. ஆனால் பார்வையாளர்கள் அனைவரையும் அவர்களுடனே ஒளிந்து, பயந்து படபடக்க செய்தது மட்டுமின்றி அவர்களுடனே டெல்லிநகர் முழுக்க அந்த ஒரு நாளில் நடந்த அத்துணை கொடூரங்களையும் நம்மையும் உணரசெய்ததே  இக்கதைக்கான மிகப்பெரும் வெற்றி.

இப்படத்திற்கான ட்ரைலர் லிங்க்:

https://www.youtube.com/watch?v=9yuGao8d4nU

Monday, May 29, 2017



பார்த்ததில் மிகவும் ரசித்தது : 112.

அரிதாகி வரும் உயிரினங்களை போன்று நம்மால் பெரிதாக சிந்திக்க நேரம் இல்லாத அல்லது சிந்திக்க விரும்பாத வயதானவர்களின் உலதத்தை அவர்களின் வாழ்க்கை சூழலை எந்தவித வண்ண சாயங்களும் கொண்டு நிரப்பாமல் ஒரே பாத்திரத்தின் மூலம் அச்சு அசல் காட்டிய வகையில் பெரிதும் கவனம் ஈர்க்க செய்யும் அற்புத காவியம்.


இப்படம் மற்ற மொழிகளை காட்டிலும் (தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு) நாம் பெரிதும் கவனம் செலுத்தாத கன்னட சினிமாவிலிருந்து வந்தது (எனக்கு) மிகப்பெரும் ஆச்சர்யம்.
அவசர உலகத்தில் தனது யூஎஸ் கனவை எட்டிபிடிக்க பயணிக்கும் தாயை இழந்த நாயகன். தனது வயதான ஞாபகமறதி குறைபாடுடைய தந்தையை மருத்துவமனையில் சேர்த்து பராமரிக்கிறார். அவரது யூஎஸ் கனவு நனவாகவும் மிகமுக்கிய ப்ராஜெக்ட் சமயத்தில் வெளியே அழைத்து சென்று திரும்பும் வழியில் தனது தந்தையை தொலைக்கிறார்.  

  

  
இதுவரை மனதில் தான் உருவகப்படுத்தி வைத்திருந்த தந்தைக்கும், தற்பொழுது அவரின் நண்பர்கள், உறவினர்கள் என தொலைந்தவரை தேடி அலையும் சமயங்களில் அவர்கள் தரும் தகவல்கள் மூலம் தான் அறியும் அவரின் பண்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, அவரை மீட்டு தன்னுடனே வைத்துகொள்ளும் வழக்கமான கதைதான். அனால் அதில் அவரின் கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாட்டை பார்வையாளர்களுக்கும் அச்சு அசல் உணர்த்திய வகையில் இப்படம் கவனிக்க படவேண்டிய பட வரிசையில் சேர்கிறது.


இக்கதைக்கான அச்சாணியாக திகழ்பவர் தந்தை பாத்திரத்தில் வாழ்ந்து காட்டிய ANANT RAG ஆவார். உலகின் எந்த சிறிய துறையிலும் மிகப்பெரும் வல்லுனர்கள் (கலைஞர்கள்) நிச்சயம் இருப்பர் என்பதை உணர்த்தியவர். கேன்சர் மூலம் தனது மனைவியை இழந்து ஞாபகம் தப்பி ஒரு வார தாடி, சரியாக வாரப்படாத தலை, கொஞ்சம் தொல தொல முழுக்கை சட்டையில் ஒரு சராசரி குடும்ப தலைவனுக்கான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியுள்ளார்.


தனது ப்ராஜெக்டுக்காக மும்பை செல்லும் அவசரத்தில், வழியில் தனது தந்தைக்கு தேவையானவற்றை வாங்கி தர அழைத்துசெல்லும் மகன் சிலபல அபீசியல் தொலைபேசி அழைப்புகளுக்கு பின் தந்தையின் பக்கம் கூட திரும்பாமல், 

“நம்ம இப்ப உங்களுக்கு கொஞ்சம் துணி வாங்க போயிட்டு இருக்கோம்.” 

“எனக்கு எதுக்கு?… “அம்மாக்கு தான் கொஞ்சம் புடவைங்க வாங்கனும்னு (சில வருடங்களுக்கு முன் தனது மனைவி இறந்தது நினைவில்லாமல்) சொல்றது. குறிப்பா இதன் பின் வரும் வசனங்களில் தன் மனைவியின் நிலையை தனது மகன் மூலமாகவே அறிந்து கொள்ளும் காட்சிகளில் அசரடித்து விடுவார்.


பின் மருத்துவமனையில் தனக்கும் தனது மனைவிக்குமான கல்லூரி காதல் கதையை மிக இயல்பாக ஒரே ஷாட்டில் விவரிக்கும் இடம் ஒன்று போதும். இந்திய அளவில் இந்த காட்சியை இதே தரத்தில் செய்ய தற்பொழுது ஒரு பத்து நடிகர்கள் மிஞ்சினால் அதிகம்.


அடுத்து நாயகன் மற்றும் நாயகி பாத்திரங்கள் பெரும்பான்மையான காட்சிகளில் படம் முழுக்க வரும் பாத்திரங்கள் இவர்களே. முழு கதையும் அப்பா பாத்திரத்தை சுற்றியே சுழலும் வகையில் அமைய பெற்றிருப்பதால் இவர்களுக்கு தனிப்பட்ட எந்த பெரிய ஷாட்ஸ் இல்லாத போதும் அனைத்து குட்டி குட்டி காட்சிகளிலும் அழகாக ஈர்க்கும் நாயகி. மிகசொர்ப்பமாக கல்லூரி காலம் முதல் தான் “தம்” அடிக்கும் கடைகாரர் மூலம் தனது தந்தையும் “தம்” அடிப்பதை அறிந்து ஆச்சர்யப்படுமிடம், தனக்காக தனது தந்தை கிட்னி தானம் அளித்துள்ளதை அறிந்து கொள்ளுமிடம் என சில இடங்களில் மிளிர்கிறார்.


இது போக ஆச்சர்யபடுத்தும் வில்லன் பாத்திரம். தமிழில் பெரிய நாயகர்களுக்கே எதிரான கனமான பாத்திரங்கள் கூட செய்ய தகுதியான உடல்மொழி அமையப்பெற்றிருப்பவர். பின்னணி இசையும் பாடல்களும் நிச்சயம் அனைத்து பார்வையாளர்களையும் ஆச்சர்யப்படுத்தும்.


பெரிய குறையாக இல்லாவிடினும் லேசா இது மாற்றிருக்கலாம் என தோன்றும் சமாச்சாரங்கள் மிகசில இடங்களில் நாயகனும், இளம் தென்றலை போன்ற கதையில் புகுத்தப்பட்ட க்ரைம் சமாச்சாரங்கள் மட்டுமே. ஆனால் வழிய புகுத்தியது போன்றில்லாமல் க்ரைம், கதையுடன் பயணிக்கும் படி அமைக்கபெற்ற உருவாக்கல் நன்று. இந்த இயக்குனரின் படங்களை தேடிபிடித்து பார்க்கும் ஆவல் நமக்கு தோன்ற வைத்ததே அவருக்கான மிகப்பெரும் வெற்றி.

Monday, May 22, 2017




பூர்ணா மலாவத், நிசாமாபாத் மாவட்டம், தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர்தான் மிக இளம்வயதில் (13 வயதில்) மவுண்ட் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண். 25 மே 2014 வருடம் இந்த சாதனையை புரிந்தார். இவரது சாதனை மட்டுமின்றி இந்த 13 வருட வாழ்வில் மிக முக்கிய தருணங்களை கோர்வையாக பூச்சரம் போல் மிக அழகாக பதிவு செய்த வகையில் மிக முக்கிய சினிமா.  

     
இது போன்ற பயோகிராப்பிக் வகையறா கதைகள் பொதுவாக மிகபெரிய வெற்றியையோ, ரசிகனுக்கு பூர்ண திருப்தியை தராததற்கு முக்கிய காரணம். எந்த மிகபெரும் திருப்பங்களும், மயிர் கூச்சொறியும் சமாச்சாரங்கள் அவர்கள் வாழ்வினுள் இருந்தாலும் பார்வையாளன் பெரும்பாலானோர் அந்த நபரை பற்றியும், அவரது சாதனைகளை பற்றியும், ஏதோ ஒரு வகையில் துளியேனும் அறிந்துவைத்திருப்பதே அந்த சுவாரசிய குறைவுக்கு காரணம்.



அனால் இப்படத்தை பொறுத்தவரை பதிமூன்று வயதில் பெண்பிள்ளை இமயமலை அடைந்தது மிகபெரும் சாதனையாக நாமே நினைப்பதும், மலையேற்றம் பற்றிய கதைகள் இந்திய சினிமாவிற்கு அவ்வளவு பரிட்சயம் இல்லாததும். அதற்கான உண்மையான வழிமுறைகள், சட்டதிட்டங்கள், அராசாங்கத்தின் பங்கு என நூறு சதவீகித டீடைலிங்கை, அந்த குழந்தையின் தெளிந்த நீரோடை போன்ற வாழ்கையில் துளி கலங்களும் ஏற்படுத்தாமல் கலக்கும் படிஅமைத்த திரைக்கதை.  எந்த இடத்திலும் பார்வையாளனுக்கு CLIFF HANGER, VERTICAL LIMIT போன்ற சாகசங்களை ஏற்படுத்தாது. அனால் பூரண திருப்தியையும், மனமகிழ்வையும் தரும் என்பதில் ஐயமில்லை.


RAGUL BOSE (விஸ்வரூபத்தில் ஓமர் பாத்திரத்தில் நம்மை மிரட்டியவர்). இப்படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளது இந்த படத்திற்கு மேலும் சிறப்பு. இவர் வெறுமனே கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி டப்பாவை நிரப்பிகொள்ளும் சராசரி நடிகனல்ல. தான் ஏற்கும் பாத்திரங்களுக்கு மிகநேர்மையாக தனது பங்களிப்பை செய்ய கூடியவர். பெங்கால் மொழி படங்கள், ஆங்கில மேடை நாடகங்கள், சமூக சார்ந்த பல விடயங்களிலும் தனது பவுண்டேசன் மூலமாக பலவகைகளில் இயங்கிவருபவர்.

அதற்காக 2008 ல் IBN-ன் EMINENT CITIZEN JOURNALIST, 

2009 ல் YOUTH ICON AWARD FOR SOCIAL JUSTICE AND WELFARE,

2010  ல் GREEN GLOBE FOUNDATION AWARD for EXTRAORDINARY WORK BY A PUBLIC FIGURE, 

2012 ல்  Lt. GOVERNOR’S COMMENDATION AWARD FOR SERVICE TO ANDAMAN & NICOBAR ISLANDS. போன்ற விருதுகள் மட்டுமின்றி, 

1998ல் முதன்முதலாக INDIAN NATIONAL RUGBY TEAM TO PLAY IN AN INTERNATIONAL EVENT & THE ASIAN RUGBY FOOTBALL UNION CHAMPIONSHIP
இதன் இரண்டு வரலாற்று நிகழ்வுகளிலும் பங்குபெற்ற ஒரே வீரர். (பொதுவாக எந்த கலைஞனின் தனிப்பட்ட விசயங்களின் மேல் எனக்கு ஆர்வம் இருந்ததோ, அவ்வாறு தெரிந்த விசயங்களை பகிர்ந்ததோ கிடையாது. இவரை பிடிக்கும் என்பதை தாண்டி சமூகவிஷயங்களில் அவரது ஈடுபாடும், அவர் பெற்ற விருதுகளும் என்னை போலவே தங்களையும் ஆச்சர்யபடுத்தும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.)


நிஜ பூர்ணா மலாவத் இன்றும் வசிக்கும் அதே கிராமத்தில், அவள் ஆடு மேய்த்து கொன்றிருக்கும் வெளிகளில், இன்றும் +2 அவள் படித்து கொண்டிருக்கும் பள்ளிகளில் இப்படத்தின் பெரும் பகுதிகள் படமாக்கப்பட்டுள்ளது. இது ரசிகனை மேலும் கதையினுள் ஈர்த்துகொள்ள கடந்த பத்து ஆண்டுகளில் அனைத்து இந்திய சினிமாக்களிலும் பயன்படுத்தப்படும் யுக்தி. இதிலும் எடிட்டிங், கேமரா என அனைத்து தொழில் நுட்பங்களிலும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு பார்வையாளனுக்கு மனதிற்கு அருகில் உணரசெய்துள்ளது.


வெறும் எவரெஸ்ட் மலையேற விரும்பும் அனைவரையும் அனுமதிக்கும் விசயமல்ல. அதற்கென தனியாக ஒரே துறையே செயல்படுவதும். எந்த மாநிலத்தவர் பங்குபெற அதற்கான தகுதியுடன்  சென்றாலும், அம்மாநில முதல்வரின் தனிப்பட்ட ஒப்புதல் கடிதம்  மற்றும் அந்த நபரின் குடும்பத்தாரின் ஒப்புதல் கடிதம் பெற்றபின்னே அனுமதிக்கப்படுவர். டார்ஜிலிங்கில் இதற்கான ஒரு மாத பயிற்சி. மலையேறும் ஒவ்வொரு 45 பவுண்ட் எடையுள்ள உபகரணங்கள் கூடவே சுமந்து செல்லவேண்டும். அதற்காக அந்த ஒரு மாத பயிற்சி நேரம் முழுவதும் அதே எடையுள்ள உபகரணங்களை சுமந்தே இருக்க வேண்டும். செல்பவர் எந்த மாநிலத்தவராக இருப்பினும் ஒவ்வொருவரும் ருபாய் 34 லட்சத்திற்கான காசோலையை இந்த துறைக்கு செலுத்திய பின்னே அனுமதிக்கப்படுவர். விபத்து, பணி சரிவு என ஏதேனும் ஒரு வகையில் செல்பவர் மரணமடைந்தால் அவர்களது உடல் கண்டிப்பாக அவர்கள் குடும்பத்திற்கோ, அவர்களது மாநில அரசாங்கத்திற்கோ ஒப்படைக்க படமாட்டாது. வெளிநாட்டவராயினும் இதே விதிமுறையே. இப்படி படம் முழுக்க நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயங்கள் கொட்டிகிடக்கும் தகவல் கருவூலம் இப்படம்.  




ராகுல் போஸ் அனைத்து பாத்திரங்களுக்கும் தேர்வு செய்த நடிகர்களும், மற்றும் அவர்களிடத்தில் இவர் வெளிகொண்டு வந்த OUT PUT ம் அந்த நடிகர்களின் மற்ற படங்களை வைத்து ஒப்பீடு செய்து பார்த்தால் இயக்குனராகவும் இவரின் மேல் நமக்கு மிகபெரும் மதிப்பு உண்டாகும் என்பதில் மாற்று கருத்தில்லை.   

Search This Blog