பார்த்ததில் மிகவும் ரசித்தது : 081.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு மிகஅருகில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த சர்ப்ஜித்சிங். இவர் 9௦களில் தோட்ட வேலைக்கு சென்ற இடத்தில் மாயமாகிறார். பின் ஓராண்டு கழித்து அவரிடமிருந்து வரும் கடிதம் BHIKHIWIND எனும் அந்த கிராமத்தை மட்டுமின்றி அம்மாநிலத்தையே உலுக்கியது.
பாகிஸ்தான் மாநில எல்லையை அத்துமீறி நுழைந்தது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாதது கைது செய்தது பாகிஸ்தான் ராணுவம். அது மட்டுமின்றி தனது பெயரை மஞ்சித்சிங் என கூற வலியுறுத்துவதாகவும் (199௦களில் பாகிஸ்தானில் நடைபெற்ற பல வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடையவன்) இந்த விஷயங்கள் மட்டுமே இந்த நிகழ்வுகள் திரைப்படமாக மாற காரணமன்று.
அதன் பின் அவரது தங்கை தனது 23 ஆண்டுகள் தொடர் போராட்டங்களால் தமது குடும்பத்தை இழக்கும் சூழலிலும் நமது மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து சர்ப்ஜித்யை நமது நாட்டுக்கே திரும்பி வர செய்த முயற்சிகளே...
சர்பஜித்தாக ONCE UPON A TIME IN MUMBAI, MANSOON WEDDING, HIGHWAY படங்களில் நம்மை ஈர்த்த ரந்தீப் ஹூடா. அந்த பாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட இவரின் ஆத்மார்த்த உழைப்பு, சில நிமிடங்களே வரும் பாகிஸ்தான் சிறைச்சாலை சித்ரவதை கூடம் காட்சிகளுக்காக ஹூடா எடுத்துக்கொண்ட உழைப்பை விட அதற்காக காத்திருந்த தயாரிப்பு தரப்பை நிச்சயம் மெச்சி கொள்ளலாம்.
ஹூடா வின் மனைவி பாத்திரத்தில் தனது சிறு சபலத்தால் தனது வாழ்வே திசைமாறி சென்ற ரோலை அனாயசமாக செய்த கடந்த வருடம் மிகபெரும் வரவேற்ப்பை பெற்ற MASAAN பட நாயகி. எவ்வளவு கனமான கதையை இவரது தலையில் வைத்தாலும் வெறும் இறுக்கமான முகபாவனைகளை கொண்டே நம்மை ஈர்க்கும் வல்லமை.
இவர்கள் அனைவரின் பங்களிப்பை விட ஹூடாவின் தங்கையாக, இத்தனை ஆண்டு காலம் அந்த கண்களில் காதல் மற்றும் பிரிவின் சோகம் தவிர வேறு உணர்ச்சிகளே கண்டிராத நமக்கு முதன்முறையாக அந்த கண்கள் மனோதைரியத்தையும், போராட்ட குணத்தையும், தனது சகோதரனை அவனது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்படும் துயரங்களும், சிறையில் இருவது ஆண்டுகளுக்கு பின் தனது குழந்தையாகவே பாவிக்கும் தனது அண்ணனை சந்திக்கும் கணங்களில் என படம் நெடுக முதல் முறை திரையில் இந்த கண்கள் மட்டுமின்றி அதன் உரிமையாளர் (ஐஸ்வர்யா ராய்) பெண்ணின் பங்களிப்பு அபாரம்.
நமக்கு அறிவு சார் படங்கள் மேல் எப்பொழுதும் பெரும் ஈர்ப்பு இருந்தாலும், இது போன்ற மனம் சார் படங்களை என்றும் நம்மால் ஒதுக்கவே முடியாது என்பதற்கு ஹூடாவை அவனது குடும்பத்தார் சிறைச்சாலையில் சந்திக்கும் காட்சி மட்டுமே போதுமானது.
மேரி கோம் படத்தில் நூலிலையில் தவறவிட்ட காரணிகளை களைந்து இம்முறை அழுந்த தடம் பதித்துள்ளார் இயக்குனர் ஓமுங்குமார். இவர் மற்றும் நாயகன் ஹூடாவின் அர்ப்பணிப்புக்கு அடுத்த தேசிய விருது பட்டியலில் நிச்சய சிறிய ஆறுதலேனும் இருக்கும்.
https://www.youtube.com/watch?v=OppDLt2BKAE
No comments:
Post a Comment